Category Archives: நிழல்கள்

நிழல்கள் – Nizhalgal (1980)

இது ஒரு பொன்மாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநிழல்கள்

Ithu Oru Ponmalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன்மாலை பொழுது…
இது ஒரு பொன்மாலை பொழுது…
வானமகள் நாணுகிறாள்…
வேறு உடை பூணுகிறாள்…

ஆண் : இது ஒரு பொன் மாலை பொழுது…

BGM

ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்…
ராத்திரி வாசலில் கோலமிடும்…

BGM

ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்…
ராத்திரி வாசலில் கோலமிடும்…
வானம் இரவுக்கு பாலமிடும்…
பாடும் பறவைகள் தாளமிடும்…
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ…

ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது…

BGM

ஆண் : வானம் எனக்கொரு போதி மரம்…
நாளும் எனக்கது சேதி தரும்…

BGM

ஆண் : வானம் எனக்கொரு போதி மரம்…
நாளும் எனக்கது சேதி தரும்…
ஒரு நாள் உலகம் நீதி பெறும்…
திருநாள் நிகழும் தேதி வரும்…
கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன்…

ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது…

BGM


Notes : Ithu Oru Ponmalai Song Lyrics in Tamil. This Song from Nizhalgal (1980). Song Lyrics penned by Vairamuthu. இது ஒரு பொன்மாலை பாடல் வரிகள்.


பூங்கதவே தாள் திறவாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்தீபன் சக்கரவர்த்தி & உமா ரமணன்இளையராஜாநிழல்கள்

Poongathave Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூங்கதவே தாள் திறவாய்…
பூங்கதவே தாள் திறவாய்…
பூவாய் பெண் பாவாய்…
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்…

ஆண் : பூங்கதவே தாள் திறவாய்…

BGM

பெண் : நீரோட்டம் போலோடும்…
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்…
ஆஹாஹா… ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்…

ஆண் : காதல் தெய்வம்தான் வாழ்த்தும்…
காதலில் ஊறிய தாகம்… ம்ம்…

பெண் : பூங்கதவே தாள் திறவாய்…
ஆண் : பூவாய் பெண் பாவாய்…

BGM

ஆண் : திருத் தேகம் எனக்காகும்…
தேனில் நனைந்தது என் உள்ளம்…
பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும்…

பெண் : மாலை சூடும் மங்கையிடம்…
மங்கள வாழ்த்தொலி கீதம்… ம்ம்…

ஆண் : பூங்கதவே தாள் திறவாய்…
பெண் : பூங்கதவே தாள் திறவாய்…
ஆண் : பூவாய் பெண் பாவாய்…
பெண் : பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்…

BGM


Notes : Poongathave Song Lyrics in Tamil. This Song from Nizhalgal (1980). Song Lyrics penned by Gangai Amaran. பூங்கதவே தாள் திறவாய் பாடல் வரிகள்.


Madai Thiranthu Song Lyrics in Tamil

மடை திறந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநிழல்கள்

Madai Thiranthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்…
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்…
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்…
நினைத்தது பலித்தது… ஹோ…

BGM

ஆண் : காலம் கனிந்தது கதவுகள் திறந்தது…
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது…

ஆண் : புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே…
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே…
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்…
அமைத்தேன் நான்…

ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்…
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்…
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்…
நினைத்தது பலித்தது… ஹோ…

BGM

ஆண் : நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்…
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்…

ஆண் : வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்…
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்…
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கேதான்…

ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்…
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்…
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்…
நினைத்தது பலித்தது… ஹோ…

BGM


Notes : Madai Thiranthu Song Lyrics in Tamil. This Song from Nizhalgal (1980). Song Lyrics penned by Vaali. மடை திறந்து பாடல் வரிகள்.