Category Archives: நிலவே முகம் காட்டு

நிலவே முகம் காட்டு – Nilave Mugam Kaattu (1999)

வைகை நதிக்கரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன்இளையராஜாநிலவே முகம் காட்டு

Vaigai Nadhikkarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…
வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

ஆண் : கண்கள் கலங்காதே நெஞ்சம் மயங்காதே…
இங்கே உறவுண்டு என்றும் மறக்காதே…
ஏழை எளியோரைதான் பூமி தாங்காதா…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

BGM

ஆண் : துன்ப மழை தன்னை தாங்கும்…
சிறு குடை நான் ஆவேன்…
வேனில் அனல் தன்னில் தாகம் தனித்திடும்…
நீர் ஆவேன்…

ஆண் : போகும் வழி எங்கும் உன்னை தொடர்ந்திடும்…
காற்றாவேன்…
சோகம் வருகையில் துன்பம் துடைத்திடும்…
பாட்டாவேன்…

ஆண் : ஏன் இந்த வாழ்க்கை என்று…
ஏங்குகின்ற ஏழை இங்கு ஓர் கோடி…
யாருக்கிங்கே சோகம் இல்லை…
யார் மனதில் பாரம் இல்லை யம்மாடி…

ஆண் : நல்ல நாட்கள் நமக்கிருக்கு…
அந்த நம்பிக்கைதான் வந்துவிட்டால்…
சோகம் இல்லை…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

BGM

ஆண் : நெஞ்சம் கனத்திடும் என்ன…
சுமைகளை தாங்காதே…
இந்த உலகத்தை பார்க்க வேண்டும்…
என்று ஏங்காதே…

ஆண் : கற்பனை கோட்டைகள் கட்டும் பேச்சுக்களை…
காதில் வாங்காதே…
ஓட்டை குடிசையில் இன்பம் இல்லை…
என எண்ணாதே…

ஆண் : ஏழைக்கொரு ஏழை துணை…
எவ்வுயிர்க்கும் தெய்வம் துணை பொன் மானே…
நெஞ்சில் ஒரு வஞ்சம் இல்லை…
நேசத்திற்கு பஞ்சம் இல்லை விண்மீனே…

ஆண் : நல்ல வாழ்க்கை வந்து தீரும்…
வரவில்லை என்றால் தெய்வங்கள்தான்…
பொய் அடியோ…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
யேஹே… வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…


Notes : Vaigai Nadhikkarai Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Vasan. வைகை நதிக்கரை பாடல் வரிகள்.


சுற்றாதே பூமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்கலையரசிஇளையராஜாநிலவே முகம் காட்டு

Suttrathe Bhoomithaye Song Lyrics in Tamil


பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…

BGM

பெண் : வீசாதே தென்றல் காற்றே நில்லு…
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு…

பெண் : கோடி விண்மீன்களில் எந்தன் விண்மீன் எங்கே…
என்னை தாலாட்டுமே அந்த ராகம் எங்கே…
எந்தன் சொர்கத்தை சொல்கின்ற சொல் ஏது…

பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…

BGM

பெண் : அதி காலையில் துயில் வேளையில்…
கனவாக தீண்டிவிட்டு நீ போனாய்…
துயில் நீங்கினேன் உன்னை தேடினேன்…
விழி தாண்டி தூரம் என்று நீ ஆனாய்…

BGM

பெண் : உள்ளுக்குள் உன்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணில் என்னை காண வேண்டும்…
வானத்தில் வெண்ணிலாவின் வீதி…
சொல்லாதோ உன்னை காணும் தேதி…

பெண் : உந்தன் தோளில் பூவாய் விழ வேண்டும்…
எந்தன் சோகம் சொல்லி அழ வேண்டும்…
அந்த நாள் காண என் நெஞ்சம் தவிக்கும்… ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…
வீசாதே தென்றல் காற்றே நில்லு…
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு…

BGM

பெண் : ஒரு நாழிகை உன்னை பார்த்த பின்…
மீண்டும் பார்வை போகும் இனி போகட்டும்…
உந்தன் தேன் குரல் கொஞ்சம் கேட்ட பின்…
எந்தன் ஜீவன் ஓயும் இனி ஓயட்டும்…

பெண் : என்றேனும் உன்னை காண கூடும்…
என்று எண்ணி எந்தன் ஜீவன் வாழும்…
சாகாத காதல் வரம் வேண்டும்…
ஓயாமல் உன்னை தொழ வேண்டும்…

பெண் : காற்றை தேடும் புல்லாங்குழல் போலே…
ஏங்கி பாடும் ஒற்றை குயில் ஆனேன்…
உன்னை காணாமல் என் கண்கள் தூங்காது…

பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…
வீசாதே தென்றல் காற்றே நில்லு…
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு…


Notes : Suttrathe Bhoomithaye Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Vasan. சுற்றாதே பூமி பாடல் வரிகள்.


தென்றலைக் கண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன் & இளையராஜாஇளையராஜாநிலவே முகம் காட்டு

Thendralai Kandukolla Song Lyrics in Tamil


ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…

BGM

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…

ஆண் : நெஞ்சின் வண்ணங்களை…
ஓடும் எண்ணங்களை…
காண கண் வேண்டுமா பேச சொல் வேண்டுமா…
மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…

BGM

ஆண் : உன்னைப் பார்த்தொரு குயில் கூவுதே…
அந்த காதல் தேன் குரல் கேட்டாயோ…

BGM

ஆண் : உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே…
ஈர காற்று காதல் சொல்லக் கண்டாயா…

BGM

ஆண் : உன்னை நான் எண்ணுகின்ற நேரம்…
உள்ளுக்குள் மார்கழி மாதம்…
அன்பே நான் உன்னைக் காணும் நேரம்…
கண்ணுக்குள் கார்த்திகை தீபம்…

ஆண் : கண்கள் இன்றி என்னைக் கண்டுகொள்வாய்…
என்று நீ என் காதல் கண்டுகொள்வாய்…
அந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…

BGM

ஆண் : சோலை பூவனம் தேடும் பூவினம்…
எந்தன் நெஞ்சில் பூப்பறிக்க வந்தாளோ…

BGM

ஆண் : அந்த வெண்ணிலா தேடும் பெண்ணிலா…
எந்தன் நெஞ்சை வானம் என்று கொண்டாளோ…

BGM

ஆண் : ஹோ… சந்தன சந்திரனின் பாட்டு…
சந்தங்கள் சொன்னதடி நேற்று…
சொல்லாத ஏக்கங்களைச் சேர்த்து…
நீதானே என்னைத் தொட்ட காற்று…

ஆண் : அதிகாலை மாலை இரவென்ன…
அதன் துன்பம் இன்பம் தந்ததென்ன…
என்று மௌனத்தின் வாசலைத் திறப்பாய்…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…

ஆண் : நெஞ்சின் வண்ணங்களை…
ஓடும் எண்ணங்களை…
காண கண் வேண்டுமா பேச சொல் வேண்டுமா…
மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…


Notes : Thendralai Kandukolla Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Vasan. தென்றலைக் கண்டு பாடல் வரிகள்.


சிட்டு பறக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஷங்கர் மகாதேவன் & சுஜாதா மோகன்இளையராஜாநிலவே முகம் காட்டு

Chittu Parakkuthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்…
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி…
யாருமில்ல ஒரு வட்டாரத்தில்…
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ…

பெண் : ஒரு மொட்டு மலருது ரோசா…
இங்கு முத்து குளிப்பது ராசா…
மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி…

ஆண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்…
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி…

பெண் : யாருமில்ல ஒரு வட்டாரத்தில்…
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ…

BGM

ஆண் : வெள்ளி கொலுசொலி கேட்டால்…
விழிகள் தேடும் மனம் விரும்பி பாடும்…
தங்க மணி குரல் கேட்டால்…
தவழ்ந்து ஆடும் பொங்கி மனம் ததும்பி ஓடும்…

பெண் : சின்ன சின்ன நெஞ்சில் வந்த கனவுகள்…
என்னை மயக்குது ஏனோ…
வண்ண வண்ணக்கிளி உன்னை சுற்றி சுற்றி…
வட்டமடித்திட தானோ…

ஆண் : ஆ தொட்டு தொட்டு விளையாடும் காற்று…
தொட்டில் கட்டி தாலாட்டு பாடும்…

பெண் : ஒரு சித்திரை பெண்ணுக்கு மாலை…
வரும் சித்திரையில் ஒரு ஓலை…

ஆண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்…
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி…

பெண் : யாருமில்ல ஒரு வட்டாரத்தில்…
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ…

ஆண் : ஒரு மொட்டு மலருது ரோசா…
இங்கு முத்து குளிப்பது ராசா…
மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி…

BGM

பெண் : மஞ்சள் அரைக்குது வானம் எனக்குதானே…
தினம் எனக்குதானே…
நெஞ்சை இழுக்குது ராகம் உனக்கு நானே…
இனி இங்கு உனக்கு நானே…

ஆண் : இடை அசையுது இசை பிறக்குது…
கொடி பறக்குது மேலே…
மணி முடிகளும் மலை சிகரமும்…
மலர் அடிகளின் கீழே…

பெண் : ஆ முத்து முத்து நீர் தூவும் மேகம்…
சுற்றி வந்து பூ தூவி போகும்…

ஆண் : புது இரத்தின கம்பளம் போடு…
முத்து முத்து தமிழிசை பாடு…

பெண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்…
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி…

ஆண் : யாருமில்ல ஒரு வட்டாரத்தில்…
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ…

பெண் : ஒரு மொட்டு மலருது ரோசா…
இங்கு முத்து குளிப்பது ராசா…
ஆண் : மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி…

பெண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்…
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி…

ஆண் : யாருமில்ல ஒரு வட்டாரத்தில்…
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ…


Notes : Chittu Parakkuthu Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Mu. Metha. சிட்டு பறக்குது பாடல் வரிகள்.