Category Archives: வண்டிச்சோலை சின்ராசு

வண்டிச்சோலை சின்ராசு – Vandicholai Chinraasu (1994)

சித்திரை நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்பி. ஜெயச்சந்திரன் & மின்மினிஏ.ஆர்.ரகுமான்வண்டிச்சோலை சின்ராசு

Chitthirai Nilavu Song Lyrics in Tamil

BGM

ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே…
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே…

பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு…
அது வேருக்கு தெரியும்…
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு…
அது சேலைக்கு தெரியும்…

பெண் : வண்ண வண்ண வானவில் ஒன்று…
வானில் வந்தால் ஊருக்கு தெரியும்…
கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள…
காதல் வந்தால் யாருக்கு தெரியும்…

ஆண் : மேகங்களில் எத்தனை துளியோ…
மின்னல் பெண்னே யாருக்கு தெரியும்…
மோகம் கொண்ட பெண் யாரென்று…
முத்தம் தரும் சாமிக்கு தெரியும்…

பெண் : நிலா எது விண்மீன் எது…
நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்…

ஆண் : நாணம் எது ஊடல் எது…
நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்…

ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே…
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே…

பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு…
அது வேருக்கு தெரியும்…
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு…
அது சேலைக்கு தெரியும்…

BGM

பெண் : மரங்களில் எத்தனை பழமோ…
பழம் உண்ணும் பறவைகள் அறியும்…
பழங்களில் எத்தனை மரமோ…
ஊரில் இங்கே யாருக்கு தெரியும்…

ஆண் : எந்த உறை தன் உறை என்று…
உள்ளே செல்லும் வாளுக்குத் தெரியும்…
எந்த இடை தன் இடையென்று…
எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்…

பெண் : நிலாவிலே காற்றே இல்லை…
இது எத்தனை பேருக்கு தெரியும்…
காதல் வந்தால் கண்ணே இல்லை…
காதல் கொண்ட யாருக்கு தெரியும்…

ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே…
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே…

பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு…
அது வேருக்கு தெரியும்…
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு…
அது சேலைக்கு தெரியும்…

ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே…
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே…

பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு…
அது வேருக்கு தெரியும்…
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு…
அது சேலைக்கு தெரியும்…

Notes : Chitthirai Nilavu Song Lyrics in Tamil. This Song from Vandicholai Chinraasu (1994). Song Lyrics penned by Pulamaipithan. சித்திரை நிலவு பாடல் வரிகள்.

எது சுகம் சுகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவாணி ஜெயராம் & எஸ். பி. பாலசுப்ரமண்யம்ஏ.ஆர்.ரகுமான்வண்டிச்சோலை சின்ராசு

Edhu Sugam Sugam Song Lyrics in Tamil

BGM

பெண் : எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

பெண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…

ஆண் : வானம் எந்தன் தோளோடு…
சாய்ந்ததென்ன உன்னோடு…
பஞ்சு வர்ண நெஞ்சோடு…
படுக்கை ஒண்ணு நீ போடு…

பெண் : சாம வேதம் நீ ஓது…
வாடைத் தீயைத் தூவும் போது…
வா இனி தாங்காது தாங்காது…
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக…

ஆண் : சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

ஆண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…

BGM

பெண் : கள்ளும் தீயும் ஒண்ணாச்சு…
காதல் நெஞ்சில் உண்டாச்சு…
கண்ணில் இன்று முள்ளாச்சு…
அதிலே தூக்கம் போயாச்சு…

ஆண் : பாரிஜாதம் உன் தேகம்…
பார்க்க பார்க்க போதை ஏறும்…
நீ கொடு பேரின்பம்…
கையோடு கை சேர…
மெய்யோடு மெய் சேர…

பெண் : சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

பெண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…

ஆண் : எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

ஆண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…

Notes : Edhu Sugam Sugam Song Lyrics in Tamil. This Song from Vandicholai Chinraasu (1994). Song Lyrics penned by Vairamuthu. எது சுகம் சுகம் பாடல் வரிகள்.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாகுல் ஹமீதுஏ.ஆர்.ரகுமான்வண்டிச்சோலை சின்ராசு

Senthamizh Naatu Thamizhachiye Song Lyrics in Tamil

BGM

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…
சேல உடுத்த தயங்குறியே…

BGM

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…
சேல உடுத்த தயங்குறியே…
நெசவு செய்யும் திருநாட்டில்…
நீச்சல் உடையில் அலையிறியே…
கணவன் மட்டும் காணும் அழகை…
கடைகள் போட்டு காட்டுறியே…

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…
சேல உடுத்த தயங்குறியே…
நெசவு செய்யும் திருநாட்டில்…
நீச்சல் உடையில் அலையிறியே…
கணவன் மட்டும் காணும் அழகை…
கடைகள் போட்டு காட்டுறியே…

BGM

ஆண் : எலந்த காட்டில் பொறந்தவதானே…
லண்டன் மாடல் நட எதுக்கு…
காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது…
காத்து வாங்கும் உடை எதுக்கு…

ஆண் : உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில்…
உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு…
டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில்…
ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு…

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…
சேல உடுத்த தயங்குறியே…
நெசவு செய்யும் திருநாட்டில்…
நீச்சல் உடையில் அலையிறியே…
கணவன் மட்டும் காணும் அழகை…
கடைகள் போட்டு காட்டுறியே…

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…
சேல உடுத்த தயங்குறியே…
நெசவு செய்யும் திருநாட்டில்…
நீச்சல் உடையில் அலையிறியே…

BGM

ஆண் : கற்பு என்பது பிற்போக்கு இல்ல…
கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்…
காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி…
கனக பூக்கள் அணிஞ்சிக்கணும்…

ஆண் : பழமை வேறு பழசு வேறு…
வேறுபாட்டை அறிஞ்சிக்கணும்…
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே…
புரிஞ்சி நீயும் நடந்துக்கணும்…

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…
சேல உடுத்த தயங்குறியே…
நெசவு செய்யும் திருநாட்டில்…
நீச்சல் உடையில் அலையிறியே…
கணவன் மட்டும் காணும் அழகை…
கடைகள் போட்டு காட்டுறியே…

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…
சேல உடுத்த தயங்குறியே…
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…
சேல உடுத்த தயங்குறியே…

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…
சேல உடுத்த தயங்குறியே…
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…
சேல உடுத்த தயங்குறியே…

Notes : Senthamizh Naatu Thamizhachiye Song Lyrics in Tamil. This Song from Vandicholai Chinraasu (1994). Song Lyrics penned by Vairamuthu. செந்தமிழ் நாட்டு தமிழச்சியே பாடல் வரிகள்.