Category Archives: கேடி பில்லா கில்லாடி ரங்கா

Oru Porambokku Song Lyrics in Tamil

ஒரு பொறம்போக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சிலம்பரசன் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகேடி பில்லா கில்லாடி ரங்கா

Oru Porambokku Song Lyrics in Tamil


ஆண் : மச்சான் நாளைக்கு நியுயர்…
இன்னியோட இந்த குடிய விட்றோம்டா…
சத்தியம் டா சத்தியம்டா…

BGM

ஆண் : ஒரு பொறம்போக்கு முதல் முதலா…
சரக்கடிக்க கத்து தந்தான்…
அவன நானும் பாத்துபுட்டா சுட்டுடுவேன்டா…

ஆண் : அட எத்தனையோ நியூயரில்…
என்னென்னவோ விட்டிருக்கோம்…
இன்னயோட சரக்க நாம விட்டுடுவோம்டா…

ஆண் : யே குவாட்டருக்கு நோ…
பீருக்குதான் நோ…
சத்தியமா நோ…
இன்னயோட குடி நோ…

ஆண் : தலவலிக்கு நோ…
உளறலுக்கு நோ…
வாமிட்டுக்கு நோ…
இன்னயோட குடி நோ…

ஆண் : பல சரக்க அடிச்சிருக்கோம்…
புத்தி கெட்டுதான் அலைஞ்சிருக்கோம்…
வா நண்பா…

ஆண் : ப்ராண்டிக்குதான் நோ…
விஸ்கிக்குதான் நோ…
ஜின்னுக்குதான் நோ…
இன்னயோட குடி நோ…

ஆண் : பார்டிக்குதான் நோ…
போதைக்கு தான் நோ…
புரிஜிகிட்டேன் நோ…
இன்னயோட குடி நோ…

BGM

ஆண் : ப்ர்ஸ்ட்டு லவ்வு தோத்தவுடன்…
பீா் அடிக்க தோணும்…
அப்படிதான் மச்சி இதில் மாட்டிகிட்டேன் நானும்…

ஆண் : ஒரு பெக்கு உள்ள போனவுடன்…
போன் அடிக்க தோணும்…
என்ன சொன்ன என்ன கேட்டான்…
மறந்துடுவேன் நாளும்…

ஆண் : சந்தோஷத்துக்காக சரக்கடிச்சோம்டா…
அட துாக்கம் வந்தா கூட சரக்கடிச்சோம்டா…
வா நண்பா…

ஆண் : ஹே… லார்ஜ்க்குதான் நோ…
ஸ்மால்க்குதான் நோ…
கட்டிங்குக்கு நோ…
இன்னயோட குடி நோ…

ஆண் : பாரிங்க்கும் நோ…
லோக்கலுக்கும் நோ…
ஹாலிடேக்கும் நோ…
போடா போடா குடி நோ…

BGM

ஆண் : ஏழு எட்டு ஹாஃவ் பாய்லு…
உள்ள தள்ளி குடிச்சோம்…
அத்தனையும் சோ்த்து வச்சா…
கோழி பண்ண இருக்கும்…

ஆண் : உன் சிஸ்டரோட கல்யாணத்தில்…
பிரண்ட்ஸ சோ்த்து குடிச்சோம்…
அப்பனோட சொத்தை எல்லாம்…
அப்படித்தான் அழிச்சோம்…

ஆண் : பேச்சுலர் ஃலைப்ப என்ஜாய் பண்ணத்தான்…
இந்த நாத்தத்துக்குள்ள நாம விழுந்தோம்டா…
வா நண்பா…

ஆண் : அவன் கேப்பான் நோ…
இவன் கேப்பான் நோ…
மயங்காத நோ…
இன்னயோட குடி நோ…

ஆண் : வெறுப்பு வரும் நோ…
விரக்தி வரும் நோ…
வருந்தாத நோ…
செத்தாலும் குடி நோ…

ஆண் : ஒரு பொறம்போக்கு முதல் முதலா…
சரக்கடிக்க கத்து தந்தான்…
அவன நானும் பாத்துபுட்டா சுட்டுடுவேன்டா…

ஆண் : அட எத்தனையோ நியூயரில்…
என்னென்னவோ விட்டிருக்கோம்…
இன்னயோட சரக்க நாம விட்டுடுவோம்டா…

ஆண் : மாப்புள்ள கடைசியா ஒரு ஹாவ் சொல்லுவோமா…
நோ… ஒரு புல்லே சொல்லுவோம்…
இதுதான்டா நட்புக்கழகு…


Notes : Oru Porambokku Song Lyrics in Tamil. This Song from Kedi Billa Killadi Ranga (2013). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பொறம்போக்கு பாடல் வரிகள்.


சுடச்சுட தூரல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகேடி பில்லா கில்லாடி ரங்கா

Sudasuda Thooral Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுடச்சுட தூரல் பொழிவது நீதான்…
தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான்…
எதிர்பாராத பூகம்பம் நீயேதான்…
ஓஹோ… என்னை நான் காணும் ஆரம்பம் நீயேதான்…

ஆண் : முன்னிருப்பதும் நீதான்…
பின்னிருப்பதும் நீதான்…
என்ன சொல்வது எந்தன் நெஞ்சிலே…
உள்ளிருப்பது நீதான்…

ஆண் : சிக்கவைப்பதும் நீதான்…
சிக்கெடுப்பதும் நீதான்…
என்ன செய்வது என்னை இப்படி…
கத்த வைப்பதும் நீதான் நீதான்…

BGM

ஆண் : என்னிடம் உள்ள…
கெட்டதை நீ விலக்கி…
நல்லதையே கொடுத்தாய் தேவதையே…

ஆண் : நானே என்னை துறந்தேன் அடி…
நீயே உண்மை உணர்ந்தேன் அடி…

குழு : என்ன நினைத்தாலும் சொல்லிவிடுவேனே…
இப்பொழுது ஏனடி தயங்குகிறேன்…
சொல்லெல்லாம் நீயாகி போனாயே…

குழு : அன்னையிடம் கூட இப்படி ஓர் பாசம்…
கண்டதில்லை நான் என புரிகிறதே…
வாழ்வெல்லாம் நீ என்று ஆனாயே…

BGM

ஆண் : எப்பவும் உன்னை எண்ணியே கண் உறங்கி…
எத்தனையோ தினங்கள் ஆகியதே…
பூவே உன் முன் இருந்தேன் அடி…
ஆனால் இன்றே வாழ்ந்தேன் அடி…

குழு : உன்னை ஒரு பாதி என்று நினைக்காமல்…
அத்தனையும் நீயென நினைப்பதிலே…
நாளெல்லாம் தீர்ந்தாலே சந்தோஷம்…

குழு : தொல்லை என நீயும் என்னை நினைத்தாலே…
நிம்மதியை நீ பெற துணை புரிந்து…
சாவை நான் சேர்ந்தாலும் சந்தோஷம்…

BGM


Notes : Sudasuda Thooral Song Lyrics in Tamil. This Song from Kedi Billa Killadi Ranga (2013). Song Lyrics penned by Yugabharathi. சுடச்சுட தூரல் பாடல் வரிகள்.


கொஞ்சும் கிளி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவேல்முருகன்யுவன் சங்கர் ராஜாகேடி பில்லா கில்லாடி ரங்கா

Konjum Kili Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்சும் கிளி பாட வச்சா…
கும்மாலமும் போட வச்சா…
வீதியில ஆட வச்சாடா…

ஆண் : கோயிலில சூடம் வச்சா…
கொண்டையில பூவும் வச்சா…
பார்வையில காந்தம் வச்சாடா…

ஆண் : வெட்கம் அத தள்ளி வச்சா…
விலங்காம புள்ளி வச்சா…
அத்தனையும் சொல்லி வச்சாடா…
அந்த புள்ளை ஏதோ…
அப்படியே துள்ளி வச்சாடா…

BGM

குழு : ஊதுபத்தி போல…
என்ன வாசம் வீச வச்சா…
தன்னந்தனியாக என்ன…
தானே பேச வச்சா…

குழு : சூரியன போல அவ…
கண்ணுலதான் பார்வையில…
சூரதேங்கா ஆனேன்டா…

குழு : கட்டிவச்ச பூவெடுத்து…
கூந்தலுல வெக்கயில…
நாரா நானும் போனேன்டா…

குழு : ரெட்டகிளி தீபெட்டியா…
நெஞ்சு குழி பத்திக்குச்சு…
ஒன்னும் வேணான்டா…

குழு : ஆயிசுக்கும் அந்த புள்ள…
ஒன்னு மட்டும் போதுமுன்னு…
ஜோரா வாழ்ந்து சாவேண்டா…

ஆண் : கொஞ்சும் கிளி பாட வச்சா…
கும்மாலமும் போட வச்சா…
வீதியில ஆட வச்சாடா…

ஆண் : கோயிலில சூடம் வச்சா…
கொண்டையில பூவும் வச்சா…
பார்வையில காந்தம் வச்சாடா…

BGM

குழு : போகயில அந்த புள்ள…
பொண்ணு மாரி…
பொக்குனு சிரிக்கயில…
முத்து மாரி…

குழு : கால் கொலுச பார்க்கயில…
வெள்ளி மாரி…
போடா அவ மாரி…

குழு : யாரு பொழிவா…
யாரு பொழிவா…
பூமியில காதல் பூ மாரி…

குழு : கத்திரி வெயிலு உச்சியில வீச…
அப்படி குளிரும் அந்த புள்ள பேச…

குழு : சாராயத்தில் ஏது போத…
அந்த புள்ள பாத்தா…
சட்டுனுதான் மாறும் பாத…
தான தன்னானானே…

குழு : முன்னால நான் காமராசு…
அந்த புள்ளையால…
இப்போ நானும் தேவதாசு…
தான தனனானா னானே…

BGM


Notes : Konjum Kili Song Lyrics in Tamil. This Song from Kedi Billa Killadi Ranga (2013). Song Lyrics penned by Yugabharathi. கொஞ்சும் கிளி பாடல் வரிகள்.


தெய்வங்கள் எல்லாம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ்யுவன் சங்கர் ராஜாகேடி பில்லா கில்லாடி ரங்கா

Dheivangal Ellam Song Lyrics in Tamil


ஆண் : தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…
தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்…
தந்தை அன்பின் பின்னே…

ஆண் : தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை…
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை…

ஆண் : என்னுயிர் அணுவில் வரும் உன்உயிர் அல்லவா…
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா…
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்…

ஆண் : தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…
தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்…
தந்தை அன்பின் பின்னே…

BGM

ஆண் : கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம்…
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம்…
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்…
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்…

ஆண் : வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்…
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்…
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…

BGM

ஆண் : தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…
தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்…
தந்தை அன்பின் பின்னே…


Notes : Dheivangal Ellam Song Lyrics in Tamil. This Song from Kedi Billa Killadi Ranga (2013). Song Lyrics penned by Na. Muthu Kumar. தெய்வங்கள் எல்லாம் பாடல் வரிகள்.