புது வண்ணங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். ஜானகிஇளையராஜாமுரட்டுக்காளை

Puthu Vannangal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…

பெண் : செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள…
பூங்குயில் பாடுது பாட்டு…
வண்ண மாமயில் ஆடுது கேட்டு…

பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…

—BGM—

பெண் : மண்ணிலே வளர்ந்த கொடி…
படர்ந்தது மரத்திலடி…
பொன்னிலே நனைந்தது போல்…
மலர்ந்தது வசந்தமடி…

பெண் : பிஞ்சுகள் காய்த்து கனிந்தாட…
மொட்டுகள் பூத்து விரிந்தாட…
கள்ளில் மயங்கும் வண்டுபோல்…
சுவை கண்டு மயங்குது கண்விழி…

பெண் : உல்லாசம் பண்பாடி உற்சாகம் கொண்டாட…
உள்ளத்தில் பொங்குது ஆசை…

பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…

பெண் : செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள…
பூங்குயில் பாடுது பாட்டு…
வண்ண மாமயில் ஆடுது கேட்டு…

—BGM—

பெண் : அன்பிலே இணைந்த சிட்டு…
மறைந்தது கூட்டிலடி…
ரெண்டிலே ஒன்றை கண்டு…
பிறந்தது நாணமடி…

பெண் : இன்று நான் மலர்ந்த பெண்ணானேன்…
என்னவோ மயக்கம் கொண்டேனே…
நெஞ்சில் நினைத்ததை சொல்லவோ…
அத சொல்ல தயங்குது பெண்மையே…

பெண் : ஒன்றோடு ஒன்றாக எந்நாளும் கொண்டாட…
உள்ளத்தில் வந்தது ஆசை…

பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…

பெண் : செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள…
பூங்குயில் பாடுது பாட்டு…
வண்ண மாமயில் ஆடுது கேட்டு…

—BGM—


Notes : Puthu Vannangal Song Lyrics in Tamil. This Song from Murattu Kaalai (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. புது வண்ணங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading