ஏன் அழகா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. இனியவன்ஸ்ரீகாந்த் ஹரிஹரன், மதுரா தாரா தல்லூரிவீரங்கன் கேகணேசாபுரம்

Yen Azhaga Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அட கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும்…
கொடுக்காத என் மனச…
நீ கெடுத்தேயடா வயச…
எட்டி புடுச்சியடா உசுர…

பெண் : உன் மொரட்டு தனமான பாசத்தாலையே…
நானும் கூட கொஞ்சம் பயந்தேன்…
உன் கிறுக்கு தனமான பார்வையிலே…
இந்த பாவி சிறுக்கியும் விழுந்தேன்…

பெண் : திண்டாடி நிக்குறேன் நானடா…
உன் பொண்டாட்டி மனசையும் பாரடா…
இனி எந்நாளும் உனக்கு நானடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : உன்னோட மீசைய முறுக்கணும்…
உன் பொண்டாட்டியாக நான் மெரட்டனும்…
கொஞ்சம் அடங்கி ஒடங்கி நீ நடக்கணும்…
கஞ்சி ஆக்கி போட்டாலும் குடிக்கணும்…

பெண் : எந்நாளும் என்னை தாங்கனும்…
கண்ணாக உன் கண்ணாக…

ஆண் : அம்மாடி அதுக்குள்ள தொவங்குற…
எம்மாடி எம்புட்டு பொலம்புற…
என்னை கலக்கு கலக்குன்னு கலக்குற…
கொத்து இடுப்பு சாவியா குலுங்குற…

ஆண் : உன்னால ஆட்டம் காணுறேன்…
அடி மனசில் பட படன்னு வெடிய செதறவுட்ட…
அடியே அழகு சிறுக்கி…
என் மனச ஒடச்ச கிறுக்கி…
உன்ன கடத்த வேணும் இறுக்கி…

ஆண் : என் இரும்பு தோலுகுள்ள கரும்ப நீ வெதைச்ச…
களவ நானும் கொஞ்சம் மறக்க…
சின்ன கொழந்த போல என்னை கொஞ்சி தூக்கிபுட்ட…
தாய போல உன்னை நெனைக்க…
உன்னாலே ஆளானேன்…

பெண் : உன் முகம்தான்…
என்னை கொஞ்சி பார்க்க தூண்டுதே…
என் மொகமோ…
மருதாணி போல செவந்ததே…

பெண் : வெட்கம் என்னவோ…
என் வாழ்வில் இது போல் இல்லையே…
எனக்கென்னதான் நடந்ததோ மறந்ததே…

—BGM—

பெண் : அன்பால தெனம் உன்னை ஆளனும்…
என் ஆசை இரவுல கூறனும்…
உன்னை இறுக்கி புடிச்சுதான் உறங்கணும்…
மெல்ல இழுத்து போத்திதான் கெறங்கணும்…
அஞ்சாறு புள்ள ஏந்தணும்…
உன்னாலே என் மேலே…

ஆண் : கண்ணாக தினம் உன்னை காக்கணும்…
உன் ஆசை முழுசையும் சேக்கணும்…
உன்னை கொழந்தை போலதான் பாக்கணும்…
கொஞ்சி குமரி ஆகையில் தூக்கணும்…
உன் மூச்சு காத்தில் வாழனும்…

ஆண் : கள்ள சிறுக்கி இவன் மனச அடிச்சி தொவச்சிபுட்ட…
துணியா மனசு வெளுக்க…
நான் புதுசா பூமியில் பொறக்க…
உன் நெனப்புல மெதப்புல நடக்க…

ஆண் : உன் கொழந்த பேச்சிக்குள்ள கொழந்தை ஆகுறேன்டி…
அழகி நாளும் உன்னை ரசிச்சேன்…
உன்னை மெரட்டி மீசைக்குள்ள அடைக்க வீரமில்ல…
பொட்டி பாம்பாக அடைஞ்சேன்…
அன்பாலே உன் அன்பாலே…

பெண் : போதுமடா இனி என்ன வேணும் வாழ்விலே…
நீ அருகில் உன் காதல் ஒன்று போதுமே…
ஒன்றாய் கூடியே வானமாய் வாழலாம்…
ஒன்றாய் கூடியே வானமாய் வாழலாம்…


Notes : Yen Azhaga Song Lyrics in Tamil. This Song from Ganesapuram (2021). Song Lyrics penned by Pa. Iniyavan. ஏன் அழகா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading