குயிலே இள மாங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசெந்தமிழ் செல்வன்

Kuyile Ilam Manguyile Song Lyrics in Tamil


ஆண் : குயிலே இள மாங்குயிலே…

—BGM—

ஆண் : உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு…

—BGM—

ஆண் : கேட்டு அதைத்தான் கேட்டு…
மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு…

—BGM—

ஆண் : குயிலே இள மாங்குயிலே…
உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு…
கேட்டு அதைத்தான் கேட்டு…
மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு…

ஆண் : மயிலே மலை வாழ் மயிலே…
வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு…
பார்த்து அதைத்தான் பார்த்து…
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது…

—BGM—

ஆண் : பிறவாத தமிழ் கொண்டு இசை பாடினால்…
திறவாத கதவேதும் கிடையாதம்மா…
தொலை தூரம் இருக்கின்ற தொடுவான் வரை…
தமிழ்ப் பாடல் போய்ச் சேர தடை ஏதம்மா…

ஆண் : ஒரு நாள் வரும் திருநாள் வரும்…
நான் யார் என்று தாய் கண்டு மகனே எனலாம்…
விழி ஈரமும் மன பாரமும்…
இனி ஓய்ந்திங்கு நான் அன்னை மடியில் விழலாம்…

ஆண் : குயிலே இள மாங்குயிலே…
உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு…
கேட்டு அதைத் தான் கேட்டு…
மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு…

ஆண் : குயிலே இள மாங்குயிலே…

—BGM—

ஆண் : தினம் தோறும் அம்மாவை சீராட்டுவேன்…
தலை வாரி அழகாகப் பூச் சூட்டுவேன்…
பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன்…
தாய் போல நான் மாறி தாலாட்டுவேன்…

ஆண் : முன்னூறு நாள் மடி தாங்கினாள்…
அந்தத் தாய்தானே நான் போற்றும் கடவுள் வடிவம்…
பல கோயிலோ பல தெய்வமோ…
இங்கு வேறேது நான் காண உலகம் முழுதும்…

ஆண் : குயிலே இள மாங்குயிலே…
உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு…
கேட்டு அதைத் தான் கேட்டு…
மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு…

ஆண் : மயிலே மலை வாழ் மயிலே…
வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு…
பார்த்து அதைத்தான் பார்த்து…
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது…

ஆண் : குயிலே இள மாங்குயிலே…


Notes : Kuyile Ilam Manguyile Song Lyrics in Tamil. This Song from Senthamizh Selvan (1994). Song Lyrics penned by Vaali. குயிலே இள மாங்குயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading