Category Archives: முதல் சீதனம்

முதல் சீதனம் – Mudhal Seedhanam (1992)

ஓ நெஞ்சமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசௌந்தர்யன்முதல் சீதனம்

Oh Nenjame Uyire Thanjame Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்…
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்…

ஆண் : ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…

BGM

ஆண் : உயிரிலே உன் பெயரை எழுதினேன்…
அருகிலே இல்லையென்று உருகினேன்…
மலையிலே செம்பருத்தி மலையிலே…
அலைகிறேன் இன்று ஓரு முடிவிலே…

ஆண் : என் அன்பே என்னென்பேன்…
என் ஆசை வீண் என்பேன்…

ஆண் : காதல் மனதின் பாரமே…
சேரும் கடிதம் கூறுமே…
நாளை விடியும் நேரமே
நதியில் என் உடல் மிதக்குமே…

BGM

பெண் : ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…

BGM

பெண் : மனதினை தந்துவிட துடிக்கிறேன்…
விழிகளில் துன்ப மழை வடிக்கிறேன்…
விதியினை வென்றுவிட நினைக்கிறேன்…
நதியிலே உன்னுடனே குதிக்கிறேன்…

பெண் : என் அன்பே என் நெஞ்சே…
நீ எங்கே நான் அங்கே…
காதல் கணவாய் போவதா…
கானல் நீராய் ஆவதா…

பெண் : வா வா உயிரே வா…
வாசல் திறந்தேன் வாழ வா…

பெண் : ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்…
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்…
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்…
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்…


Notes : Oh Nenjame Uyire Thanjame Song Lyrics in Tamil. This Song from Mudhal Seedhanam (1992). Song Lyrics penned by Kalidasan. ஓ நெஞ்சமே பாடல் வரிகள்.


எட்டு மடிப்பு சேலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்சௌந்தர்யன்முதல் சீதனம்

Ettu Madippu Sela Song Lyrics in Tamil


ஆண் : எட்டு மடிப்பு சேலை… ஏஏஏ…
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை…

BGM

ஆண் : எட்டு மடிப்பு சேலை…
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை…
பட்டம் கொடுத்தது எனக்கு…
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு…
காதல் பட்டம் கொடுத்தது எனக்கு…
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு…

BGM

ஆண் : ஆசை உன்மேல் வச்சதுக்கு…
அடிச்ச அடியும் வலிக்கலையே…
நீயும் ஒதுக்கி வெறுத்ததுதான்…
இந்த நெஞ்சம் பொறுக்கலையே…

ஆண் : எப்போதுதான் மாறுமோ…
காதல் தடை மீறுமோ…
எப்போதுதான் மாறுமோ…
காதல் தடை மீறுமோ…

ஆண் : அனல் வந்து அடிக்குதடி…
என் உள்ளம் கொதிக்குதடி…
பூவான எம் மனசும் புண்ணாகி போனதடி…
புண்ணாகி போனதடி…

BGM

ஆண் : எட்டு மடிப்பு சேலை…
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை…
பட்டம் கொடுத்தது எனக்கு…
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு…
காதல் பட்டம் கொடுத்தது எனக்கு…
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு…

BGM

ஆண் : காதல் வந்த நாள் முதலாய்…
என்ன நானே மறந்துவிட்டேன்…
உனது விருப்பம் தெரியாம…
மனச நானும் பறிகொடுத்தேன்…

ஆண் : சிந்தை கெட்டு போனது…
செத்தும் உடல் நோகுது…
சிந்தை கெட்டு போனது…
செத்தும் உடல் நோகுது…

ஆண் : ஆத்தாடி மனுசனுக்கு ஆகாது பொண்ணு வழக்கு…
ஏத்தாத குத்து விளக்கு சுட்டாக்கா யார் பொறுப்பு…
சுட்டாக்கா யார் பொறுப்பு…

ஆண் : எட்டு மடிப்பு சேலை…
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை…
பட்டம் கொடுத்தது எனக்கு…
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு…
காதல் பட்டம் கொடுத்தது எனக்கு…
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு…


Notes : Ettu Madippu Sela Song Lyrics in Tamil. This Song from Mudhal Seedhanam (1992). Song Lyrics penned by Kalidasan. எட்டு மடிப்பு சேலை பாடல் வரிகள்.