டப்பாசு நேரம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கிருஷ்ணா கே & கானா குணாகார்த்திக்ஜோஷ்வா இமை போல் காக்க

Tappasu Neram Song Lyrics in Tamil


பெண் : டப்பாசு நேரம் டென்ட்ட மூடு…
டப் ஆன மேட்ச்ச நீ விளையாடு…

பெண் : யாரது பூமியின் மாபெரும் திருடன்…
பேர் என்ன காலம் என்ற பேர் கொண்ட கயவன்…
ஒட்டி வந்த ரெட்டையாக நிமிட கட்டையாக…
தோழனாக தேவனாக வேடமிட்ட வேதனாக…

பெண் : ஒரே ஒரே ஒரே ஒரே ஒருமுறை…
நேரப்பரிசு வழங்க வருவான்…
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் புகுந்து…
நொடிகள் திருடி சென்று விடுவான்…

குழு (பெண்கள்) : நினைவுகளே அவன் எதிரி…
நேற்றையும் நாளையும் உதறி…
இந்த நிமிடத்தின் இன்ப ரசமேற்றி…
செய்வோமா ஒரு ஞாபக குமுழி…

ஆண் : ப ப ப ப ப பா பா பா பா…
ப ப ப ப ப பா பா பா பா…

BGM

ஆண் : சோடா பாட்டில் ரோடு மேல…
யானை வாக்கிங் போனா போல…
என்னவும் எதவுமோ நம்ம சைடு…

ஆண் : பீடா அடுச்ச பல்லு போல…
சீனு சீனா மாறும் மெல்ல…
அதுக்காண்டி தாமா வெச்சோம் வார்னிங் போர்டு…

பெண் : ஹே டப்பாசு நேரம் டென்ட்ட மூடு…
டப் ஆன மேட்ச்ச நீ விளையாடு…

ஆண் : ப ப ப ப ப பா பா பா பா…
ப ப ப ப ப பா பா பா பா…

BGM

பெண் : யாருமில்லை இந்த நிமிடம் என் கழுத்தில் கத்தி வைக்க…
நேரமுள்ளை சிலுவை ஆக்கி என்னை அங்கு குத்தி வைக்க…
விழுந்தாலும் அது இன்றல்ல பிறகு…
தரையை தொடும் முன்பு கிடைக்கும் சிறகு…

BGM

ஆண் : பாச கயிறில் இந்த புள்ள…
ஸ்கிப்பிங் ஆடுது என்ன சொல்ல…
இது வூட்டு பார்க்கிங் மேல ஏறுமா மாடு…

ஆண் : நாலு ஆளு ஒத்த ஓலை…
எவனோ அனுப்பிவுட்டான் போல…
அவனுக்கே ஓலை கட்டி டான்ஸ போடு…

ஆண் : வூடு தீ பத்தி…
இனி தேடாத வத்தி…
அட ஒன் டூ த்ரீ போர்…

ஆண் : டப்பாசு நேரம் டென்ட்ட மூடு…
டப் ஆன மேட்ச்ச நீ விளையாடு…

ஆண் : ப ப ப ப ப பா பா பா பா…
ப ப ப ப ப பா பா பா பா…


Notes : Tappasu Neram Song Lyrics in Tamil. This Song from JOSHUA Imai Pol Kaakha (2022). Song Lyrics penned by Vivek. டப்பாசு நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top