ஒரு பொறம்போக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சிலம்பரசன் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகேடி பில்லா கில்லாடி ரங்கா

Oru Porambokku Song Lyrics in Tamil


ஆண் : மச்சான் நாளைக்கு நியுயர்…
இன்னியோட இந்த குடிய விட்றோம்டா…
சத்தியம் டா சத்தியம்டா…

—BGM—

ஆண் : ஒரு பொறம்போக்கு முதல் முதலா…
சரக்கடிக்க கத்து தந்தான்…
அவன நானும் பாத்துபுட்டா சுட்டுடுவேன்டா…

ஆண் : அட எத்தனையோ நியூயரில்…
என்னென்னவோ விட்டிருக்கோம்…
இன்னயோட சரக்க நாம விட்டுடுவோம்டா…

ஆண் : யே குவாட்டருக்கு நோ…
பீருக்குதான் நோ…
சத்தியமா நோ…
இன்னயோட குடி நோ…

ஆண் : தலவலிக்கு நோ…
உளறலுக்கு நோ…
வாமிட்டுக்கு நோ…
இன்னயோட குடி நோ…

ஆண் : பல சரக்க அடிச்சிருக்கோம்…
புத்தி கெட்டுதான் அலைஞ்சிருக்கோம்…
வா நண்பா…

ஆண் : ப்ராண்டிக்குதான் நோ…
விஸ்கிக்குதான் நோ…
ஜின்னுக்குதான் நோ…
இன்னயோட குடி நோ…

ஆண் : பார்டிக்குதான் நோ…
போதைக்கு தான் நோ…
புரிஜிகிட்டேன் நோ…
இன்னயோட குடி நோ…

—BGM—

ஆண் : ப்ர்ஸ்ட்டு லவ்வு தோத்தவுடன்…
பீா் அடிக்க தோணும்…
அப்படிதான் மச்சி இதில் மாட்டிகிட்டேன் நானும்…

ஆண் : ஒரு பெக்கு உள்ள போனவுடன்…
போன் அடிக்க தோணும்…
என்ன சொன்ன என்ன கேட்டான்…
மறந்துடுவேன் நாளும்…

ஆண் : சந்தோஷத்துக்காக சரக்கடிச்சோம்டா…
அட துாக்கம் வந்தா கூட சரக்கடிச்சோம்டா…
வா நண்பா…

ஆண் : ஹே… லார்ஜ்க்குதான் நோ…
ஸ்மால்க்குதான் நோ…
கட்டிங்குக்கு நோ…
இன்னயோட குடி நோ…

ஆண் : பாரிங்க்கும் நோ…
லோக்கலுக்கும் நோ…
ஹாலிடேக்கும் நோ…
போடா போடா குடி நோ…

—BGM—

ஆண் : ஏழு எட்டு ஹாஃவ் பாய்லு…
உள்ள தள்ளி குடிச்சோம்…
அத்தனையும் சோ்த்து வச்சா…
கோழி பண்ண இருக்கும்…

ஆண் : உன் சிஸ்டரோட கல்யாணத்தில்…
பிரண்ட்ஸ சோ்த்து குடிச்சோம்…
அப்பனோட சொத்தை எல்லாம்…
அப்படித்தான் அழிச்சோம்…

ஆண் : பேச்சுலர் ஃலைப்ப என்ஜாய் பண்ணத்தான்…
இந்த நாத்தத்துக்குள்ள நாம விழுந்தோம்டா…
வா நண்பா…

ஆண் : அவன் கேப்பான் நோ…
இவன் கேப்பான் நோ…
மயங்காத நோ…
இன்னயோட குடி நோ…

ஆண் : வெறுப்பு வரும் நோ…
விரக்தி வரும் நோ…
வருந்தாத நோ…
செத்தாலும் குடி நோ…

ஆண் : ஒரு பொறம்போக்கு முதல் முதலா…
சரக்கடிக்க கத்து தந்தான்…
அவன நானும் பாத்துபுட்டா சுட்டுடுவேன்டா…

ஆண் : அட எத்தனையோ நியூயரில்…
என்னென்னவோ விட்டிருக்கோம்…
இன்னயோட சரக்க நாம விட்டுடுவோம்டா…

ஆண் : மாப்புள்ள கடைசியா ஒரு ஹாவ் சொல்லுவோமா…
நோ… ஒரு புல்லே சொல்லுவோம்…
இதுதான்டா நட்புக்கழகு…


Notes : Oru Porambokku Song Lyrics in Tamil. This Song from Kedi Billa Killadi Ranga (2013). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பொறம்போக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading