Category Archives: அந்த ஒரு நிமிடம்

அந்த ஒரு நிமிடம் – Andha Oru Nimidam (1985)

அலைகளில் மிதக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஅந்த ஒரு நிமிடம்

Alaigalil Midhakkudhu Song Lyrics in Tamil


BGM

பெண் : அலைகளில் மிதக்குது…
நிலவொன்று குளிக்குது கை கொடு…
குளிக்கின்ற நிலவுக்கு…
முதுகினில் அரிக்குது கை தொடு…

பெண் : தேகம் உருகியதே…
ஆடை உருவியதே…
நீரும் சூடு ஏற…

ஆண் : வழி ஒன்னும் தெரியல…
வயசுக்கு வரவில்ல நானடி…
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி…

ஆண் : தேகம் மரத்துருச்சே…
நீச்சல் மறந்திருச்சே…
கூச்சம் ஆகி போச்சே…

ஆண் : வழி ஒன்னும் தெரியல…
வயசுக்கு வரவில்ல நானடி…
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி…

BGM

பெண் : முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு…
ஆண் : அய்யோ முன்னூறும் தாங்காது…
தந்தாலும் தகராறு…

பெண் : இவள் வசம் புது ரசம்…
இவள் வசம் புது ரசம்…
இதழ் ரசம் இலவசம் நீ குடி…

ஆண் : ஓ… புதுரசம் அழைக்குது…
பழரசம் கொதிக்குது பாரடி…

பெண் : நானிங்கு நானில்லை…
நீ இன்றி ஆளில்லை…
ஆடை காணவில்லை…

பெண் : அலைகளில் மிதக்குது…
நிலவொன்று குளிக்குது கை கொடு…
குளிக்கின்ற நிலவுக்கு…
முதுகினில் அரிக்குது கை தொடு…

ஆண் : தேகம் மரத்துருச்சே…
நீச்சல் மறந்திருச்சே…
கூச்சம் ஆகி போச்சே…

ஆண் : வழி ஒன்னும் தெரியல…
வயசுக்கு வரவில்ல நானடி…
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி…

BGM

பெண் : ஆணுக்கு ஆவேசம் வந்தாலே சந்தோசம்…
ஆண் : உன்பாடு உல்லாசம் என்பாடு படு மோசம்…

பெண் : வெயிலுக்கு நிழல்கொடு…
வெயிலுக்கு நிழல் கொடு…
மயிலுக்கு உடை கொடு மாமனே…

ஆண் : அய்யய்யோ இருக்குற வேட்டிய…
கொடுத்துட்டு தவிப்பது பாவமே…

பெண் : பஞ்சாங்கம் பாக்காதே…
என் அங்கம் தாங்காதே
நீரில் ஈரம் இல்லை…

ஆண் : வழி ஒன்னும் தெரியல…
வயசுக்கு வரவில்ல நானடி…
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி…

பெண் : தேகம்…
ஆண் : ஹா…
பெண் : உருகியதே…
ஆண் : ஹோ…

பெண் : ஆடை…
ஆண் : ஹா…
பெண் : உருவியதே…
ஆண் : ஹோ…

பெண் : நீரும் சூடு ஏற…
அலைகளில் மிதக்குது…
நிலவொன்று குளிக்குது கை கொடு…

ஆண் : வழி ஒன்னும் தெரியல…
வயசுக்கு வரவில்ல நானடி…


Notes : Alaigalil Midhakkudhu Song Lyrics in Tamil. This Song from Andha Oru Nimidam (1985). Song Lyrics penned by Vairamuthu. அலைகளில் மிதக்குது பாடல் வரிகள்.


சிறிய பறவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஅந்த ஒரு நிமிடம்

Siriya Paravai Song Lyrics in Tamil


BGM

பெண் : சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே…

பெண் : சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…

BGM

ஆண் : அன்பு லைலா நீயே எந்தன் ஜீவ சொந்தம்…
நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம்…

பெண் : சம்மதம் என்ன சொல்லவா…
மௌனமே சொல்லும் அல்லவா…

ஆண் : கிண்ணமாய் என்னை மாற்றவா…
உன்னையே வந்து ஊற்றவா…

பெண் : மது போதை வேண்டுமா…
இதழ் போதை நல்லது…

ஆண் : உன் பேரைச்சொல்கிறேன்…
அதில் போதை உள்ளது…

பெண் : வருகவே வருகவே…

ஆண் : சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே…

ஆண் : சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…

BGM

குழு : ப த நி சா நி ச நி த ப த ம ப க ம ப…
த நி த பா ம ம க ப ம நி த நி த…
க ம த மா க ம த ப…

BGM

ஆண் : மஞ்சமே தமிழின் மன்றமே…
புதிய சந்தமே சிந்தினேன்…

பெண் : அன்பனே இளைய கம்பனே…
கவிதை நண்பனே நம்பினேன்…

ஆண் : சொர்ணமே அரச அன்னமே…
இதழின் யுத்தமே முத்தமே…

பெண் : நெற்றியில் வியர்வை சொட்டுமே…
கைகள் பற்றுமே ஒற்றுமே…

ஆண் : சோழன் குயில் பாடுகையில்…
சோலைக்குயில் ஓய்வெடுக்கும்…
மெல்லினங்கள் பாடு கண்ணே…
வல்லினங்கள் வாய் வலிக்கும்…

பெண் : சந்தமே இன்பம் தந்தது…
கங்கையே இங்கு வந்ததே…
தென்றலே இன்று நின்றது…
நன்றுதான் சந்தம் என்றது…
கன்றுகள் ரெண்டு இன்றுபோல்…
என்றும் வென்று வாழ்கின்றது…

ஆண் : வாழ்கவே வாழ்கவே…

பெண் : சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே…

ஆண் : சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…

BGM

பெண் : அன்பு ரோமியோ இங்கே ஒரு காவல் இல்லை…
தேன் குடித்தால் இங்கே ஒரு கேள்வி இல்லை…

ஆண் : காதலின் கல்விச் சாலையில்…
கண்களே நல்ல தத்துவம்…
பூவையின் மேனி அற்புதம்…
பூக்களால் செய்த புத்தகம்…

பெண் : நம் காதல் பாடவே…
சுரம் ஏழு போதுமா…

ஆண் : நம் நேசம் பேசவே…
ஒரு பாஷை போதுமா…

பெண் : கவிமழை பொழியுமா…

ஆண் : பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே…
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே…
கவிதை எழுத இளைய கவிகள் எழுகவே எழுகவே…

ஆண் : பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே…
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே…


Notes : Siriya Paravai Song Lyrics in Tamil. This Song from Andha Oru Nimidam (1985). Song Lyrics penned by Vairamuthu. சிறிய பறவை பாடல் வரிகள்.