Category Archives: வீர தாலாட்டு

கதை போல தோணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஇளையராஜாஇளையராஜாவீர தாலாட்டு

Katha Pola Thonum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…
கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…

ஆண் : இந்த மண்ணுல விளைஞ்ச கதை இது…
ஈர நெஞ்சுல நனைஞ்ச கதை இது…

ஆண் : இது கதையா ஆனாலும்…
வெறும் கனவா போனாலும்…
ஒரு வரலாறுதான் வீரத் தாலாட்டுத்தான்…

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…

BGM

ஆண் : பத்து மாதம் கோவில் வாசம்…
தாய் வயிற்றில் ஆனது…
பக்குவமாய் அவள்தான் என்னை…
மனிதனாக்கி வைத்தது…

ஆண் : அன்னை தந்த பால் குடித்து…
அன்பு பாசம் வந்தது…
அவள் படித்த பாட்டுதானே…
அறிவு சொல்லி தந்தது…

ஆண் : நான் போகும் பாதை எல்லாம்…
தாய் போட்டு வைத்தது…
எனை சேரும் செல்வம் எல்லாம்…
அவள் பார்த்து விதைத்து…

ஆண் : ஆயிரம் வந்தது ஆயிரம் போனது…
தாய் மட்டும் நிரந்தரமானது…

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…

BGM

ஆண் : கட்ட பொம்மன் போல ஒரு வீரன்…
இந்த மண்ணில் வர…
பாட்டு சொன்ன தாய் பட்ட துன்பம்…
சொல்ல கூடுமோ…

ஆண் : புத்தன் யேசு காந்தி போல…
பிள்ளை உருவாகி வர…
பெத்தடுத்த தாயி சொன்ன…
பாட்டெழுதி தீருமோ…

ஆண் : ஊரை ஆண்டு நாட்டை ஆண்டு…
உலகை கூட அழலாம்…
மண்ணை விட்டு வானின் மீது…
கொடியை கூட ஏற்றலாம்…

ஆண் : கருவறை வழிவந்த உறவெனும் எல்லையை…
மீறிட இங்கே ஆகுமோ…

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…

BGM

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…


Notes : Katha Pola Thonum Song Lyrics in Tamil. This Song from Veera Thalattu (1998). Song Lyrics penned by Kasthuri Raja. கதை போல தோணும் பாடல் வரிகள்.


சாந்து பொட்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஅருண்மொழி & சுவர்ணலதாஇளையராஜாவீர தாலாட்டு

Saanthu Pottu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாந்து பொட்டும் சந்தன பொட்டும்…
தல தளக்குற சரிகை பட்டும்…
எம்மனசுல கொக்கி போடுது நாகரத்தினமே…

BGM

குழு : அடி சாந்து பொட்டும் சந்தன பொட்டும்…
தல தளக்குற சரிகை பட்டும்…
எம்மனசுல கொக்கி போடுது நாகரத்தினமே…

ஆண் : நடு சமத்துல உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…

குழு : நடு சமத்துல உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…

BGM

பெண் : வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு…
வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு…
வெடலப்புள்ள சமஞ்சிருக்கு…
கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது ஆச ராசாவே…

BGM

குழு : வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு…
வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு…
வெடலப்புள்ள சமஞ்சிருக்கு…
கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது ஆச ராசாவே…

பெண் : அட கனிஞ்ச பழத்த குருவி கொத்துது ஆச ராசாவே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும் ஆச ராசாவே…

குழு : அட கனிஞ்ச பழத்த குருவி கொத்துது ஆச ராசாவே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும் ஆச ராசாவே…

BGM

ஆண் : பாதி ராத்திரி பதறி எழுந்து பாய விரிச்சி முழிச்சிருந்தேன்…

BGM

ஆண் : அட பாதி ராத்திரி பதறி எழுந்து பாய விரிச்சி முழிச்சிருந்தேன்…
முழிச்சிருந்தும் கனவு வந்ததும் நாகரத்தினமே…

குழு : பாதி ராத்திரி பதறி எழுந்து பாய விரிச்சி முழிச்சிருந்தேன்…
முழிச்சிருந்தும் கனவு வந்ததும் நாகரத்தினமே…

ஆண் : ஒரு மாதிரியா மனசு கெட்டது நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…

பெண் : சோறு தண்ணி இறங்கலையே…
வேலை செய்ய தோனலையே…
சோறு தண்ணி இறங்கலையே…
வேலை செய்ய தோனலையே…
என் நெனப்பும் எங்கிட்ட இல்லையே ஆச ராசாவே…

குழு : சோறு தண்ணி இறங்கலையே…
வேலை செய்ய தோனலையே…
என் நெனப்பும் எங்கிட்ட இல்லையே ஆச ராசாவே…

பெண் : ஒரு மாதிரியா மயக்கம் வருது ஆச ராசாவே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும் ஆச ராசாவே…

BGM

ஆண் : ஏரு புடிச்சு உழுகையில்ல…
ஏத்தம் கட்டி இறைக்கையிலே…
அடி ஏரு புடிச்சு உழுகையில்ல…
ஏத்தம் கட்டி இறைக்கையிலே…
தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே…

குழு : ஏரு புடிச்சு உழுகையில்ல…
ஏத்தம் கட்டி இறைக்கையிலே…
தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே…

ஆண் : ராத்திரி பகலு தெரியலையே நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…

BGM

பெண் : கூடி சனங்க இருக்கையிலே…
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே…
கூடி சனங்க இருக்கையிலே…
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே…
ஆடி அடங்கி நான் கிடக்கேன் ஆச ராசாவே…

குழு : கூடி சனங்க இருக்கையிலே…
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே…
ஆடி அடங்கி நான் கிடக்கேன் ஆச ராசாவே…

பெண் : அத ஊரு முழுக்க ஜாடை பேசுது ஆச ராசாவே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும் ஆச ராசாவே…


Notes : Saanthu Pottu Song Lyrics in Tamil. This Song from Veera Thalattu (1998). Song Lyrics penned by Kasthuri Raja. சாந்து பொட்டும் பாடல் வரிகள்.


கும்பாபிஷேகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாவீர தாலாட்டு

Kumbhabhisekham Song Lyrics in Tamil


BGM

ஆண் : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான்…
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்…

BGM

ஆண் : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான்…
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்…

குழு : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான்…
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்…

ஆண் : என் மனசு பாடுது ஜின்ஜினுக்குத்தான்…
குழு : ஹேய்…
ஆண் : ரயிலு பெட்டி ஓடுது இன்சினுக்குத்தான்…
குழு : ஹேய்…
ஆண் : அட ஊரெல்லாம் கேட்குது…
குழு : டன்டனுக்கு டன்டனுக்கு…

குழு : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான்…
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்…

குழு : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான்…
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்…

BGM

ஆண் : மாராப்ப ஓரங்கட்டி மனசோட மல்லுக்கட்டி…
என்ன கட்டிபோடுறியா சரியா சரியா சரியா எம்மானே…

BGM

ஆண் : மாராப்ப ஓரங்கட்டி மனசோட மல்லுக்கட்டி…
என்ன கட்டிபோடுறியா சரியா சரியா சரியா எம்மானே…

BGM

பெண் : களவாணி கண்ணு கண்ணு வைக்குது…
கத்தாழ போல என்ன குத்துது…
வெள்ளாம காடு பூத்திருக்குது…
வெள்ளாடு மேய காத்திருக்குது…

ஆண் : தலை மேல கூடை வைச்சு…
பொலிமேல போற புள்ள…

குழு : அம்ம்ம்ம்ம மம்மம் மம்ம்மா…
அய்ய்ய்ய்ய யய்ய்ய அய்யைய…

ஆண் : தடை போட்ட காலத்துல…
பல நாளா தூக்கமில்லை…

குழு : அம்ம்ம்ம்ம மம்மம் மம்ம்மா…
அய்ய்ய்ய்ய யய்ய்ய அய்யைய…

பெண் : உன் நினைப்பில் நானிருக்க…
என் நினைப்பில் நீயிருக்க…
உன் கணக்கும் என் கணக்கும் டண்டனுக்குத்தான்…

ஆண் : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான்…
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்…

பெண் : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான்…
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்…

BGM

பெண் : பாவாட ஏத்திகட்டி கடலோரம் குளிக்கையிலே…
எட்டி எட்டி பார்குறியே சரியா சரியா சரியா எம்மாமா…

BGM

பெண் : பாவாட ஏத்திகட்டி கடலோரம் குளிக்கையிலே…
எட்டி எட்டி பார்குறியே சரியா சரியா சரியா எம்மாமா…

BGM

ஆண் : பொழுதாகி போனா கொந்தளிக்குது…
பழுதாகித்தானா நெஞ்சடிகுது…
வெளையாடத்தானே ஆசை வைக்குது…
ரதியோட காமன் பூச வைக்குது…

பெண் : மடிப்பான மல்லு வேட்டி…
துடிப்பாக ஏத்திகட்டி…

குழு : அம்ம்ம்ம்ம மம்மம் மம்ம்மா…
அய்ய்ய்ய்ய யய்ய்ய அய்யைய…

பெண் : மைசூரு செண்டு போட்டு…
வாரியே வளைச்சு கட்டி…

குழு : அம்ம்ம்ம்ம மம்மம் மம்ம்மா…
அய்ய்ய்ய்ய யய்ய்ய அய்யைய…

ஆண் : பஞ்சும் தீயும் ஒட்டிகிச்சு…
பக்குன்னுதான் பத்திக்கிச்சு…
உன் கணக்கும் என் கணக்கும் டண்டனுக்குத்தான்…

பெண் : ஆ… கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான்…
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்…
கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான்…
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்…

பெண் : என் மனசு பாடுது ஜின்ஜினுக்குத்தான்…
குழு : ஹேய்…
பெண் : ரயிலு பெட்டி ஓடுது இன்சினுக்குத்தான்…
குழு : ஹேய்…
பெண் : அட ஊரெல்லாம் கேட்குது…
குழு : டன்டனுக்கு டன்டனுக்கு…

ஆண் : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான்…
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்…

பெண் : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான்…
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்…


Notes : Kumbhabhisekham Song Lyrics in Tamil. This Song from Veera Thalattu (1998). Song Lyrics penned by Kasthuri Raja. கும்பாபிஷேகம் பாடல் வரிகள்.


Vaadipatti Song Lyrics in Tamil

வாடிப்பட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாகங்கை அமரன் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாவீர தாலாட்டு

Vaadipatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு…
வாக்கப்பட்டு வாரம்ன்னு…
வாக்கு சொல்லி போனவளே…
நாகரத்தினமே…

ஆண் : ஏ… வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு…
வாக்கப்பட்டு வாரம்ன்னு…
வாக்கு சொல்லி போனவளே…
நாகரத்தினமே…

ஆண் : இப்ப வாச கதவ சாத்துறியே…
நாகரத்தினமே…
என்னைய மோசம் பண்ண பார்க்குறியே…
நாகரத்தினமே…

ஆண் : இப்ப வாச கதவ சாத்துறியே…
நாகரத்தினமே…
என்னைய மோசம் பண்ண பார்க்குறியே…
நாகரத்தினமே…

BGM

பெண் : கூடலூரு கோணகண்ணேன்…
கூடலூரு கோணகண்ணேன்…
கூட நகை தாரம்ன்னு…
கொலம்பி புட்டான் எங்கப்பன் மனச…
ஆச ராசாவே…

BGM

பெண் : கூடலூரு கோணகண்ணேன்…
கூட நகை தாரம்ன்னு…
கொலம்பி புட்டான் எங்கப்பன் மனச…
ஆச ராசாவே…

பெண் : ஆனால் நேசம் மட்டும் மாறாதுங்க…
ஆசை ராசாவே…
உங்கள மோசம் பண்ணி வாழமாட்டேன்…
ஆச ராசாவே…

பெண் : நேசம் மட்டும் மாறாதுங்க…
ஆசை ராசாவே…
உங்கள மோசம் பண்ணி வாழமாட்டேன்…
ஆச ராசாவே…

BGM

ஆண் : என் மாமியாருக்கு சீல தொவைச்சு…
மாடு கண்ணு மேய்ச்சு கட்டி…
மாலை மாத்த தேதி குறிச்சேன்…
நாகரத்தினமே…

ஆண் : மாமியாருக்கு சீல தொவைச்சு…
மாடு கண்ணு மேய்ச்சு கட்டி…
மாலை மாத்த தேதி குறிச்சேன்…
நாகரத்தினமே…

ஆண் : இப்படி ஆள மாத்தி போனையே…
நாகரத்தினமே…
நான் வாழ மாட்டேன் பூமியில…
நாகரத்தினமே…

BGM

பெண் : மாமியார சொல்லாதைக…
மாமானாரு செஞ்ச வேலை…

ஆண் : எல்லாம் உங்க அப்பன் பண்ணுன வேலைதானா…
இரு கவனிச்சுக்குறேன் அவன…

பெண் : மாமியார சொல்லாதைக…
மாமானாரு செஞ்ச வேலை…
மாயச்சுக்குவேன் உசுரகூட…
ஆச ராசாவே…

ஆண் : அய்யோ அப்படிலாம் பண்ணிடாதம்மா…

பெண் : மாமியார சொல்லாதைக…
மாமானாரு செஞ்ச வேலை…
மாயச்சுக்குவேன் உசுரகூட…
ஆச ராசாவே…

பெண் : உங்கள மாத்தி மாலை போடாமாட்டேன்…
ஆச ராசாவே…
கொஞ்சம் காத்திருக்க வேணுமுங்க…
ஆச ராசாவே…

BGM

ஆண் : முக்கா பவுனு தாலி ரூவா…
முந்நூறுக்கு சீல வச்சே…

ஆண் : முக்கா பவுனு தாலி ரூவா…
முந்நூறுக்கு சீல வச்சு…
பரிசம் போட்டு வருஷம் ஆச்சு…
நகரத்தினமே…

ஆண் : முக்கா பவுனு தாலி ரூவா…
முந்நூறுக்கு சீல வச்சு…
பரிசம் போட்டு வருஷம் ஆச்சு…
நகரத்தினமே…

ஆண் : இப்ப வார்த்தை மாறி பேசுறாங்க…
நாகரத்தினமே…
உங்கப்பன் வேற மாப்பிள்ளை பார்க்குறானே…
நாகரத்தினமே…

BGM

பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து…
பட்டா நிலம் தந்தாகூட…

BGM

பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து…
பட்டா நிலம் தந்தாகூட…
கட்டாயமா மாறமாட்டேன்…
ஆச ராசாவே…

ஆண் : அடி ராசாத்தி…
அப்படி சொல்லு குட்டி…

பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து…
பட்டா நிலம் தந்தாகூட…
கட்டாயமா மாறமாட்டேன்…
ஆச ராசாவே…

பெண் : நீங்க நிக்காதைங்க வெசனம்பட்டு…
ஆச ராசாவே…
உங்கள எக்காலமும் பிரியமாட்டேன்…
ஆச ராசாவே…

BGM


Notes : Vaadipatti Song Lyrics in Tamil. This Song from Veera Thalattu (1998). Song Lyrics penned by Kasthuri Raja. வாடிப்பட்டி பாடல் வரிகள்.