பொதுவாக என் மனசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன்இளையராஜாமுரட்டுக்காளை

Podhuvaga en manasu Song Lyrics in Tamil


—BGM—

குழு : ஜே… ஜே…
அண்ணனுக்கு ஜே…
அண்ணனுக்கு ஜே…
காளையனுக்கு ஜே…
காளையனுக்கு ஜே… ஜே…

—BGM—

ஆண் : பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…
பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…

ஆண் : உண்மைய சொல்வேன்…
நல்லத செய்வேன்…
குழு : தன்னானா தானா தன தன்னானா தானா…
ஆண் : வெற்றிமேல் வெற்றி வரும்…

ஆண் : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்… ஆ…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

குழு : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

ஆண் : பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…

—BGM—

ஆண் : முன்னால சீறுது மயிலக்காளை…
பின்னால பாயுது மச்சக்காளை…
முன்னால சீறுது மயிலக்காளை… ஆ…
பின்னால பாயுது மச்சக்காளை…

ஆண் : அடக்கி ஆளுது முரட்டுக்காளை…
குழு : முரட்டுக்காளை… முரட்டுக்காளை…

ஆண் : நெஞ்சுக்குள் பயமும் இல்ல…
யாருக்கும் அச்சம் இல்ல…
வாராதோ வெற்றி என்னிடம்…
விளையாடுங்க உடல் பலமாகுங்க…

குழு : ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்… ஹே…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

ஆண் : பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…
உண்மைய சொல்வேன் நல்லத செய்வேன்…
ஹான் வெற்றிமேல் வெற்றி வரும்…

குழு : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்… ஹா ஹா…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

—BGM—

குழு : வாங்கடி வாங்கடி பொண்டுகளா…
வாசம் உள்ள செண்டுகளா…
வாங்கடி வாங்கடி பொண்டுகளா…
வாசம் உள்ள செண்டுகளா…

குழு : கும்மி அடிச்சு குலவைய போட்டு…
அண்ணன வாழ்த்தி பாடுங்கள… ஹோய்…

குழு : காளையன பாத்து புட்டா…
ஜல்லிக்கட்டு காளை எல்லாம்…
துள்ளிக்கிட்டு ஓடுமடி…
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு…
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு…
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு…

குழு : கொம்பிருக்கும் காளைக்கெல்லாம் தெம்பிருக்காது…
இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிழுக்காது…

குழு : குலவை போட்டு பாடுங்கடி…
கும்மியடிச்சி ஆடுங்கடி…
மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலு வைப்போம் வாருங்கடி…
பொங்கலுவைப்போம் வாருங்கடி…
பொங்கலு வைப்போம் வாருங்கடி…

—BGM—

ஆண் : பொறந்த ஊருக்கு புகழை சேறு…
வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…
பொறந்த ஊருக்கு புகழை சேறு…
வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…

ஆண் : நாலுபேருக்கு நன்மைசெய்தா…
குழு : கொண்டாடுவார் பண்பாடுவார்…

ஆண் : என்னாலும் உழைச்சதுக்கு…
பொன்னான பலன் இருக்கு…
ஊரோட சேர்ந்து வாழுங்க…
அம்மன் அருள் சேரும்…
இனி நம்ம துணையாகும்…

குழு : ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்… ஹே…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

ஆண் : பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…
உண்மைய சொல்வேன் நல்லத செய்வேன்… ஹா…
குழு : தன்னானா தானா தன தன்னானா தானா…
ஆண் : வெற்றி மேல் வெற்றி வரும்…

ஆண் : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்… ஹே…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்… ஹே ஹே…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்… ஹே…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

—BGM—


Notes : Podhuvaga en manasu Song Lyrics in Tamil. This Song from Murattu Kaalai (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. பொதுவாக என் மனசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading