அடி வெளுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராஇளையராஜாநடிகன்

Adi Veluthu Song Lyrics in Tamil


குழு : வாத்தியாரே பாட்டு வாத்தியாரே…
சூட்டு கோட்டு மட்டும் மாட்டுவாரே…
சரிகம போய் படிப்போமா…
சங்கதியில் போய் குளீப்போமா…
யய்யய்யா யய்யாய்யா… ஆஆஆ…

—BGM—

பெண் : அடி வெளுத்துப் போச்சு தாடி…
ரொம்ப உளுத்துப் போச்சு பாடி…
இப்ப சுருங்கிப் போச்சு நாடி…
இவர் ஜெயிக்கப் போறார் பாடி…

பெண் : பார்ப்போமா உங்க எட்டுக் கட்டை சாரீரம்…
கேட்போமா உங்க தட்டுக் கெட்ட சங்கீதம்…

குழு : ஆத்தாடி அப்படி போடு வீராப்பு காட்டி…
இந்த தாத்தாதான் பொண்ணுங்களோடு போட்டாரே போட்டி…

பெண் : அடி வெளுத்துப் போச்சு தாடி…
ரொம்ப உளுத்துப் போச்சு பாடி…
இப்ப சுருங்கிப் போச்சு நாடி…
இவர் ஜெயிக்கப் போறார் பாடி…

—BGM—

ஆண் : வீரம் சங்கீதம் என் பாட்டன் சொத்து…
ஞானம் உண்டாகும் என் வீட்டை சுத்து…

—BGM—

பெண் : போதும் உன் பாட்டு நிப்பாட்டு இப்போ…
ஆந்தை செம்மாங்குயில் ஆவதெப்போ…

ஆண் : பைரவி ரஞ்சனி செஞ்ருட்டி…
என்னிடம் நின்றிடும் கையக்கட்டி…

பெண் : வச்சிக்க வச்சிக்க மூட்டைக்கட்டி…
உன்னிடம் உள்ளது ஓட்டச்சட்டி…

ஆண் : பணக்காரன் பெத்துப் போட்ட சீமாட்டியே…
வரலாமா நம்மகிட்ட வாலாட்டியே…
அடியே நீ கேட்டுப் பாரேன் ஆலாபனை…
கழுதைக்கு தெரியாதம்மா பூ வாசனை…

ஆண் : பாம கபமக ரிகமகரி…
மாம ரிமகரி ஸகரிஸரி…
ஸாஸஸாஸஸஸ ரிரிரிரிரி…
காககாககக மபமகரிஸ…

ஆண் : குதிரை வாலு கொண்டை…
இது கிட்டப்பாவின் தொண்டை…
நீங்க வச்சுக்காதே சண்டை…
அடி வீங்கிப் போகும் மண்டை…

ஆண் : கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது…
தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு…
ஆத்தாடி அப்படி போடு வீராப்பைக் காட்டி…
அடி கூத்தாடி குப்புற சாய்ஞ்சி போடாதே போட்டி…

—BGM—

ஆண் : மூக்கும் புல்லாக்கும் ஏன் மோதுதடி…
மோகம் உண்டாகும் என் பாட்டுபடி…

பெண் : மாட்டுப் புண்ணாக்கு உன் பாட்டுகள்தான்…
போடு உன் வாய்க்கு நீ பூட்டுகள்தான்…

ஆண் : முட்டையை விக்குற கோழிகளா…
முட்டிட என்னிடம் வாரீகளா…

பெண் : பட்டதும் சுட்டதும் பத்தலையா…
புத்தியும் இன்னமும் முத்தலையா…

ஆண் : பியூசி பிஎஸ்சிதான் என்னாச்சுடி…
ஏபிசி தெரியாமதான் நின்னாச்சுடி அடி…
மரவட்டை ரெயிலப் போல ஓடாதடி… ஹ்ஹூ…
கொசுவெல்லாம் குயிலப் போல பாடாதடி…

ஆண் : பாம கபமக ரிகமகரி…
மாம ரிமகரி ஸகரிஸரி…
ஸாஸஸாஸஸஸ ரிரிரிரிரி…
காககாககக மபமகரிஸ…

ஆண் : குதிரை வாலு கொண்டை…
இது கிட்டப்பாவின் தொண்டை…
நீங்க வெச்சுக்காதே சண்டை…
அடி வீங்கிப் போகும் மண்டை…

ஆண் : கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது…
தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு…
ஆத்தாடி அப்படி போடு வீராப்பைக் காட்டி…
அடி கூத்தாடி குப்புற சாய்ஞ்சி போடாதே போட்டி…

ஆண் : அடி குதிரை வாலு கொண்டை…
இது கிட்டப்பாவின் தொண்டை…
நீங்க வெச்சுக்காதே சண்டை…
அடி வீங்கிப் போகும் மண்டை…


Notes : Adi Veluthu Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Vaali. அடி வெளுத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading