Category Archives: முரட்டுக்காளை

புது வண்ணங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். ஜானகிஇளையராஜாமுரட்டுக்காளை

Puthu Vannangal Song Lyrics in Tamil


BGM

பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…

பெண் : செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள…
பூங்குயில் பாடுது பாட்டு…
வண்ண மாமயில் ஆடுது கேட்டு…

பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…

BGM

பெண் : மண்ணிலே வளர்ந்த கொடி…
படர்ந்தது மரத்திலடி…
பொன்னிலே நனைந்தது போல்…
மலர்ந்தது வசந்தமடி…

பெண் : பிஞ்சுகள் காய்த்து கனிந்தாட…
மொட்டுகள் பூத்து விரிந்தாட…
கள்ளில் மயங்கும் வண்டுபோல்…
சுவை கண்டு மயங்குது கண்விழி…

பெண் : உல்லாசம் பண்பாடி உற்சாகம் கொண்டாட…
உள்ளத்தில் பொங்குது ஆசை…

பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…

பெண் : செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள…
பூங்குயில் பாடுது பாட்டு…
வண்ண மாமயில் ஆடுது கேட்டு…

BGM

பெண் : அன்பிலே இணைந்த சிட்டு…
மறைந்தது கூட்டிலடி…
ரெண்டிலே ஒன்றை கண்டு…
பிறந்தது நாணமடி…

பெண் : இன்று நான் மலர்ந்த பெண்ணானேன்…
என்னவோ மயக்கம் கொண்டேனே…
நெஞ்சில் நினைத்ததை சொல்லவோ…
அத சொல்ல தயங்குது பெண்மையே…

பெண் : ஒன்றோடு ஒன்றாக எந்நாளும் கொண்டாட…
உள்ளத்தில் வந்தது ஆசை…

பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…

பெண் : செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள…
பூங்குயில் பாடுது பாட்டு…
வண்ண மாமயில் ஆடுது கேட்டு…

BGM


Notes : Puthu Vannangal Song Lyrics in Tamil. This Song from Murattu Kaalai (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. புது வண்ணங்கள் பாடல் வரிகள்.


Entha Poovilum Vaasam Undu Song Lyrics in Tamil

எந்த பூவிலும் வாசம் உண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். ஜானகிஇளையராஜாமுரட்டுக்காளை

Entha Poovilum Vaasam Undu Song Lyrics in Tamil


BGM

பெண் : எந்த பூவிலும் வாசம் உண்டு…
எந்த பாட்டிலும் ராகம் உண்டு…
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு…
புது உறவு புது நினைவு…

பெண் : லலலாலலா லலலாலலா…
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்… ஹேஹேஹே…

பெண் : எந்த பூவிலும் வாசம் உண்டு…
எந்த பாட்டிலும் ராகம் உண்டு…
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு…
புது உறவு புது நினைவு…

பெண் : லலலாலலா லலலாலலா…
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்… ஹேஹேஹே…

BGM

பெண் : பாசமென்னும் கூடு கட்டி…
காவல் கொள்ள வேண்டும்…
தாய் மனதின் கருணை தந்து…
காத்திருக்க வேண்டும்…

பெண் : அன்னை போல் வந்தால் என்று சிரிக்கும்…
பிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும்…

பெண் : அன்பில் ஆடும் மனமே…
பண்பில் வாழும் குணமே…
ஒளியே திரு மகளே…
புது உறவே சுகம் பிறந்ததே…

பெண் : எந்த பூவிலும் வாசம் உண்டு…
எந்த பாட்டிலும் ராகம் உண்டு…
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு…
புது உறவு புது நினைவு…

பெண் : லலலாலலா லலலாலலா…
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்… ஹே ஹே ஹே…

BGM

பெண் : தஞ்சமென்று ஓடி வந்தேன்…
காவல் என்று நின்றாய்…
என் மனதின் கோவிலிலே…
தெய்வ மென்று வந்தாய்…

பெண் : நன்றி நான் சொல்வேன் என்றும் விழியில்…
என்றும் நான் செல்வேன் உந்தன் வழியில்…

பெண் : என்னை ஆளும் உறவே…
எந்த நாளும் மறவேன்…
கனவே வரும் நினைவே…
இனி உன்னை நான் தினம் வாங்குவேன்…

பெண் : எந்த பூவிலும் வாசம் உண்டு…
எந்த பாட்டிலும் ராகம் உண்டு…
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு…
புது உறவு புது நினைவு…

பெண் : லலலாலலா லலலாலலா…
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்… ஹேஹேஹே…

BGM


Notes : Entha Poovilum Vaasam Undu Song Lyrics in Tamil. This Song from Murattu Kaalai (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. எந்த பூவிலும் வாசம் உண்டு பாடல் வரிகள்.


மாமன் மச்சான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ்.பி. சைலஜாஇளையராஜாமுரட்டுக்காளை

Maaman Machchan Song Lyrics in Tamil


BGM

பெண் : மாமன் மச்சான் ஹே நீதானோ…
ஆச வச்சா ஏன் ஆகாதோ…
வரலாமா தொடலாமா…
தொடும்போது சுகம்தானா…
ஆ… மாமன் மச்சான்…

BGM

பெண் : நாள் ஜாமம் எல்லாம்…
உன்னைதான் எண்ணிக்கொள்வேன்…
ராத்தூக்கம் இல்ல மனம்போல் இன்பம் சொல்ல…

பெண் : தத்தை இவ பாக்க…
இரு கைகளிலே சேர்க்க…
மொட்டவிழும் நேரம்…
புது மோகத்திலே வாடும்…

பெண் : வாடாமல் வாழ…
தோளோடு சேர…
நீ வந்து பாரு… ஓஓ ஹோ ஹோ…

பெண் : மாமன் மச்சான் ஹே நீதானோ…
வரலாமா தொடலாமா…

BGM

பெண் : நான் பாடி பாடி…
வருவேன் உன்னைதேடி…
நீ கேட்டா என்ன…
இனி நான் உந்தன் ஜோடி…

பெண் : ரகசியத்தை சொல்வேன்…
உன்னை அதிசயத்தில் வைப்பேன்…
எதிரிகளை வெல்லும்…
ஒரு தந்திரமும் சொல்வேன்…

பெண் : நீ எந்தன் தெய்வம்…
நான் உந்தன் செல்வம்…
என்றென்றும் இன்பம்… ஆஆஆ…

பெண் : மாமன் மச்சான் ஹே நீதானோ…
ஆச வச்சா ஏன் ஆகாதோ…
வரலாமா தொடலாமா…
தொடும்போது சுகம்தானா…
ஆ… மாமன் மச்சான்…


Notes : Maaman Machchan Song Lyrics in Tamil. This Song from Murattu Kaalai (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. மாமன் மச்சான் பாடல் வரிகள்.


பொதுவாக என் மனசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன்இளையராஜாமுரட்டுக்காளை

Podhuvaga en manasu Song Lyrics in Tamil


BGM

குழு : ஜே… ஜே…
அண்ணனுக்கு ஜே…
அண்ணனுக்கு ஜே…
காளையனுக்கு ஜே…
காளையனுக்கு ஜே… ஜே…

BGM

ஆண் : பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…
பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…

ஆண் : உண்மைய சொல்வேன்…
நல்லத செய்வேன்…
குழு : தன்னானா தானா தன தன்னானா தானா…
ஆண் : வெற்றிமேல் வெற்றி வரும்…

ஆண் : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்… ஆ…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

குழு : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

ஆண் : பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…

BGM

ஆண் : முன்னால சீறுது மயிலக்காளை…
பின்னால பாயுது மச்சக்காளை…
முன்னால சீறுது மயிலக்காளை… ஆ…
பின்னால பாயுது மச்சக்காளை…

ஆண் : அடக்கி ஆளுது முரட்டுக்காளை…
குழு : முரட்டுக்காளை… முரட்டுக்காளை…

ஆண் : நெஞ்சுக்குள் பயமும் இல்ல…
யாருக்கும் அச்சம் இல்ல…
வாராதோ வெற்றி என்னிடம்…
விளையாடுங்க உடல் பலமாகுங்க…

குழு : ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்… ஹே…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

ஆண் : பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…
உண்மைய சொல்வேன் நல்லத செய்வேன்…
ஹான் வெற்றிமேல் வெற்றி வரும்…

குழு : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்… ஹா ஹா…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

BGM

குழு : வாங்கடி வாங்கடி பொண்டுகளா…
வாசம் உள்ள செண்டுகளா…
வாங்கடி வாங்கடி பொண்டுகளா…
வாசம் உள்ள செண்டுகளா…

குழு : கும்மி அடிச்சு குலவைய போட்டு…
அண்ணன வாழ்த்தி பாடுங்கள… ஹோய்…

குழு : காளையன பாத்து புட்டா…
ஜல்லிக்கட்டு காளை எல்லாம்…
துள்ளிக்கிட்டு ஓடுமடி…
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு…
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு…
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு…

குழு : கொம்பிருக்கும் காளைக்கெல்லாம் தெம்பிருக்காது…
இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிழுக்காது…

குழு : குலவை போட்டு பாடுங்கடி…
கும்மியடிச்சி ஆடுங்கடி…
மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலு வைப்போம் வாருங்கடி…
பொங்கலுவைப்போம் வாருங்கடி…
பொங்கலு வைப்போம் வாருங்கடி…

BGM

ஆண் : பொறந்த ஊருக்கு புகழை சேறு…
வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…
பொறந்த ஊருக்கு புகழை சேறு…
வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…

ஆண் : நாலுபேருக்கு நன்மைசெய்தா…
குழு : கொண்டாடுவார் பண்பாடுவார்…

ஆண் : என்னாலும் உழைச்சதுக்கு…
பொன்னான பலன் இருக்கு…
ஊரோட சேர்ந்து வாழுங்க…
அம்மன் அருள் சேரும்…
இனி நம்ம துணையாகும்…

குழு : ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்… ஹே…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

ஆண் : பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…
உண்மைய சொல்வேன் நல்லத செய்வேன்… ஹா…
குழு : தன்னானா தானா தன தன்னானா தானா…
ஆண் : வெற்றி மேல் வெற்றி வரும்…

ஆண் : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்… ஹே…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்… ஹே ஹே…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்… ஹே…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

BGM


Notes : Podhuvaga en manasu Song Lyrics in Tamil. This Song from Murattu Kaalai (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. பொதுவாக என் மனசு பாடல் வரிகள்.