Category Archives: பெங்களூர் நாட்கள்

பெங்களூர் நாட்கள் – Bangalore Naatkal (2016)

பரபரப்பா ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரஞ்சித்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

Paraparapa Oru Ooru Song Lyrics in Tamil


BGM

ஆண் : பரபரப்பா ஒரு ஊரு பெங்களூரு…
பரவசமா மூணு பேரு தாருமாறு…

ஆண் : புதுவானம் தலைமேலே…
புயல் காற்றில் இலைபோலே…

ஆண் : பறந்தோம் பறந்தோம்…

ஆண் : ஓஹோ… நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…

ஆண் : பரபரப்பா ஒரு ஊரு பெங்களூரு…
பரவசமா மூணு பேரு தாருமாறு…

BGM

ஆண் : கட்டுப்பாடு இங்கே இல்லை…
கட்டிப்போட யாரும் இல்லை…
பட்டாம்பூச்சியாக மாறிப் பறக்கிறோம்…

ஆண் : தொட்டி மீனைக் கொண்டுவந்து…
ஆற்றுக்குள்ளே விட்டதுபோல்…
தட்டுத்தடுமாறி இதை ரசிக்கிறோம்…

ஆண் : இதயத்தை என்னமோ செய்யுதே…
ஹோஓ… இரு கால்கள் சக்கரம் ஆகுதே…

ஆண் : வேர்க்காத வெயில் அழகு…
பார்க்காத பாதை அழகு அழகோ அழகு…

ஆண் : ஓஹோ… நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…

ஆண் : நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…

ஆண் : வழியெல்லாம் முகம் புதுசு…
எது மேற்கு எது கிழக்கு…
மிரண்டே பறந்தோம்…

ஆண் : ஓஹோ… நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
புதுபுதுசா ஒரு ஊரு…


Notes : Paraparapa Oru Ooru Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Viveka. பரபரப்பா ஒரு பாடல் வரிகள்.


ஆக மொத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகோபி சுந்தர்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

Aaga Motham Ennai Song Lyrics in Tamil


குழு : ஹவா ஹவா வோக்கா வோக்கா…
ஹவா ஹவா வோக்கா வோக்கா…
ஹவா ஹவா வோக்கா வோக்கா…
ஹவா ஹவா வோக்கா வோக்கா…

BGM

ஆண் : ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…
மேகம் போல என்ன மேல மேல ஏத்துறா…
மழைவருமென மனசுக்குத் தெரியுது…

ஆண் : அவள் வெளிச்சங்கள் அடிச்சது கொஞ்சம்…
தங்கச் சரிவினில் விழுந்தது நெஞ்சம்…
என்ன என்ன இந்த இன்பம்… ஹோ…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…

BGM

ஆண் : கண்கள் அது நட்சத்திரச் ஜன்னல்…
பூக்கள் அது புன்னகையின் பின்னல்…
பெண்ணே நதி வளைகின்ற துள்ளல்…
எல்லாம் உன் அழகியல்தானோ…

ஆண் : நிலவொளி வழிகிற மரங்களின் கீழே…
கொஞ்சம் நின்றேன்…
கனவுகள் வருகிற விழியில்…
உன்னை மூடிக்கொண்டேன்…

ஆண் : நினைவுகள் மறந்திட மறந்திட…
என்னைத் தேடிவந்தேன்…
வந்தேன் வந்தேன் உன்னோடு…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…

BGM

ஆண் : கூந்தல் அது கலைந்தது மெல்ல…
காற்றில் என் தோளை பின்னிக் கொள்ள…
நெஞ்சம் அட என்னென்னமோ சொல்ல…
ஏனோ நான் தவிக்கிறேன் பெண்ணே…

ஆண் : இரவேது பகலேது மயங்கிடும்…
மாயம் ஒன்று செய்தாய்…
மரபுகள் புதுமைகள் இரண்டையும்…
மாற்றிவைத்து சென்றாய்…

ஆண் : மலர்களின் மொழிகளில் ரகசியம்…
ஒன்றைச் சொல்லித் தந்தாய் நீதானே…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…
மேகம் போல என்ன மேல மேல ஏத்துறா…
மழைவருமென மனசுக்குத் தெரியுது…

ஆண் : என்ன என்ன இந்த இன்பம் ஹோ…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : ஹவா ஹவா…


Notes : Aaga Motham Ennai Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆக மொத்தம் பாடல் வரிகள்.


நான் மாட்டிக்கொண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகாா்த்திக்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

Naan Maati Konden Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
உடலுக்குள் உயிரைப் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
உன் குரலுக்குள் இனிமை போல…
உனில் மாட்டிக் கொண்டேன்…

ஆண் : உந்தன் சுருள்முடி இருளிலே…
கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்…
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்…
பாா்வையில் உன் வாா்த்தையில்…

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
தமிழுக்குள் போதை போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : வேண்டி மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
கவிதைக்குள் குழப்பம் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

BGM

ஆண் : எல்லை மீறாமலே…
சிறு நெருக்கம் நெருக்கம்…
கைகள் தீண்டாமலே…
உன் இதயம் திறக்கும்…

ஆண் : இசையாய் விாிந்தாய்…
நிறமாய் இறைந்தாய்…
மணமாய் நிறைந்தாய்…
சுவையாய் கரைந்தாய்…

ஆண் : உன்னுள்ளே செல்லச் செல்ல…
இன்னும் உன்னைப் பிடிக்கையிலே…
இவ்வாறே நான் வாழ்ந்தால் போதாதா… ஓஓ…

ஆண் : என் நெஞ்சின் மேடை இங்கே…
உன்னை ஆட அழைக்கையிலே…
கால்கள் வேண்டாம் காதல் போதாதா…

ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
கோவிலில் கடவுள் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : தானாய் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
கா்ப்பத்தில் சிசுவைப் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : உந்தன் சுருள்முடி இருளிலே…
கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்…
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்…
பாா்வையில் உன் வாா்த்தையில்…

ஆண் : ஓ… மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
மண்டைக்குள் பாடல் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…

ஆண் : மாட்டி மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
ஆசைக்குள் ஏக்கம் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…


Notes : Naan Maati Konden Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Madhan Karky. நான் மாட்டிக்கொண்டேன் பாடல் வரிகள்.


என் விழியின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅன்னா கத்ரீனா, வளையில் சண்டி & கோபி சுந்தர்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

En Vizhiyin Kanavu Song Lyrics in Tamil


BGM

பெண் : என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை…
நீ காணாதே அதில் பிழை தேடாதே…
என் சிறிய உலகில் நீ யாரும் இல்லை…
ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே…

பெண் : என்னுள் நானாய் பாடும் பாடல்…
ஒட்டுக் கேட்பதேன்…
நெஞ்சுள் முணுமுணுப்பதேன்…
என் வாழ்வை வாழ்வதேன்…

பெண் : எந்தன் பசி எந்தன் தாகம் கூட…
உனைக் கேட்டு வரவேண்டுமா…
நீ எந்தன் சுவாசமா…

பெண் : மீண்டும் மீண்டும் என் மேல்…
பூ வீசிப் போகிறாய்…
ஏதோ நீ சொல்லப் பாா்க்கிறாயோ…

BGM

பெண் : எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீா்…
நான் ஏந்த முயல்கின்றேன்…
உன் சோகம் என் நெஞ்சில்…
ஏந்திப் போகிறேன் அது ஏனடா…

பெண் : நான் ஏன் நீயாகிறேன்…
ஆயினும் நான் நானே…
என்னில் உனைக் காணத்தானே…
நீயானேனே நானே…

BGM

ஆண் : அருகே நீ தூரமாய்…
தினமும் கொன்றாயடி…
யாா் யாரோ நாம் என்றாயடி…

BGM

ஆண் : நெஞ்சைக் கொட்டி நான் தீா்த்தேன்…
கேளாமல் நீ சென்றாய்…
என் மேல் காதல் தோன்றாதா…
பேசாமல் நீ வதைக்கிறாய்…

ஆண் : என் காதல் நீ காண மாட்டாயா…
மாட்டாயா…

BGM


Notes : En Vizhiyin Kanavu Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Madhan Karky. என் விழியின் பாடல் வரிகள்.


தொடக்கம் மாங்கல்யம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவிஜய் யேசுதாஸ், சச்சின் வாரியர் & திவ்யா எஸ் மேனன்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

Thodakkam Mangalyam Song Lyrics in Tamil


BGM

ஆண் : மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
ஆ… மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்…
ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்…

ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…

BGM

ஆண் : அடடா நீ அழகி என்று…
ஆா்ப்பாிப்பான் உன் கணவன்…
வெட்கத்தில் நீயும் கேட்பாய்…
நிஜமா என்று…

ஆண் : ஓ… கதை கொஞ்சம் மாறும்போது…
வாா்த்தைகளெல்லாம் பாழாகும்…
வாழ்வே ஓா் போா்க்களமாகும்…
ஹேஹே… நீ மோதிட வேண்டும்…

BGM

ஆண் : தாலி பொன் தாலி…
அது உன்னைக் கட்டும் வேலி…
கூடைக்குள்ளே மூச்சுமுட்டும்…
கல்யாணக் கோழி…

பெண் : தோழா என் தோழா…
நான் ஆகாயத்தின் மேலே…
பறந்துகொண்டே தேன் குடிப்பேன்…
தேன்சிட்டு போலே…

ஆண் : நினைக்கிற வாழ்க்கையெல்லாம்…
நினைப்பதுபோல் இருப்பதில்லை…
சிறகினை அடகுவைத்தால்…
பறவை வாழ்வில் சுகம் இல்லை…

பெண் : அணைப்பதும் அடங்கி நின்று…
தவிப்பதும் ஓா் மயக்கம்தானே…
நினைத்ததும் இனிப்பதென்ன ஒரு சொா்க்கம்…

ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…

ஆண் : மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
ஆ… மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
ஓ… பூவொன்றை பூட்டி வைக்கத்தான்…
ஓஓ கல்யாணம் கண்டுபிடித்தான்…

ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…


Notes : Thodakkam Mangalyam Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Pazhani Bharathi. தொடக்கம் மாங்கல்யம் பாடல் வரிகள்.


உன்னோடு வாழ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅன்னா கத்ரீனா & வளையில் சண்டிகோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

Unnodu Vazha Song Lyrics in Tamil


பெண் : உன்னோடு வாழ உன்னோடு சாக…
மண்ணோடு நான் வந்தேன்…
விண்மீன்களை எண்ணி கொண்டே…
உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய்…

பெண் : நீல் வானிலே வாள்மீன்களாய்…
வா போகலாம் வா வா என் இனையே…

பெண் : உன்னோடு வாழ உன்னோடு சாக…
மண்ணோடு நான் வந்தேன்…
விண்மீன்களை எண்ணி கொண்டே…
உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய்…

BGM

பெண் : கண்மூடி திறக்கின்ற நொடியினில் சில யுகம்…
வாழ்வோம் நாம் காண போகும்…
கனவை இன்றே வாழ்வோம்…

பெண் : ஏது நீ ஏது நான் கேட்காதே…
உடையா என் உயிரா…
நீ சொன்னால் கலைவேன்…

பெண் : உன்னோடு வாழ உன்னோடு சாக…
மண்ணோடு நான் வந்தேன்…
விண்மீன்களை எண்ணி கொண்டே…
உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய்…

பெண் : நீல் வானிலே வாள்மீன்களாய்…
வா போகலாம் வா வா என் இனையே…


Notes : Unnodu Vazha Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Madhan Karky. உன்னோடு வாழ பாடல் வரிகள்.