Category Archives: லால் சலாம்

லால் சலாம் – Lal Salaam (2024)

அன்பாளனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதேவா & தீப்தி சுரேஷ்ஏ.ஆர்.ரகுமான்லால் சலாம்

Anbalane Song Lyrics in Tamil


BGM

ஆண் : எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்…
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்…

ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே…
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே…
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே… ஓஓ… ஓஓ…

ஆண் : வல்லோனே நான் உன்னை காண்பேனோ துன்பத்திலே…
சொல் சொல் சொல் சொல்… சொல் சொல்…

ஆண் : அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…
அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…

ஆண் : எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்…
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்…

ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே…
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே…
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே… ஓஓஓ… ஓஓஓ…

BGM

ஆண் : நல்லோருக்கு ஓர் தீங்கு செய்தேனில்லை…
நம்பிக்கை துரோகத்தை சேர்ந்தேனில்லை…
ஆனாலும் அல்லா நீ ஏன் என் மேல் கோபம் கொண்டாய்… ஓஓஓ… ஓஓஓ…

ஆண் : பொய்வேடம் நான் என்றும் இட்டேன் இல்லை…
இல்லாரின் கைக்காசை தொட்டேன் இல்லை…
ஆனாலும் அல்லா நீ ஏன் என்னை தீயாய் சுட்டாய்… ஓஓஓ… ஓஓஓ…

ஆண் : சேதாரம் ஆனாலும் அல்லாஹ் உன் அன்பாலே…
தீரும் துயர் யாவும்…
ஆதாரம் நீ ஆனால் எல்லாமே…
கை சேர பாரம் பறந்தோடும்…

ஆண் : எல்லாமும் இங்கே அல்லாஹ் உன்னாலே ஆகும்…

ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே…
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே…
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே… ஓஓஓ… ஓஓஓ…

BGM

குழு : முன்னேறி முன்னாலே வந்தோர் உண்டு…
முள் மீதே கால் வைத்து சென்றோர் உண்டு…
என்றாலும் அல்லாஹ் உன் அன்பின்றி வெல்வார் உண்டோ… ஓஓஓ…

குழு : தன் போக்கில் எங்கேயும் செல்வர் உண்டு…
தள்ளாடி பின்னாலே நின்றார் உண்டு…
என்றாலும் அல்லாஹ் உன் கண் இன்றி காண்பார் உண்டோ… ஓஓஓ…

குழு : ஆகாயமானாலும் அல்லாஹ் நீ இல்லாமல்…
தூரல் கிடையாதே…
பூலோகம் ஆனாலும் அல்லாஹ் உன் சொல்லின்றி…
பூவும் மலராதே…

குழு : எல்லாமும் இங்கே அல்லாஹ்வும் நானே ஆகும்…
ஈடுயில்லா உன்னை சொன்னாலே இன்பம் கூடும்…

குழு : இதன் உன் பார்வை செய்கின்ற மாயத்திலே…
எங்கேயும் தோன்றாதோ தீபங்களே…
தாயும் நீயாகி கை தாங்கும் நேரத்திலே… ஓஓஓ… ஓஓஓ…

குழு : நோய் ஏது நொடி ஏது…
நீ இன்றி உயிர் ஏது…
ஆண் : சொல் சொல் சொல் சொல்… சொல் சொல்…

ஆண் : அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…
அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…

BGM


Notes : Anbalane Song Lyrics in Tamil. This Song from Lal Salaam (2024). Song Lyrics penned by Yugabharathi. அன்பாளனே பாடல் வரிகள்.


ஜலாலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ.ஆர்.ரகுமான் & மஷூக் ரஹ்மான்ஏ.ஆர்.ரகுமான் & சரத் சந்தோஷ்ஏ.ஆர்.ரகுமான்லால் சலாம்

Jalali Song Lyrics in Tamil


ஆண் : ஹேய் ஆட்டாத வால்…
கிட்ட வந்தா நீ ஹலால்…

BGM

ஆண் : ஹேய் ஆட்டாத வால்…
கிட்ட வந்தா நீ ஹலால்…
ரெடியா வச்சுக்கமா…
இவன் ஜலால் ஜலால்…

ஆண் : ஆட்டாத வால் வால் வால்…

ஆண் : ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால்…
ஆட்டாத வால்… ஆட்டாத வால்…
ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால்…

BGM

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : எட்டுத்து திசையும் கட்டிபுரட்டும்…
ஆற்றல் இவனின் வேகம்…
அணகட்ட நெருங்கும் கூட்டம் யாவும்…
நொறுங்கி தெரித்து ஓடும்…

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : முட்டி முளைத்து வானளாவ…
நிற்பதிவனின் ரூபம்…
அதை தட்டி தகர்க்க சேரும் கரங்கள்…
வெல்வதில்லை நாளும்…

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : எளியோர் போற்றும் தனியோன் இவனோ…

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : கண்கள் இரண்டும் கதிரை விழுங்கி…
எரியும் பிழம்பின் தீபம்…
அறம் தவருமிடத்தில்…
திமிறி எழுந்து நிற்கும் இவனின் கோபம்…

ஆண் : வலியவன் ஜலாலி…
நிலைப்பவன் ஜலாலி…
இரும்புலும் ஜலாலி…
இறைவனும் ஜலாலி…

ஆண் : தனை வென்றோனே பகை வெல்வானே…
எரிமலை போல் பொறுமை செய்வோன்…

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : தனை வென்றோனே பகை வெல்வானே…
எரிமலை போல் பொறுமை செய்வோன்…

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : மோதாதே நீ காலி…
இவன் பார்வை தீயே வீழ்த்துமே…

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி…

ஆண் : ஹேய் ஆட்டாத வால்…
கிட்ட வந்தா நீ ஹலால்…

BGM

ஆண் : ஹேய் ஆட்டாத வால்…
கிட்ட வந்தா நீ ஹலால்…
ரெடியா வச்சுக்கமா…
இவன் ஜலால் ஜலால்…

ஆண் : ஆட்டாத வால்…

BGM

ஆண் : ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால்…
ஆட்டாத வால்… ஆட்டாத வால்…

ஆண் : அஸ்ஸலாமு அலைக்கும்…
வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்…


Notes : Ae pulla Song Lyrics in Tamil. This Song from Lal Salaam (2024). Song Lyrics penned by Mashook Rahman & AR Rahman. ஜலாலி பாடல் வரிகள்.


ஏ புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஸ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்லால் சலாம்

Ae pulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி பச்சரிசி பல்லுக்காரி…
பட்டினிக்குப் பந்தி வைக்க…
மச்சமெல்லாம் மின்னுதடி நட்சத்திரமா…

ஆண் : அட தண்ணீர்ல மீனு ஒன்னு தக திமி தா…
நெஞ்சுக்குளி பள்ளத்துல வந்து குதிச்சா…

ஆண் : ஏய் சித்தாட கட்டி வந்த சிங்காரமே…
ஹே சிங்காரமே… ஹே சிங்காரமே…
மண் பானை உடையாத மந்திரமே…
சீம்பாலில் செஞ்சு வச்ச சித்திரமே…
அடி எம்மே…

BGM

ஆண் : ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே…
வேட்டிச் சேலை விடுகதையே…
ஆளான மழையே…
பூவா வீசுகின்ற புயலே வா வா…

ஆண் : ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…

BGM

ஆண் : மந்திரிச்ச மயிலே…
கரும்பில் செய்த குழலே…
நெஞ்சில் வாழும் நிழலே…

ஆண் : ஆட ஆட பாலாட…
ஆட்டம் போடும் நூலாட…
உன் வாசல் பூன நானாடி…
வாழைமீனு நீயடி…

ஆண் : மோன மோன முந்தான…
மோகம் கொண்டு வந்தான…
மோன மோன முந்தான…
மோகம் கொண்டு வந்தான…
பூட்டிவை பொத்தான ஆசை தீர அத்தான…

ஆண் : ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே…
வேட்டிச் சேலை விடுகதையே…
ஆளான மழையே…
பூவா வீசுகின்ற புயலே வா வா…

BGM

ஆண் : பள்ளிக்கூடம் முடிஞ்சா வீட்டு பாடம் இருக்கு…
என்ன வேணும் உனக்கு…

ஆண் : ஆரம் ஆரம் சஞ்சாரம்…
அசர வேணும் பஞ்சாரம்…
அடி கண்ணே என்ன யோசன…
கண்ணில் காதல் வாசன…

ஆண் : காட்டு மல்லி கையோடு…
கட்டி போட்ட மெய்யோடு…
காட்டு மல்லி கையோடு…
கட்டி போட்ட மெய்யோடு…
ஒன்னுக்குள்ள ஒன்னோடு…
வேரும் போகும் மண்ணோடு…

ஆண் : ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே…
வேட்டிச் சேலை விடுகதையே…
ஆளான மழையே…
பூவா வீசுகின்றபுயலே வா வா…


Notes : Ae pulla Song Lyrics in Tamil. This Song from Lal Salaam (2024). Song Lyrics penned by Kabilan. ஏ புள்ள பாடல் வரிகள்.


தேர் திருவிழா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஷங்கர் மகாதேவன், ஏ.ஆர். ரெய்ஹானா, தீப்தி சுரேஷ் & யோகி சேகர்ஏ.ஆர்.ரகுமான்லால் சலாம்

Ther Thiruvizha Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்தன மாரிக்குத்தான் சடுதியில் ஒரு கொலவ…
சடுதியில் ஒரு கொலவ…
நம்ம மங்களமா வாழ போடுங்கம்மா கொலவ…
போடுங்கம்மா கொலவ…

ஆண் : நம்ம ஏரி குளம் நெறஞ்சிட போடுங்கம்மா கொலவ…
போடுங்கம்மா கொலவ…
ஓஓஓ… நம்ம பஞ்சம் தீர போடுங்கம்மா கொலவ…
போடுங்கம்மா கொலவ…

BGM

ஆண் : ஏய் ஓடி களச்ச சனம்…
தேடி களச்ச சனம்…
தன்ன மறந்து வந்து ஆடி எளப்பார…

ஆண் : தேர் திருவிழா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தேர் திருவிழா…
பெண் : தேர் திருவிழா…

ஆண் : ஓ… நம்ம தேர் திருவிழா…
பெண் : நம்ம தேர் திருவிழா…
ஆண் : நம்ம தேர் திருவிழா…
பெண் : நம்ம தேர் திருவிழா…

ஆண் : ஏ… தனியாகி ஓடப்பக்கம்…
தூங்கி வழிஞ்ச மரம்…
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே…
பெண் : பூக்குதே பூகுக்தே… ஓஹோ… பூக்குதே பூக்குதே…

ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு…
பூனைக்கும் மீன் துண்டு…
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்…
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்…
மத்தளமும் பிச்சிக்கிட்டு மொத்த சனம் கொட்டமிட…

ஆண் : தன்னானே நானே நன்னா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தன்னானே நானே நன்னா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தன்னானே நானே நன்னா…
பெண் : நம்ம தேர் திருவிழா…
ஆண் : தன்னானே நானே நன்னா…
பெண் : நம்ம தேர் திருவிழா…

BGM

பெண் : மட்டான் தொழுவத்துல மாட்டெருவ அள்ளியாந்து…
ஆட்டான் தொழுவத்துல ஆட்டெருவ அள்ளியாந்து…

BGM

பெண் : மட்டான் தொழுவத்துல மாட்டெருவ அள்ளியாந்து…
ஆட்டான் தொழுவத்துல ஆட்டெருவ அள்ளியாந்து…

ஆண் : காட்டா எரு பெருக்கி காரணம எரு இடித்து…
கடல சிறு பயிரு காராமணி பயிரு…

பெண் : எல்லாம் சிறு பயிரு…
எழுவகை மணி பயிரு…
மொழ போட்ட மூணா நாளு…
எங்க முத்து மாரி…

ஆண் & பெண் : பேயாதோ முத்துமழ…
பேயாதோ முத்துமழ…
பேயாதோ முத்துமழ…
ஆண் : எங்க முத்து மாரி…

ஆண் : ஓடி களச்ச சனம்…
தேடி களச்ச சனம்…
தன்ன மறந்து வந்து ஆடி எளப்பார…

ஆண் : தேர் திருவிழா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தேர் திருவிழா…
பெண் : தேர் திருவிழா…

ஆண் : நம்ம தேர் திருவிழா…
பெண் : நம்ம தேர் திருவிழா…
ஆண் : நம்ம தேர் திருவிழா…
பெண் : நம்ம தேர் திருவிழா…

ஆண் : ஏ… தனியாகி ஓடப்பக்கம்…
தூங்கி வழிஞ்ச மரம்…
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே…
பெண் : பூக்குதே பூகுக்தே… ஓஹோ… பூக்குதே பூக்குதே…

ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு…
பூனைக்கும் மீன் துண்டு…
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்…
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்…
மத்தளமும் பிச்சிக்கிட்டு மொத்த சனம் கொட்டமிட…

ஆண் : தன்னானே நானே நன்னா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தன்னானே நானே நன்னா…
பெண் : தேர் திருவிழா…

BGM

பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி…
குழு : நல்ல வளையல் குலுங்க கும்மியடி…
பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி…
குழு : நல்ல வளையல் குலுங்க கும்மியடி…

பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி…
குழு : வருங்காலம் நமக்கு கும்மியடி…
பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி…
குழு : வருங்காலம் நமக்கு கும்மியடி…

BGM

பெண் : மக்க மஞ்ச குளிக்க…
மாட்டு கொம்பு பூமணக்க…
ஊரோர குட்டி சுவரு போடுற ஊசி பல்லிளிக்க…

பெண் : தெரியாத சொந்தமெல்லாம் ஒரு நாள் ஒன்னு சேர…
தனியான காலு ரெண்டும் தாயூர் மண்ண சேர…

BGM

பெண் : எங்க பசி மறைய எங்க சாமி மனம் குளிர…
சந்தோஷ கண்ணீருடன் எங்க முத்து மாரி…

ஆண் & பெண் : பேயாதோ முத்துமழ…
பேயாதோ முத்துமழ…
பேயாதோ முத்துமழ…
எங்க முத்து மாரி…

ஆண் : ஓடி களச்ச சனம்…
தேடி களச்ச சனம்…
தன்ன மறந்து வந்து ஆடி எளப்பார…

ஆண் : தேர் திருவிழா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தேர் திருவிழா…
பெண் : தேர் திருவிழா…

ஆண் : நம்ம தேர் திருவிழா…
பெண் : நம்ம தேர் திருவிழா…
ஆண் : நம்ம தேர் திருவிழா…
பெண் : நம்ம தேர் திருவிழா…

ஆண் : ஏ… தனியாகி ஓடப்பக்கம்…
தூங்கி வழிஞ்ச மரம்…
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே…
பெண் : பூக்குதே பூகுக்தே… ஓஹோ… பூக்குதே பூக்குதே…

ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு…
பூனைக்கும் மீன் துண்டு…
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்…
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்…
மத்தளமும் பிச்சிக்கிட்டு மொத்த சனம் கொட்டமிட…

ஆண் : தன்னானே நானே நானா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தன்னானே நானே நானா…
பெண் : தேர் திருவிழா…

{ ஆண் : தன்னானே நானே நானே…
தன்னானே நானே நானே…
தன்னானே நானா நானா… } * (2)

BGM

{ ஆண் : தன்னானே நானே நானே…
தன்னானே நானே நானே…
தன்னானே நானா நானா… } * (6)


Notes : Ther Thiruvizha Song Lyrics in Tamil. This Song from Lal Salaam (2024). Song Lyrics penned by Vivek. தேர் திருவிழா பாடல் வரிகள்.