Category Archives: ஜோஷ்வா இமை போல் காக்க

நான் உன் ஜோசுவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்கார்த்திக் & மனிஷா எஸ்கார்த்திக்ஜோஷ்வா இமை போல் காக்க

Naan Un Joshua Song Lyrics in Tamil


ஆண் : என் பார்வைகள் மாறிப்போனது…
என் பாதைகள் மாறிப்போனது…
காரணம் நீ என்றானது…
என் கால்கள் ஏன் மேலேப்போகுது…

பெண் : என் எண்ணங்கள் எல்லைத் தாண்டுது…
என் தாபங்கள் என்னை சீண்டுது…
உன்னை தொடக்கூடாதென்று தோனுது…
இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது…

ஆண் : நான் உன் ஜோசுவா…
என்னோடு சேர்ந்து வாழ வா…
விண்ணையும் தாண்டி போவோம் வருவாயா…

பெண் : வா வா என்னோடு வா…
எந்தன் உலகத்தை காண வா…
எங்கெங்கு போனாலும் என்னை கூட்டிச் செல்வாயா…

BGM

ஆண் : என் மடியினில் வந்து அமர்ந்து விடு…
உன் முடியினுள் என்னை மறைத்து விடு…

பெண் : உன் நிழலினுள் நிற்கத் தோன்றுது…
ஒரு கனவிலுள் காலை ஊன்றுது…

ஆண் : உன் சட்டை மேல் எந்தன் வாசனை…
அதை பற்றியே எந்தன் யோசனை…

பெண் : வாசனை எப்போது வீச வை…
நல்ல தமிழினில் என்னை பேச வை…

ஆண் : நான் உன் ஜோசுவா…
எந்தன் உலகத்தை காண வா…
எங்கு போனாலும் என்னை கூட்டிச் செல்வாயா…

BGM

ஆண் : நிலம் போல நான் என்றும் இருக்க…
நிழல் போல நீ என் மேல் கிடைக்க…
உனை தாங்கிட எண்ணம் எழுந்திருக்க…
இமைபோல் நான் உன்னை காக்க…
வாழ்வேனே தினம்…

பெண் : என் காலைகள் மாறிப்போனது…
என் மலைகள் நீளப்போகுது…
உன் வருகையால் ஏதோ ஆனது…
நல்ல கவிதையாய் எல்லாம் ஆனது…

பெண் : ஹே லவ் ஜோசுவா…
என்னோடு சேர்ந்து வாழ வா…
விண்ணையும் தாண்டி போவோம் வருவாயா…

ஆண் : வா வா என்னோடு வா…
எந்தன் உலகத்தை காண வா…
எங்கு போனாலும் என்னை கூட்டிச் செல்வாயா…

BGM

பெண் : என்ன செய்தாலும் என்னை சேர்த்து கொள்வாயா…

BGM


Notes : Naan Un Joshua Song Lyrics in Tamil. This Song from Joshua Imai Pol Kaakha (2024). Song Lyrics penned by Vignesh Shivan. நான் உன் ஜோசுவா பாடல் வரிகள்.


தாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக் & கிருஷ்ணா கேகார்த்திக்ஜோஷ்வா இமை போல் காக்க

Thaal Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாள் என் மனமென அதில் வரைந்தாள்…
செந்நிறமென நிறைந்தாள்…
குந்தவை நெருப்பில் எரிந்தவை…
சொல்லாமல் உறைந்தவைதானே…

ஆண் : அச்சத்தில் மிச்சம் கொள்வேனா…
கச்சத்தில் மஞ்சம் கொள்வேனா…
இச்சத்தில் ஊற்றி வைப்பாளா…
உச்சத்தில் ஏற்றி வைப்பாளா…

ஆண் : தாள் என் மனமென அதை திறந்தாள்…
பறவையென பறந்தாள்…
குந்தவை எனக்குள் எழுந்தவை…
என்றோ நான் இழந்தவைதானே…

ஆண் : அச்சத்தில் மிச்சம் கொள்வேனா…
கச்சத்தில் மஞ்சம் கொள்வேனா…
இச்சத்தில் ஊற்றி வைப்பாளா…
உச்சத்தில் ஏற்றி வைப்பாளா…

BGM

பெண் : முன்னாள் உறவே…
நீ முத்தமிட்ட காயம் ஆறாதே…
நெஞ்சா முதுகா…
ஊர்ந்து போகும் நாகம் பாராதே…

ஆண் : தாள் என் மனமென அதை திறந்தாள்…
பறவையென பறந்தாள்…
குந்தவை எனக்குள் எழுந்தவை…
என்றோ நான் இழந்தவைதானே…

ஆண் : அச்சத்தில் மிச்சம் கொள்வேனா…
கச்சத்தில் மஞ்சம் கொள்வேனா…
இச்சத்தில் ஊற்றி வைப்பாளா…
உச்சத்தில் ஏற்றி வைப்பாளா…


Notes : Thaal Song Lyrics in Tamil. This Song from Joshua Imai Pol Kaakha (2024). Song Lyrics penned by Madhan Karky. தாள் பாடல் வரிகள்.


tappasu-neram-song-lyrics

டப்பாசு நேரம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கிருஷ்ணா கே & கானா குணாகார்த்திக்ஜோஷ்வா இமை போல் காக்க

Tappasu Neram Song Lyrics in Tamil


பெண் : டப்பாசு நேரம் டென்ட்ட மூடு…
டப் ஆன மேட்ச்ச நீ விளையாடு…

பெண் : யாரது பூமியின் மாபெரும் திருடன்…
பேர் என்ன காலம் என்ற பேர் கொண்ட கயவன்…
ஒட்டி வந்த ரெட்டையாக நிமிட கட்டையாக…
தோழனாக தேவனாக வேடமிட்ட வேதனாக…

பெண் : ஒரே ஒரே ஒரே ஒரே ஒருமுறை…
நேரப்பரிசு வழங்க வருவான்…
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் புகுந்து…
நொடிகள் திருடி சென்று விடுவான்…

குழு (பெண்கள்) : நினைவுகளே அவன் எதிரி…
நேற்றையும் நாளையும் உதறி…
இந்த நிமிடத்தின் இன்ப ரசமேற்றி…
செய்வோமா ஒரு ஞாபக குமுழி…

ஆண் : ப ப ப ப ப பா பா பா பா…
ப ப ப ப ப பா பா பா பா…

BGM

ஆண் : சோடா பாட்டில் ரோடு மேல…
யானை வாக்கிங் போனா போல…
என்னவும் எதவுமோ நம்ம சைடு…

ஆண் : பீடா அடுச்ச பல்லு போல…
சீனு சீனா மாறும் மெல்ல…
அதுக்காண்டி தாமா வெச்சோம் வார்னிங் போர்டு…

பெண் : ஹே டப்பாசு நேரம் டென்ட்ட மூடு…
டப் ஆன மேட்ச்ச நீ விளையாடு…

ஆண் : ப ப ப ப ப பா பா பா பா…
ப ப ப ப ப பா பா பா பா…

BGM

பெண் : யாருமில்லை இந்த நிமிடம் என் கழுத்தில் கத்தி வைக்க…
நேரமுள்ளை சிலுவை ஆக்கி என்னை அங்கு குத்தி வைக்க…
விழுந்தாலும் அது இன்றல்ல பிறகு…
தரையை தொடும் முன்பு கிடைக்கும் சிறகு…

BGM

ஆண் : பாச கயிறில் இந்த புள்ள…
ஸ்கிப்பிங் ஆடுது என்ன சொல்ல…
இது வூட்டு பார்க்கிங் மேல ஏறுமா மாடு…

ஆண் : நாலு ஆளு ஒத்த ஓலை…
எவனோ அனுப்பிவுட்டான் போல…
அவனுக்கே ஓலை கட்டி டான்ஸ போடு…

ஆண் : வூடு தீ பத்தி…
இனி தேடாத வத்தி…
அட ஒன் டூ த்ரீ போர்…

ஆண் : டப்பாசு நேரம் டென்ட்ட மூடு…
டப் ஆன மேட்ச்ச நீ விளையாடு…

ஆண் : ப ப ப ப ப பா பா பா பா…
ப ப ப ப ப பா பா பா பா…


Notes : Tappasu Neram Song Lyrics in Tamil. This Song from JOSHUA Imai Pol Kaakha (2022). Song Lyrics penned by Vivek. டப்பாசு நேரம் பாடல் வரிகள்.