விளம்பர இடைவெளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துகிறிஸ்டோபர் ஸ்டான்லி, சுதர்ஷன் அசோக், ஹிப் ஹாப் தமிழா & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஹிப் ஹாப் தமிழாஇமைக்கா நொடிகள்

Vilambara Idaiveli Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒளி இல்லா உன் மொழிகள்…
விடை தேடும் என் விழிகள்…
இமைக்காத நம் நொடிகள்…
கடிகார தேன் துளிகள்…

ஆண் : அடி வாயார உன் காதல் நீ சொல்லடி…
வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி…
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி…
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி…

ஆண் : விளம்பர இடைவெளி மாலையில்…
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்…
என் நிறமற்ற இதயத்தில் வானவில்…
அடி என்ன நிலை உந்தன் மனதில்…

ஆண் : நான் உனதே அடி நீ எனதா…
தெரியாமல் நானும் தேய்கிறேன்…
இல்லை என்றே சொன்னால் இன்றே…
என் மோக பார்வை மூடுவேன்…

—BGM—

பெண் : காதல் பூவை நான் ஏற்று கொண்டால்…
உன் காத்திருப்பு நிறைவாகுமே…
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்…
நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே…

பெண் : இவளின் கனவோ உள்ளே ஒளியும்…
இரவும் பகலும் இதயம் வழியும்…
வழியும் கனவு இதழை அடையும்…
எந்த காட்சியில் அது வார்த்தை ஆகிடும்…

ஆண் : விளம்பர இடைவெளி மாலையில்…
மாலையில்…

ஆண் : உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்…
வேளையில்…

ஆண் : என் நிறமற்ற இதயத்தில் வானவில்…
வானவில்…

ஆண் : அடி என்ன நிலை உந்தன் மனதில்…
உந்தன் மனதில்…

—BGM—

பெண் : நிலமெல்லாம் உன் தடமே…
நிலவெல்லாம் உன் படமே…
நிஜமெல்லாம் உன் நிறமே…
நினைவெல்லாம் உன் நியாமே… ஹே…

பெண் : மதுரம் கொஞ்சும் இளைஞன் நீயோ…
மதமே இல்லா இறைவன் நீயோ…
வயத்தை கடிக்கும் குழந்தை நீயோ…
வரம்பு மீறலோ எனை தொடரும் தூறலோ…

குழு (ஆண்கள்) : நான் உனதே அடி நீ எனதா…

ஆண் : தெரியாமல் நானும் தேய்கிறேன்…

குழு (ஆண்கள்) : இல்லை என்றே சொன்னால் இன்றே…

ஆண் : என் மோக பார்வை மூடுவேன்…

ஆண் : நான் உனதே அடி நீ எனதா…
தெரியாமல் நானும் தேய்கிறேன்…
இல்லை என்றே சொன்னால் இன்றே…
என் மோக பார்வை மூடுவேன்…

—BGM—


Notes : Vilambara Idaiveli Song Lyrics in Tamil. This Song from Imaikkaa Nodigal (2018). Song Lyrics penned by Kabilan Vairamuthu. விளம்பர இடைவெளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading