பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல்டி. இமான்றெக்க

Kanna Kaattu Podhum Lyrics in Tamil

BGM

பெண் : கண்ண காட்டு போதும்…
நிழலாக கூட வாரேன்…
என்ன வேணும் கேளு….
குறையாம நானும் தாரேன்….
நச்சுனு காதல
கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர
நீ.. நீ…
நிச்சயமாகல
சம்மந்தம் போடல
அப்பவுமே உறவு
நீ… நீ…
அன்புல வித விதைச்சு
என்ன நீ பறிச்சாயே…..யே…

பெண் :கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்…
என்ன வேணும் கேளு….
குறையாம நானும் தாரேன்….
நச்சுனு காதல
கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர
நீ… நீ…
நிச்சயமாகல
சம்மந்தம் போடல
அப்பவுமே உறவு
நீ… நீ…
அன்புல வித விதைச்சு
என்ன நீ பறிச்சாயே…..யே…

BGM

பெண் : நெஞ்சுல பூ.. மழைய
சிந்துர உன் நெனப்பு
என்ன தூக்குதே…
எப்பவும் யோசனைய
முட்டுற உன் சிரிப்பு
குத்தி சாய்க்குதே….

பெண் : வக்கணையா நீயும் பேச…
நான் வாயடைச்சு போகுறேன்…
வெட்டவெளி பாத நானும்
உன் வீட்ட வந்து சேருறேன்…
சிறு சொல்லுல உறியடிச்சு
என்ன நீ சாய்ச்ச..
சக்கர வெயில்
அடிச்சு சட்டுனு ஓச்ச…

றெக்கையும் மொளைச்சுடுச்சு
கேட்டுக்க கிளி பேச்ச…..

பெண் : கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்…
ஓஹோ….
என்ன வேணும் கேளு…
குறையாம நானும் தாரேன்….

BGM

பெண் : ஓ.. தொட்டதும் கைகளுள
ஒட்டுற உன் கருப்பு
என்ன மாத்துதே….
ஒட்டடை போல என்ன
தட்டிடும் உன் அழகு
வித்தை காட்டுதே…..

பெண் : தொல்லைகள கூட்டினாலும்
நீ தூரம் நின்னா தாங்கல….
கட்டிலிடும் ஆசையால…
என் கண்ணு ரெண்டும் தூங்கல…
உன்ன கண்டதும் மனசுக்குள்ள
எத்தனை கூத்து..
சொல்லவும் முடியவில்லை
சூட்டையும் ஆத்து..
உன்ன என்
உசுருக்குள்ள வைக்கணும்
அட காத்து….

BGM

பெண் : கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்…
என்ன வேணும் கேளு…
குறையாம நானும் தாரேன்……


Notes : Kanna Kaattu Podhum Lyrics in Tamil. This Song from Rekka (2016). Song Lyrics penned by Yugabharathi. கண்ண காட்டு போதும் பாடல் வரிகள்.