கஸ்தூரி மானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன்இளையராஜாபுதுமைப் பெண்

Kasthoori Maanae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…

பெண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…

பெண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…

—BGM—

ஆண் : கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது…
கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு…

பெண் : கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ தொட்டு…
நெற்றிப் பொட்டொன்று வைத்துக் கொள்ளு…

ஆண் : பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும்…
அருந்த நேரம் சொல்லு…
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும்…
அருந்த நேரம் சொல்லு…

பெண் : பெண்மையே பேசுமா…
பெண்மையே பேசுமா…
ஆண் : மெளனம்தான் பள்ளியறை மந்திரமா…

—BGM—

பெண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…

ஆண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…

ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…

—BGM—

பெண் : ஆஹா… பொன் முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம்…
என்னை ஏதேதோ செய்கின்றதே…

ஆண் : வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல்…
இங்கே தேன் மாரி பெய்கின்றதே…

பெண் : என் தேகம் எங்கெங்கும்…
ஏதோ ஓர் பொன் மின்னல்…

—BGM—

பெண் : என் தேகம் எங்கெங்கும்…
ஏதோ ஓர் பொன் மின்னல்…
நடந்து போகின்றதே…

ஆண் : நாணமே போனது நாணமே போனது…
பெண் : போதுமே ஆளை விடு ஆடை கொடு…

ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…

பெண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…

ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…


Notes : Kasthoori Maanae Song Lyrics in Tamil. This Song from Pudhumai Penn (1984). Song Lyrics penned by Vairamuthu. கஸ்தூரி மானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading