தட தட ரயிலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. இனியவன்அர்ஜுன் பாரதி எஸ்.கே. & சக்திஸ்ரீ கோபாலன்ராஜா சாய்கணேசாபுரம்

Thada Thada Raila Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தட தட ரயிலா…
அடிக்குற வெயிலா…
அழகா உன் மீசைக்குள்ள சிக்கிகிட்டேன்டா…

பெண் : உனை விட அழகா…
இனி ஒரு உறவா…
இதயத்தில் உன்னை வச்சு பூட்டிகிட்டேன்டா…

பெண் : வாடுது நாத்து…
ஆடுது கூத்து…
தேவதை ஆனேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வீசுது காத்து…
என் தெசை பாத்து…
காரணம் நீதானே…

பெண் : ஓ… உசுருள்ள காலம் மட்டும் உன்னை தேடித்தான்…
உசுராக காத்துருப்பேன் ஜென்மம் கோடித்தான்…

—BGM—

பெண் : உன் நெனப்ப அள்ளி பூசிக்கிட்டு…
மஞ்சள் மறந்தேனே…
ஆலமர நந்தி காதினிலே…
மனச தொறந்தேனே…

பெண் : பாதை யாவும் உன் நிழல் போதும்…
வாழும் காலம் சுகம்…
தாயுமாகி தாலாட்டாகி…
சேரும் காலம் இதம்…

பெண் : உன்னால தூக்கம் கெட்டு…
இத்து போகுறேன்…
தன்னால வெட்கம் விட்டு…
உன்னை தேடுறேன்…

ஆண் : ஓஓ… ஓஹோ… ஓ…
ஓஓ… ஓஹோ… ஓ…

—BGM—

பெண் : உன் மடியில் மெல்ல சாஞ்சிக்கிட்டு…
உலகம் மறந்திடணும்…
கால் கொலுசில் உன் சினுகலத்தான்…
அள்ளி கலந்திடனும்…

பெண் : நீ அழும் நேரம் தாயென நானும்…
மார்பில் தாங்கிடனும்…
தாமதமாகும் வேளையில் நானும்…
வாசலில் ஏங்கிடனும்…

பெண் : உன்னோடு வாழத்தானே நானும் ஏங்குறேன்…
உன் கைகள் சேரத்தானே உசுர தாங்குறேன்…

பெண் : வாடுது நாத்து…
ஆடுது கூத்து…
தேவதை ஆனேனே…

பெண் : வீசுது காத்து…
என் தெசை பாத்து…
காரணம் நீதானே…

பெண் : வாடுது நாத்து…
ஆடுது கூத்து…
வீசுது காத்து…
என் தெசை பாத்து…


Notes : Thada Thada Raila Song Lyrics in Tamil. This Song from Ganesapuram (2021). Song Lyrics penned by Pa. Iniyavan. தட தட ரயிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading