மடை திறந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநிழல்கள்

Madai Thiranthu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்…
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்…
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்…
நினைத்தது பலித்தது… ஹோ…

—BGM—

ஆண் : காலம் கனிந்தது கதவுகள் திறந்தது…
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது…

ஆண் : புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே…
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே…
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்…
அமைத்தேன் நான்…

ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்…
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்…
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்…
நினைத்தது பலித்தது… ஹோ…

—BGM—

ஆண் : நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்…
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்…

ஆண் : வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்…
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்…
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கேதான்…

ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்…
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்…
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்…
நினைத்தது பலித்தது… ஹோ…

—BGM—


Notes : Madai Thiranthu Song Lyrics in Tamil. This Song from Nizhalgal (1980). Song Lyrics penned by Vaali. மடை திறந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading