Category Archives: செந்தமிழ் செல்வன்

செந்தமிழ் செல்வன் – Senthamizh Selvan (1994)

குயிலே இள மாங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசெந்தமிழ் செல்வன்

Kuyile Ilam Manguyile Song Lyrics in Tamil


ஆண் : குயிலே இள மாங்குயிலே…

BGM

ஆண் : உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு…

BGM

ஆண் : கேட்டு அதைத்தான் கேட்டு…
மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு…

BGM

ஆண் : குயிலே இள மாங்குயிலே…
உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு…
கேட்டு அதைத்தான் கேட்டு…
மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு…

ஆண் : மயிலே மலை வாழ் மயிலே…
வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு…
பார்த்து அதைத்தான் பார்த்து…
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது…

BGM

ஆண் : பிறவாத தமிழ் கொண்டு இசை பாடினால்…
திறவாத கதவேதும் கிடையாதம்மா…
தொலை தூரம் இருக்கின்ற தொடுவான் வரை…
தமிழ்ப் பாடல் போய்ச் சேர தடை ஏதம்மா…

ஆண் : ஒரு நாள் வரும் திருநாள் வரும்…
நான் யார் என்று தாய் கண்டு மகனே எனலாம்…
விழி ஈரமும் மன பாரமும்…
இனி ஓய்ந்திங்கு நான் அன்னை மடியில் விழலாம்…

ஆண் : குயிலே இள மாங்குயிலே…
உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு…
கேட்டு அதைத் தான் கேட்டு…
மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு…

ஆண் : குயிலே இள மாங்குயிலே…

BGM

ஆண் : தினம் தோறும் அம்மாவை சீராட்டுவேன்…
தலை வாரி அழகாகப் பூச் சூட்டுவேன்…
பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன்…
தாய் போல நான் மாறி தாலாட்டுவேன்…

ஆண் : முன்னூறு நாள் மடி தாங்கினாள்…
அந்தத் தாய்தானே நான் போற்றும் கடவுள் வடிவம்…
பல கோயிலோ பல தெய்வமோ…
இங்கு வேறேது நான் காண உலகம் முழுதும்…

ஆண் : குயிலே இள மாங்குயிலே…
உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு…
கேட்டு அதைத் தான் கேட்டு…
மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு…

ஆண் : மயிலே மலை வாழ் மயிலே…
வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு…
பார்த்து அதைத்தான் பார்த்து…
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது…

ஆண் : குயிலே இள மாங்குயிலே…


Notes : Kuyile Ilam Manguyile Song Lyrics in Tamil. This Song from Senthamizh Selvan (1994). Song Lyrics penned by Vaali. குயிலே இள மாங்குயிலே பாடல் வரிகள்.


பாட்டு எசப் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசெந்தமிழ் செல்வன்

Paatu Esa Paatu Song Lyrics in Tamil


ஆண் : கூவாமல் சோலைக் குயில்…
கூண்டுக்குள் வாழ்கின்றதே…
சோகத்தில் ஆள்கிறதே…
ஆவாரம் பூவே நீ வா…

BGM

ஆண் : பாட்டு எசப் பாட்டு…
கேட்டு இதக் கேட்டு…
சிறைக் கதவினைத் திறந்து கொண்டு…
சின்னக் கிளி என வெளியே வா…

ஆண் : இந்த செந்தமிழ் செல்வன் இங்கு…
நல்ல இசை ஒன்று படித்தேன் வா…
ஆவாரம் பூவே நீ வா… ஆஅ…

ஆண் : பாட்டு எசப் பாட்டு…
கேட்டு இதக் கேட்டு…

BGM

ஆண் : பட்டுப் பூச்சி போலே…
வட்டம் போடும் நாளில்…
கட்டுக் காவல் ஏம்மா…
கன்னிப் பாவை வாழ்வில்…

ஆண் : தன்னைத் தானே யாரும்…
கட்டிப் போட்டதில்லை…
தென்றல் காற்றுக்கேது…
துள்ளிப் பாய எல்லை…

ஆண் : உன்னை வருத்திடும் எண்ணச் சுமைகளும்…
இன்றுதான் சென்றது…
வெட்ட வெளியிலே வண்ணக் கிளி என…
நீந்தும் நாள் வந்தது…

ஆண் : உன்னை வருத்திடும் எண்ணச் சுமைகளும்…
இன்றுதான் சென்றது…
வெட்ட வெளியிலே வண்ணக் கிளி என…
நீந்தும் நாள் வந்தது…

ஆண் : ஆவாரம் பூவே நீ வா… ஆஅ…

ஆண் : பாட்டு எசப் பாட்டு…
கேட்டு இதக் கேட்டு…

BGM

ஆண் : தெற்கே நோக்கிப் போகும் தண்ணீர் கொண்ட மேகம்…
மண்ணின் மீது தூறல் மெல்ல போடும் நேரம்…
செக்கர் வானம் பூமி சொர்க்கம் போலக் காணும்…
சாரல் வந்து வீசும் சாயங்கால நேரம்…

ஆண் : அந்திப் பொழுதிலே சிந்தும் அழகெல்லாம்…
அம்மம்மா ஓவியம்…
கண்டு ரசிக்கவா கண்கள் களிக்கவா…
இன்பம் தான் ஜீவிதம்…

ஆண் : அந்திப் பொழுதிலே சிந்தும் அழகெல்லாம்…
அம்மம்மா ஓவியம்…
கண்டு ரசிக்கவா கண்கள் களிக்கவா…
இன்பம் தான் ஜீவிதம்…

ஆண் : ஆவாரம் பூவே நீ வா… ஆஅ…

ஆண் : பாட்டு எசப் பாட்டு…
கேட்டு இதக் கேட்டு…
சிறைக் கதவினைத் திறந்து கொண்டு…
சின்னக் கிளி என வெளியே வா…

ஆண் : இந்த செந்தமிழ் செல்வன் இங்கு…
நல்ல இசை ஒன்று படித்தேன் வா…
ஆவாரம் பூவே நீ வா… ஆஅ…


Notes : Paatu Esa Paatu Song Lyrics in Tamil. This Song from Senthamizh Selvan (1994). Song Lyrics penned by Vaali. பாட்டு எசப் பாட்டு பாடல் வரிகள்.


கூடு எங்கே தேடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாசெந்தமிழ் செல்வன்

Koodu Enge Thedi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே…
உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…
கேள்வியே பதில் என்ன…
பதில்களே வழி என்ன…
நீங்கள் சொல்லுங்களேன்…
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…

பெண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே…
உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…

BGM

ஆண் : கோபமாய் பேசினேன்…
வார்த்தையை வீசினேன்…
உன்னை வாயாடிப் பெண்ணாக இன்று…

பெண் : காலங்கள் தந்திடும் காயங்கள் தாங்கினேன்…
உந்தன் சொல் கூட அது போல ஒன்று…

ஆண் : பூந்தோகையே சொன்ன என் வார்த்தையே…
உன்னை அறியாமல் நான் சொன்ன மொழிதானம்மா…

பெண் : என் சோகமே என்றும் என்னோடுதான்
எந்தன் சுமை தாங்கி எந்நாளும் நான்தானய்யா…

ஆண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே…
பெண் : உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…

BGM

பெண் : ஈன்ற தாய் உண்டு நீ உண்டு ஓர் வீட்டிலே…
அந்தத் தாய் கூட எனக்கில்லை சொல்ல…

ஆண் : அந்தத் தாய் போல நான் உண்டு உன் வாழ்விலே…
இங்கு யாரும் அனாதைகள் அல்ல…

பெண் : ஓர் ஓடத்தில் சேர்ந்து நாம் போகிறோம்…
சேரும் கரை ஒன்று ஓர் நாளில் நாம் காணலாம்…

ஆண் : கீழ் வானிலே தோன்றும் விடி வெள்ளி போல்…
வாழ்வில் ஒளி வீசும் எதிர் காலம் உண்டாகலாம்…

பெண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே…
உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…
கேள்வியே பதில் என்ன…
பதில்களே வழி என்ன…
நீங்கள் சொல்லுங்களேன்…
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…

ஆண் : ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…

பெண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே…
ஆண் : உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே…


Notes : Koodu Enge Thedi Song Lyrics in Tamil. This Song from Senthamizh Selvan (1994). Song Lyrics penned by Vaali. கூடு எங்கே தேடி பாடல் வரிகள்.