Category Archives: தர்மதுரை

ஆண் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதர்மதுரை (1991)

Aanenna Pennena Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

ஆண் : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

ஆண் : நீயும் பத்து மாசம்…
நானும் பத்து மாசம்…
மாறும் இந்த வேசம்…

ஆண் : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

ஆண் : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

BGM

ஆண் : ஒன்னுக்கொன்னு ஆதரவு…
உள்ளத்திலே ஏன் பிரிவு…
கண்ணுக்குள்ளே பேதம் இல்லே…
பார்ப்பதிலே ஏன் பிரிவு…

ஆண் : பொன்னும் பொருள் போகும் வரும்…
அன்பு மட்டும் போவதில்லே…
தேடும் பணம் ஓடிவிடும்…
தெய்வம் விட்டுப் போவதில்லே…

ஆண் : மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு…
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன…
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு…
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன…

ஆண் : இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்…
இன்னும் மயக்கமா… ஆஆ…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

BGM

ஆண் : சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா…
சொத்து சுகம் தேவை இல்லே…
பந்தம் விட்டு போச்சுதுன்னா…
வாழ்வதிலே லாபம் இல்லே…

ஆண் : எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா…
இன்றும் என்றும் சோகமில்லே…
கன்றை விட்டு தாய் பிரிஞ்சு…
காணும் சுகம் ஏதுமில்லே…

ஆண் : ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்ட்டபட்டு…
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்ல… ஏஏ…
ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்ட்டபட்டு…
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்ல… ஏஏ…

ஆண் : இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்…
இன்னும் மயக்கமா… ஆஅ…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

குழு : நீயும் பத்து மாசம்…
நானும் பத்து மாசம்…
மாறும் இந்த வேசம்…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…


Notes : Aanenna Pennena Song Lyrics in Tamil. This Song from Dharma Durai (1991). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆண் என்ன பாடல் வரிகள்.


அண்ணன் என்ன

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே.யேசுதாஸ்இளையராஜாதர்மதுரை (1991)

Annan Enna Thambi Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : அண்ணன் என்ன தம்பி என்ன…
சொந்தம் என்ன பந்தம் என்ன…
சொல்லடி எனக்கு பதிலை…

ஆண் : நன்றி கொன்ற உள்ளங்களை…
கண்டு கண்டு வெந்த பின்பு…
என்னடி எனக்கு வேலை…

{ ஆண் : நம்பி நம்பி வெம்பி வெம்பி…
ஒன்றும் இல்லை என்ற பின்பு…
உறவு கிடக்கு போடி…
இந்த உண்மையை கண்டவன் ஞானி… } * (2)

ஆண் : அண்ணன் என்ன தம்பி என்ன…
சொந்தம் என்ன பந்தம் என்ன…

BGM

ஆண் : ஆசையில் நான் வைத்த பாசத்தில் நேசத்தில்…
வந்ததிங்கு வேதனையும் சோதனையும்தான்…
நெஞ்சம் வெந்ததடி சோகத்தினில்தான்…

ஆண் : பாம்புக்கு பால் வைத்து நான் செய்த பாவத்தில்…
வந்ததிங்கு கொஞ்சமல்ல நஞ்சமல்லடி…
எந்தன் நெஞ்சம் இங்கு நெஞ்சமல்லடி…

ஆண் : காருக்கும் பேருக்கும் தேருக்கும் ஆசை என்ன…
நேருக்கு நேர் இன்று ஏய்த்திடும் மோசம் என்ன…
ஊருக்கு ஞாயங்கள் சொல்லிடும் வேஷம் என்ன…
உண்மையை கொன்றப் பின் நெஞ்சுக்கு நீதி என்ன…

ஆண் : போகும் பாதை தவறானால்…
போடும் கணக்கும் தவறாகும்… ஓஓ… ஓஒ…

ஆண் : அண்ணன் என்ன தம்பி என்ன…
சொந்தம் என்ன பந்தம் என்ன…
சொல்லடி எனக்கு பதிலை…

ஆண் : நன்றி கொன்ற உள்ளங்களை…
கண்டு கண்டு வெந்த பின்பு…
என்னடி எனக்கு வேலை…

{ ஆண் : நம்பி நம்பி வெம்பி வெம்பி…
ஒன்றும் இல்லை என்ற பின்பு…
உறவு கிடக்கு போடி…
இந்த உண்மையை கண்டவன் ஞானி… } * (2)

ஆண் : அண்ணன் என்ன தம்பி என்ன…
சொந்தம் என்ன பந்தம் என்ன…

BGM

ஆண் : தந்தையின் சொல் இன்று மந்திரம்தான் என்று…
கண்டதடி பிள்ளை எந்தன் உண்மை உள்ளமே…
எந்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே…

ஆண் : சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில்…
வந்து நின்று உண்மைதனை இன்று உணர்ந்தேன்…
இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன்…

ஆண் : பட்டது பட்டது என் மனம் பட்டதடி…
சுட்டது சுட்டது சட்டிகள் சுட்டதடி…
விட்டது விட்டது கைகளும் விட்டதடி…
கொட்டுது கொட்டுது ஞானமும் கொட்டுதடி…

ஆண் : வானம் பார்த்து பறக்காதே…
பூமியில் பிறந்தாய் மறக்காதே… ஓஓஓ…

ஆண் : அண்ணன் என்ன தம்பி என்ன…
சொந்தம் என்ன பந்தம் என்ன…
சொல்லடி எனக்கு பதிலை…

ஆண் : நன்றி கொன்ற உள்ளங்களை…
கண்டு கண்டு வெந்த பின்பு…
என்னடி எனக்கு வேலை…

{ ஆண் : நம்பி நம்பி வெம்பி வெம்பி…
ஒன்றும் இல்லை என்ற பின்பு…
உறவு கிடக்கு போடி…
இந்த உண்மையை கண்டவன் ஞானி… } * (2)

ஆண் : அண்ணன் என்ன தம்பி என்ன…
சொந்தம் என்ன பந்தம் என்ன…
சொல்லடி எனக்கு பதிலை…

ஆண் : நன்றி கொன்ற உள்ளங்களை…
கண்டு கண்டு வெந்த பின்பு…
என்னடி எனக்கு வேலை…

ஆண் : அண்ணன் என்ன தம்பி என்ன…
சொந்தம் என்ன பந்தம் என்ன…


Notes : Annan Enna Thambi Enna Song Lyrics in Tamil. This Song from Dharma Durai (1991). Song Lyrics penned by Panchu Arunachalam. அண்ணன் என்ன பாடல் வரிகள்.


Maasi Masam Alana Ponnu Song Lyrics in Tamil

மாசி மாசம் ஆளான பொண்ணு

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம் & கங்கை அமரன்கே.ஜே.யேசுதாஸ் & சுவர்ணலதாஇளையராஜாதர்மதுரை (1991)

Maasi Masam Alana Ponnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு…
மாமன் எனக்குத்தானே…

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்…
மாமன் உனக்குத்தானே…

ஆண் : பூவோடு ஆஆஆ…தேனாட…
பெண் : தேனோடு ஓஓஓ… நீயாடு…

ஆண் : ஹோஓ… மாசி மாசம் ஆளான பொண்ணு…
மாமன் எனக்குத்தானே…

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்…
மாமன் உனக்குத்தானே…

BGM

பெண் : ஆசை நூறாச்சு போங்க…
நிலவு வந்தாச்சு வாங்க…
நெருங்க நெருங்க…
பொறுங்க பொறுங்க… ஓஹோ ஓஓஓ…

ஆண் : ஏ… ஆசை நான் கொண்டு வந்தால்…
அள்ளித் தேன் கொள்ள வந்தால்…
மயங்கிக் கிறங்க…
கிறங்கி உறங்க… ஓஹோ ஓஓஓ…

பெண் : வெப்பம் படருது படருது…
வெட்கம் வளருது வளருது…

ஆண் : கொட்டும் பனியிலே பனியிலே…
ஒட்டும் உறவிலே உறவிலே…

BGM

ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு…
மாமன் எனக்குத்தானே…

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்…
மாமன் உனக்குத்தானே…

BGM

ஆண் : காமலீலா வினோதம்…
காதல் கவிதா விலாசம்…
படித்துப் படித்து…
எடுக்க எடுக்க… ஓஹோ ஓஓஓ…

பெண் : ஆசை ஆஹா பிரமாதம்…
மோக கவிதா பிரவாகம்…
தொடுத்துத் தொடுத்து…
முடிக்க முடிக்க… ஓஹோ ஓஓஓ…

ஆண் : கொடிதான் தவழுது தவழுது…
பூப்போல் சிரிக்குது சிரிக்குது…

பெண் : உறவும் நெருங்குது நெருங்குது…
உலகம் மயங்குது உறங்குது…

BGM

ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு…
மாமன் எனக்குத்தானே…

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்…
மாமன் உனக்குத்தானே…

ஆண் : பூவோடு ஆஆஆ… தேனாட…
பெண் : தேனோடு ஓஓஓ… நீயாடு…

ஆண் : ஹோஓ… மாசி மாசம் ஆளான பொண்ணு…
மாமன் எனக்குத்தானே…

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்…
மாமன் உனக்குத்தானே…


Notes : Maasi Masam Alana Ponnu Song Lyrics in Tamil. This Song from Dharma Durai (1991). Song Lyrics penned by Panchu Arunachalam & Gangai Amaran. மாசி மாசம் ஆளான பொண்ணு பாடல் வரிகள்.


சந்தைக்கு வந்த கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதர்மதுரை (1991)

Santhaikku Vantha Kili Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…
சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…

ஆண் : முத்தம்மா முத்தம்மா…
பக்கம் வர வெக்கமா…
முத்தம்மா முத்தம்மா…
பக்கம் வர வெக்கமா…

ஆண் : குத்தாலத்து மானே…
கொத்து பூவாடிடும் தேனே…
குத்தாலத்து மானே…
கொத்து பூவாடிடும் தேனே…

ஆண் : சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…
சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…

BGM

ஆண் : காணாத காட்சி எல்லாம்…
கண்டேனே உன்னழகில்…
பூ போல கோலமெல்லாம்…
போட்டாயே உன் விழியில்…

பெண் : மானா மதுரையிலே…
மல்லிகை பூ வாங்கி வந்து…
மை போட்டு மயக்குனியே…
கை தேர்ந்த மச்சானே…

ஆண் : தாமரையும் பூத்திருச்சு…
தக்காளி பழுத்திருச்சு…
தங்கமே உன் மனசு…
இன்னும் பழுக்களையே…

பெண் : இப்பவே சொந்தம் கொண்டு…
நீ கையில் அள்ளிகொள்ளு மாமா…

பெண் : சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…
சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…

பெண் : சொல்லவா சொல்லவா…
ஒண்ணு நான் சொல்லவா…
சொல்லவா சொல்லவா…
ஒண்ணு நான் சொல்லவா…

பெண் : கல்யாணத்தை பேசி…
நீ கட்ட வேணும் தாலி…
கல்யாணத்தை பேசி…
நீ கட்ட வேணும் தாலி…

பெண் : சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…
சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…

BGM

குழு : வந்தது வந்தது பொங்கல் என்று…
இங்கு மங்கள கும்மி கொட்டுங்கடி…
எங்கெங்கும் மங்களம் பொங்கிடவே…
இங்கு மங்கையர் எல்லோரும் வாருங்கடி…

குழு : மஞ்சளும் குங்குமம் கையில் கொண்டு…
அம்மனை பாடிட வாருங்கடி…
அம்மனை பாடிட வாருங்கடி…
தந்தன தோம் சொல்லி பாடுங்கடி…

BGM

குழு : தந்தகர தந்தந்தோம்…
தந்தகர தந்தந்தோம்… ஆ…

குழு : தானன தானன தானன னா…

குழு : தந்தகர தந்தந்தோம்…
தந்தகர தந்தந்தோம்… ஆ…

குழு : தானன தானன தானன னா…

குழு : தந்தகர தந்தந்தோம்…
தந்தகர தந்தந்தோம் தானனா… தந்தந்தந்…

BGM

பெண் : ஆளான நாள் முதலாய்…
உன்னைத்தான் நான் நினைச்சேன்…
நூலாகத்தான் இளைச்சு…
நோயில் தினம் வாடி நின்னேன்…

ஆண் : பூ முடிக்கும் கூந்தலிலே…
எம் மனசை நீ முடிச்சே…
நீ முடிச்ச முடிப்பினிலே…
என் உசிறு தினம் தவிக்க…

பெண் : பூவில் நல்ல தேனிருக்கு…
பொன் வண்டு பாத்திருக்கு…
இன்னும் என்ன தாமதமோ…
மாமனுக்கு சம்மதமோ…

ஆண் : இப்பவே சொந்தம் கொள்ளவே…
கொஞ்சம் என் அருகில் வாம்மா…

ஆண் : சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…

பெண் : சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…

ஆண் : முத்தம்மா முத்தம்மா…
பக்கம் வர வெக்கமா…

பெண் : சொல்லவா சொல்லவா…
ஒண்ணு நான் சொல்லவா…
கல்யாணத்தை பேசி…
நீ கட்ட வேணும் தாலி…

ஆண் : ஹேய்… ஹொய்… குத்தாலத்து மானே…
கொத்து பூவாடிடும் தேனே…

ஆண் & பெண் : தந்தன்னா தந்தான் நன்னே…
தான தந்த தானேதானே…
தந்தன்னா தந்தான் நன்னே…
தான தந்த தானேதானே…

BGM


Notes : Santhaikku Vantha Kili Song Lyrics in Tamil. This Song from Dharma Durai (1991). Song Lyrics penned by Panchu Arunachalam. சந்தைக்கு வந்த கிளி பாடல் வரிகள்.