மணியே மணிக்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஎஸ். ஜானகி & மனோஇளையராஜாநாடோடித் தென்றல்

Maniyae Manikuyilae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…
கொடியே கொடிமலரே…
கொடி இடையின் நடையழகே…

ஆண் : தொட்ட இடம் பூமணக்கும்…
துளிர்க்கரமோ தொட இனிக்கும்…

ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…

பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ…
மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…

ஆண் : கொடியே கொடிமலரே…
கொடி இடையின் நடையழகே…

—BGM—

ஆண் : பொன்னில் வடித்த சிலையே…
பிரம்மன் படைத்தான் உனையே…
வண்ணமயில் போல வந்த பாவையே…

பெண் : எண்ண இனிக்கும் நிலையே…
இன்பம் கொடுக்கும் கலையே…
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே…

ஆண் : கண்ணிமையில் தூண்டிலிட்டு…
காதல்தனை தூண்டிவிட்டு…
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே…

பெண் : பெண்ணிவளை ஆதரித்து…
பேசித்தொட்டுக் காதலித்து…
இன்பம்கண்ட காரணத்தால் தூங்கலையே…

ஆண் : சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்…
கொடி இடையில் பாசம் வைத்தேன்…

ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…

பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ…
மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…

ஆண் : கொடியே கொடிமலரே…
கொடி இடையின் நடையழகே…

பெண் : தொட்ட இடம் பூமணக்கும்…
துளிர்க்கரமோ தொட இனிக்கும்…

ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…

—BGM—

பெண் : கண்ணிமைகளை வருத்தி…
கனவுகளைத் துரத்தி…
மென்மனதினால் முடித்த மூக்குத்தி…

ஆண் : என்னுயிரிலே ஒருத்தி…
கண்டபடி என்னை துரத்தி…
அம்மனவள் வாங்கி கொண்ட மூக்குத்தி…

பெண் : கோடிமணி ஓசைநெஞ்சில்…
கூடி வந்துதான் ஒலிக்க…
ஓடி வந்து கேட்கவரும் தேவதைகள்…

—BGM—

ஆண் : சூடமலர் மாலை கொண்டு…
தூபமிட்டு தூண்டிவிட்டு…
கூடவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள்…

பெண் : அந்தி வரும் நேரமம்மா…
ஆசை விளக்கேற்றுதம்மா…

ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…

பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ…
மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…
மணியே மணிக்குயிலே…
மாலை இளம் கதிரழகே…

பெண் : தொட்ட இடம் பூமணக்கும்…
துளிர்க்கரமோ தொட இனிக்கும்…

ஆண் : பூமரப் பாவை நீயடி…
இங்கு நான் பாடும்…
பாமரப் பாடல் கேளடி…

பெண் : ஓஹோ ஹோ ஓஓஓ…
நானன நான நான நா…
ஓஹோ ஹோ ஓஓஓ…
நானன நான நான நா…


Notes : Maniyae Manikuyilae Song Lyrics in Tamil. This Song from Nadodi Thendral (1992). Song Lyrics penned by Ilaiyaraaja. மணியே மணிக்குயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading