Category Archives: புதுமைப் பெண்

புதுமைப் பெண் – Pudhumai Penn (1984)

ஓ ஒரு தென்றல் புயலாகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன்இளையராஜாபுதுமைப் பெண்

Oh Oru Thendral Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ… ஒரு தென்றல் புயலாகி வருமே…
ஓ… ஒரு தெய்வம் படி தாண்டி வருமே…

ஆண் : கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…

ஆண் : ஓ… ஒரு தென்றல் புயலாகி வருமே…

BGM

ஆண் : அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும்…
அது பெண்ணின் தொழில் இல்லையே…
சரித்திரம் படைக்கவும் தரித்திரம் துடைக்கவும்…
வருவதில் பிழை இல்லையே…

ஆண் : அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும்…
அது பெண்ணின் தொழில் இல்லையே…
சரித்திரம் படைக்கவும் தரித்திரம் துடைக்கவும்…
வருவதில் பிழை இல்லையே…

ஆண் : சுற்றம் என்ன சொன்னாலும்…
தூய்மை ஒன்றுதான் சொந்தம்…
காவல் காக்கும் எந்நாளும்…
கற்பு என்னும் தீப்பந்தம்…

ஆண் : இரவும் பகலும் வியர்வை வழிய…
கரைகிறதே ரத்தம்…

ஆண் : ஓ… ஒரு தென்றல் புயலாகி வருமே…
ஓ… ஒரு தெய்வம் படி தாண்டி வருமே…

ஆண் : கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…

BGM

ஆண் : நிலவினில் இருக்கின்ற களங்கத்தை இவளது…
பெருவிரல் துடைத்து விடும்…
புதுயுக மகள் இவள் அணிகின்ற வளையல்கள்…
சிறைகளை உடைத்து விடும்…

ஆண் : நிலவினில் இருக்கின்ற களங்கத்தை இவளது…
பெருவிரல் துடைத்து விடும்…
புதுயுக மகள் இவள் அணிகின்ற வளையல்கள்…
சிறைகளை உடைத்து விடும்…

ஆண் : பாரிஜாத பூம்பாவை பாதியாகி போனாளே…
தேகம் எங்கும் புண்ணாகி தேதி போல தேய்ந்தாளே…
செடியை பிரிந்த பிறகும் செடிக்கு உயிர் தருதே பூவே…

ஆண் : ஓ… ஒரு தென்றல் புயலாகி வருமே…
ஓ… ஒரு தெய்வம் படி தாண்டி வருமே…

ஆண் : கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…


Notes : Oh Oru Thendral Song Lyrics in Tamil. This Song from Pudhumai Penn (1984). Song Lyrics penned by Vairamuthu. ஓ ஒரு தென்றல் புயலாகி பாடல் வரிகள்.


கஸ்தூரி மானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன்இளையராஜாபுதுமைப் பெண்

Kasthoori Maanae Song Lyrics in Tamil


BGM

ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…

பெண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…

பெண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…

BGM

ஆண் : கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது…
கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு…

பெண் : கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ தொட்டு…
நெற்றிப் பொட்டொன்று வைத்துக் கொள்ளு…

ஆண் : பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும்…
அருந்த நேரம் சொல்லு…
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும்…
அருந்த நேரம் சொல்லு…

பெண் : பெண்மையே பேசுமா…
பெண்மையே பேசுமா…
ஆண் : மெளனம்தான் பள்ளியறை மந்திரமா…

BGM

பெண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…

ஆண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…

ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…

BGM

பெண் : ஆஹா… பொன் முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம்…
என்னை ஏதேதோ செய்கின்றதே…

ஆண் : வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல்…
இங்கே தேன் மாரி பெய்கின்றதே…

பெண் : என் தேகம் எங்கெங்கும்…
ஏதோ ஓர் பொன் மின்னல்…

BGM

பெண் : என் தேகம் எங்கெங்கும்…
ஏதோ ஓர் பொன் மின்னல்…
நடந்து போகின்றதே…

ஆண் : நாணமே போனது நாணமே போனது…
பெண் : போதுமே ஆளை விடு ஆடை கொடு…

ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…

பெண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…

ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…


Notes : Kasthoori Maanae Song Lyrics in Tamil. This Song from Pudhumai Penn (1984). Song Lyrics penned by Vairamuthu. கஸ்தூரி மானே பாடல் வரிகள்.