கண்ணம்மா கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநந்தினி ஸ்ரீகர்டி. இமான்றெக்க

Kannamma Kannamma Song Lyrics in Tamil


பெண் : ஆஆ… ஆஆ… கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை…
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை…

பெண் : உன்னை நினைத்துதிருந்தால் அம்மம்மா நெஞ்சமே…
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே…
ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ…

பெண் : கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை…
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை…

பெண் : ஆஆ… ஆஆ…
ஆஆ… ஆஆ… ஆஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : செம்பருத்தி பூவை போல ஸ்நேகமான வாய் மொழி…
செல்லம் கொஞ்ச கோடைகூட ஆகிடாதோ மார்கழி…
பால்நிலா உன் கையிலே சோறாகி போகுதே…
வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே…

பெண் : கண்ணம்மா… கண்ணம்மா… நில்லம்மா…
உன்னை உள்ளம் என்னுதம்மா…

பெண் : கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை…
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை…

—BGM—

பெண் : உன்னுடைய கோலம் காண கோவில் நீங்கும் சாமியே…
மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே…
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்…
தேவதை நீதானென வாயார போற்றுவான்…

பெண் : கண்ணம்மா… கண்ணம்மா… என்னம்மா…
வெட்கம் நீட்டி தள்ளுதம்மா…

பெண் : கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை…
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை…

பெண் : உன்னை நினைத்துதிருந்தால் அம்மம்மா நெஞ்சமே…
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே…
ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ…

—BGM—


Notes : Kannamma Kannamma Song Lyrics in Tamil. This Song from Rekka (2016). Song Lyrics penned by Yugabharathi. கண்ணம்மா கண்ணம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading