வைகை நதிக்கரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன்இளையராஜாநிலவே முகம் காட்டு

Vaigai Nadhikkarai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…
வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

ஆண் : கண்கள் கலங்காதே நெஞ்சம் மயங்காதே…
இங்கே உறவுண்டு என்றும் மறக்காதே…
ஏழை எளியோரைதான் பூமி தாங்காதா…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

—BGM—

ஆண் : துன்ப மழை தன்னை தாங்கும்…
சிறு குடை நான் ஆவேன்…
வேனில் அனல் தன்னில் தாகம் தனித்திடும்…
நீர் ஆவேன்…

ஆண் : போகும் வழி எங்கும் உன்னை தொடர்ந்திடும்…
காற்றாவேன்…
சோகம் வருகையில் துன்பம் துடைத்திடும்…
பாட்டாவேன்…

ஆண் : ஏன் இந்த வாழ்க்கை என்று…
ஏங்குகின்ற ஏழை இங்கு ஓர் கோடி…
யாருக்கிங்கே சோகம் இல்லை…
யார் மனதில் பாரம் இல்லை யம்மாடி…

ஆண் : நல்ல நாட்கள் நமக்கிருக்கு…
அந்த நம்பிக்கைதான் வந்துவிட்டால்…
சோகம் இல்லை…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

—BGM—

ஆண் : நெஞ்சம் கனத்திடும் என்ன…
சுமைகளை தாங்காதே…
இந்த உலகத்தை பார்க்க வேண்டும்…
என்று ஏங்காதே…

ஆண் : கற்பனை கோட்டைகள் கட்டும் பேச்சுக்களை…
காதில் வாங்காதே…
ஓட்டை குடிசையில் இன்பம் இல்லை…
என எண்ணாதே…

ஆண் : ஏழைக்கொரு ஏழை துணை…
எவ்வுயிர்க்கும் தெய்வம் துணை பொன் மானே…
நெஞ்சில் ஒரு வஞ்சம் இல்லை…
நேசத்திற்கு பஞ்சம் இல்லை விண்மீனே…

ஆண் : நல்ல வாழ்க்கை வந்து தீரும்…
வரவில்லை என்றால் தெய்வங்கள்தான்…
பொய் அடியோ…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
யேஹே… வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…


Notes : Vaigai Nadhikkarai Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Vasan. வைகை நதிக்கரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading