பாட்டு எசப் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசெந்தமிழ் செல்வன்

Paatu Esa Paatu Song Lyrics in Tamil


ஆண் : கூவாமல் சோலைக் குயில்…
கூண்டுக்குள் வாழ்கின்றதே…
சோகத்தில் ஆள்கிறதே…
ஆவாரம் பூவே நீ வா…

—BGM—

ஆண் : பாட்டு எசப் பாட்டு…
கேட்டு இதக் கேட்டு…
சிறைக் கதவினைத் திறந்து கொண்டு…
சின்னக் கிளி என வெளியே வா…

ஆண் : இந்த செந்தமிழ் செல்வன் இங்கு…
நல்ல இசை ஒன்று படித்தேன் வா…
ஆவாரம் பூவே நீ வா… ஆஅ…

ஆண் : பாட்டு எசப் பாட்டு…
கேட்டு இதக் கேட்டு…

—BGM—

ஆண் : பட்டுப் பூச்சி போலே…
வட்டம் போடும் நாளில்…
கட்டுக் காவல் ஏம்மா…
கன்னிப் பாவை வாழ்வில்…

ஆண் : தன்னைத் தானே யாரும்…
கட்டிப் போட்டதில்லை…
தென்றல் காற்றுக்கேது…
துள்ளிப் பாய எல்லை…

ஆண் : உன்னை வருத்திடும் எண்ணச் சுமைகளும்…
இன்றுதான் சென்றது…
வெட்ட வெளியிலே வண்ணக் கிளி என…
நீந்தும் நாள் வந்தது…

ஆண் : உன்னை வருத்திடும் எண்ணச் சுமைகளும்…
இன்றுதான் சென்றது…
வெட்ட வெளியிலே வண்ணக் கிளி என…
நீந்தும் நாள் வந்தது…

ஆண் : ஆவாரம் பூவே நீ வா… ஆஅ…

ஆண் : பாட்டு எசப் பாட்டு…
கேட்டு இதக் கேட்டு…

—BGM—

ஆண் : தெற்கே நோக்கிப் போகும் தண்ணீர் கொண்ட மேகம்…
மண்ணின் மீது தூறல் மெல்ல போடும் நேரம்…
செக்கர் வானம் பூமி சொர்க்கம் போலக் காணும்…
சாரல் வந்து வீசும் சாயங்கால நேரம்…

ஆண் : அந்திப் பொழுதிலே சிந்தும் அழகெல்லாம்…
அம்மம்மா ஓவியம்…
கண்டு ரசிக்கவா கண்கள் களிக்கவா…
இன்பம் தான் ஜீவிதம்…

ஆண் : அந்திப் பொழுதிலே சிந்தும் அழகெல்லாம்…
அம்மம்மா ஓவியம்…
கண்டு ரசிக்கவா கண்கள் களிக்கவா…
இன்பம் தான் ஜீவிதம்…

ஆண் : ஆவாரம் பூவே நீ வா… ஆஅ…

ஆண் : பாட்டு எசப் பாட்டு…
கேட்டு இதக் கேட்டு…
சிறைக் கதவினைத் திறந்து கொண்டு…
சின்னக் கிளி என வெளியே வா…

ஆண் : இந்த செந்தமிழ் செல்வன் இங்கு…
நல்ல இசை ஒன்று படித்தேன் வா…
ஆவாரம் பூவே நீ வா… ஆஅ…


Notes : Paatu Esa Paatu Song Lyrics in Tamil. This Song from Senthamizh Selvan (1994). Song Lyrics penned by Vaali. பாட்டு எசப் பாட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading