சிறிய பறவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஅந்த ஒரு நிமிடம்

Siriya Paravai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே…

பெண் : சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…

—BGM—

ஆண் : அன்பு லைலா நீயே எந்தன் ஜீவ சொந்தம்…
நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம்…

பெண் : சம்மதம் என்ன சொல்லவா…
மௌனமே சொல்லும் அல்லவா…

ஆண் : கிண்ணமாய் என்னை மாற்றவா…
உன்னையே வந்து ஊற்றவா…

பெண் : மது போதை வேண்டுமா…
இதழ் போதை நல்லது…

ஆண் : உன் பேரைச்சொல்கிறேன்…
அதில் போதை உள்ளது…

பெண் : வருகவே வருகவே…

ஆண் : சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே…

ஆண் : சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…

—BGM—

குழு : ப த நி சா நி ச நி த ப த ம ப க ம ப…
த நி த பா ம ம க ப ம நி த நி த…
க ம த மா க ம த ப…

—BGM—

ஆண் : மஞ்சமே தமிழின் மன்றமே…
புதிய சந்தமே சிந்தினேன்…

பெண் : அன்பனே இளைய கம்பனே…
கவிதை நண்பனே நம்பினேன்…

ஆண் : சொர்ணமே அரச அன்னமே…
இதழின் யுத்தமே முத்தமே…

பெண் : நெற்றியில் வியர்வை சொட்டுமே…
கைகள் பற்றுமே ஒற்றுமே…

ஆண் : சோழன் குயில் பாடுகையில்…
சோலைக்குயில் ஓய்வெடுக்கும்…
மெல்லினங்கள் பாடு கண்ணே…
வல்லினங்கள் வாய் வலிக்கும்…

பெண் : சந்தமே இன்பம் தந்தது…
கங்கையே இங்கு வந்ததே…
தென்றலே இன்று நின்றது…
நன்றுதான் சந்தம் என்றது…
கன்றுகள் ரெண்டு இன்றுபோல்…
என்றும் வென்று வாழ்கின்றது…

ஆண் : வாழ்கவே வாழ்கவே…

பெண் : சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே…

ஆண் : சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…

—BGM—

பெண் : அன்பு ரோமியோ இங்கே ஒரு காவல் இல்லை…
தேன் குடித்தால் இங்கே ஒரு கேள்வி இல்லை…

ஆண் : காதலின் கல்விச் சாலையில்…
கண்களே நல்ல தத்துவம்…
பூவையின் மேனி அற்புதம்…
பூக்களால் செய்த புத்தகம்…

பெண் : நம் காதல் பாடவே…
சுரம் ஏழு போதுமா…

ஆண் : நம் நேசம் பேசவே…
ஒரு பாஷை போதுமா…

பெண் : கவிமழை பொழியுமா…

ஆண் : பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே…
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே…
கவிதை எழுத இளைய கவிகள் எழுகவே எழுகவே…

ஆண் : பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே…
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே…


Notes : Siriya Paravai Song Lyrics in Tamil. This Song from Andha Oru Nimidam (1985). Song Lyrics penned by Vairamuthu. சிறிய பறவை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading