வாடிப்பட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாகங்கை அமரன் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாவீர தாலாட்டு

Vaadipatti Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு…
வாக்கப்பட்டு வாரம்ன்னு…
வாக்கு சொல்லி போனவளே…
நாகரத்தினமே…

ஆண் : ஏ… வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு…
வாக்கப்பட்டு வாரம்ன்னு…
வாக்கு சொல்லி போனவளே…
நாகரத்தினமே…

ஆண் : இப்ப வாச கதவ சாத்துறியே…
நாகரத்தினமே…
என்னைய மோசம் பண்ண பார்க்குறியே…
நாகரத்தினமே…

ஆண் : இப்ப வாச கதவ சாத்துறியே…
நாகரத்தினமே…
என்னைய மோசம் பண்ண பார்க்குறியே…
நாகரத்தினமே…

—BGM—

பெண் : கூடலூரு கோணகண்ணேன்…
கூடலூரு கோணகண்ணேன்…
கூட நகை தாரம்ன்னு…
கொலம்பி புட்டான் எங்கப்பன் மனச…
ஆச ராசாவே…

—BGM—

பெண் : கூடலூரு கோணகண்ணேன்…
கூட நகை தாரம்ன்னு…
கொலம்பி புட்டான் எங்கப்பன் மனச…
ஆச ராசாவே…

பெண் : ஆனால் நேசம் மட்டும் மாறாதுங்க…
ஆசை ராசாவே…
உங்கள மோசம் பண்ணி வாழமாட்டேன்…
ஆச ராசாவே…

பெண் : நேசம் மட்டும் மாறாதுங்க…
ஆசை ராசாவே…
உங்கள மோசம் பண்ணி வாழமாட்டேன்…
ஆச ராசாவே…

—BGM—

ஆண் : என் மாமியாருக்கு சீல தொவைச்சு…
மாடு கண்ணு மேய்ச்சு கட்டி…
மாலை மாத்த தேதி குறிச்சேன்…
நாகரத்தினமே…

ஆண் : மாமியாருக்கு சீல தொவைச்சு…
மாடு கண்ணு மேய்ச்சு கட்டி…
மாலை மாத்த தேதி குறிச்சேன்…
நாகரத்தினமே…

ஆண் : இப்படி ஆள மாத்தி போனையே…
நாகரத்தினமே…
நான் வாழ மாட்டேன் பூமியில…
நாகரத்தினமே…

—BGM—

பெண் : மாமியார சொல்லாதைக…
மாமானாரு செஞ்ச வேலை…

ஆண் : எல்லாம் உங்க அப்பன் பண்ணுன வேலைதானா…
இரு கவனிச்சுக்குறேன் அவன…

பெண் : மாமியார சொல்லாதைக…
மாமானாரு செஞ்ச வேலை…
மாயச்சுக்குவேன் உசுரகூட…
ஆச ராசாவே…

ஆண் : அய்யோ அப்படிலாம் பண்ணிடாதம்மா…

பெண் : மாமியார சொல்லாதைக…
மாமானாரு செஞ்ச வேலை…
மாயச்சுக்குவேன் உசுரகூட…
ஆச ராசாவே…

பெண் : உங்கள மாத்தி மாலை போடாமாட்டேன்…
ஆச ராசாவே…
கொஞ்சம் காத்திருக்க வேணுமுங்க…
ஆச ராசாவே…

—BGM—

ஆண் : முக்கா பவுனு தாலி ரூவா…
முந்நூறுக்கு சீல வச்சே…

ஆண் : முக்கா பவுனு தாலி ரூவா…
முந்நூறுக்கு சீல வச்சு…
பரிசம் போட்டு வருஷம் ஆச்சு…
நகரத்தினமே…

ஆண் : முக்கா பவுனு தாலி ரூவா…
முந்நூறுக்கு சீல வச்சு…
பரிசம் போட்டு வருஷம் ஆச்சு…
நகரத்தினமே…

ஆண் : இப்ப வார்த்தை மாறி பேசுறாங்க…
நாகரத்தினமே…
உங்கப்பன் வேற மாப்பிள்ளை பார்க்குறானே…
நாகரத்தினமே…

—BGM—

பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து…
பட்டா நிலம் தந்தாகூட…

—BGM—

பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து…
பட்டா நிலம் தந்தாகூட…
கட்டாயமா மாறமாட்டேன்…
ஆச ராசாவே…

ஆண் : அடி ராசாத்தி…
அப்படி சொல்லு குட்டி…

பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து…
பட்டா நிலம் தந்தாகூட…
கட்டாயமா மாறமாட்டேன்…
ஆச ராசாவே…

பெண் : நீங்க நிக்காதைங்க வெசனம்பட்டு…
ஆச ராசாவே…
உங்கள எக்காலமும் பிரியமாட்டேன்…
ஆச ராசாவே…

—BGM—


Notes : Vaadipatti Song Lyrics in Tamil. This Song from Veera Thalattu (1998). Song Lyrics penned by Kasthuri Raja. வாடிப்பட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading