கதை போல தோணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஇளையராஜாஇளையராஜாவீர தாலாட்டு

Katha Pola Thonum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…
கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…

ஆண் : இந்த மண்ணுல விளைஞ்ச கதை இது…
ஈர நெஞ்சுல நனைஞ்ச கதை இது…

ஆண் : இது கதையா ஆனாலும்…
வெறும் கனவா போனாலும்…
ஒரு வரலாறுதான் வீரத் தாலாட்டுத்தான்…

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…

—BGM—

ஆண் : பத்து மாதம் கோவில் வாசம்…
தாய் வயிற்றில் ஆனது…
பக்குவமாய் அவள்தான் என்னை…
மனிதனாக்கி வைத்தது…

ஆண் : அன்னை தந்த பால் குடித்து…
அன்பு பாசம் வந்தது…
அவள் படித்த பாட்டுதானே…
அறிவு சொல்லி தந்தது…

ஆண் : நான் போகும் பாதை எல்லாம்…
தாய் போட்டு வைத்தது…
எனை சேரும் செல்வம் எல்லாம்…
அவள் பார்த்து விதைத்து…

ஆண் : ஆயிரம் வந்தது ஆயிரம் போனது…
தாய் மட்டும் நிரந்தரமானது…

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…

—BGM—

ஆண் : கட்ட பொம்மன் போல ஒரு வீரன்…
இந்த மண்ணில் வர…
பாட்டு சொன்ன தாய் பட்ட துன்பம்…
சொல்ல கூடுமோ…

ஆண் : புத்தன் யேசு காந்தி போல…
பிள்ளை உருவாகி வர…
பெத்தடுத்த தாயி சொன்ன…
பாட்டெழுதி தீருமோ…

ஆண் : ஊரை ஆண்டு நாட்டை ஆண்டு…
உலகை கூட அழலாம்…
மண்ணை விட்டு வானின் மீது…
கொடியை கூட ஏற்றலாம்…

ஆண் : கருவறை வழிவந்த உறவெனும் எல்லையை…
மீறிட இங்கே ஆகுமோ…

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…

—BGM—

ஆண் : கதை போல தோணும் இது கதையும் இல்ல…
இதை கலங்காம கேட்க்கும் ஒரு இதயம் இல்ல…


Notes : Katha Pola Thonum Song Lyrics in Tamil. This Song from Veera Thalattu (1998). Song Lyrics penned by Kasthuri Raja. கதை போல தோணும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading