இறைவன் இருக்கின்றானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆத்மநாதன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஆர்.பார்த்தசாரதிஅவன் பித்தனா

Iraivan Irukkindrana Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இறைவன் இருக்கின்றானா… ஆ…
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்…
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்…
எங்கே வாழ்கிறான்…

ஆண் : நான் ஆத்திகனானேன்…
அவன் அகப்படவில்லை…
நான் நாத்திகனானேன்…
அவன் பயப்படவில்லை…

—BGM—

பெண் : மனிதன் இருக்கிறானா… ஆஆ…
மனிதன் இருக்கிறானா… ஆ… இறைவன் கேட்கிறான்…
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்…
எங்கே வாழ்கிறான்…

பெண் : நான் அன்பு காட்டினேன்…
அவன் ஆட்கொள்ளவில்லை…
இந்தத் துன்பம் தீர்க்கவும்…
அவன் துணை வரவில்லை…

—BGM—

பெண் : கண்ணிலே உறுதி இல்லை…
காதலுக்கோர் நீதியில்லை…
ஒரு நாள் இருந்த மனம்…
மறு நாள் இருக்கவில்லை…

பெண் : குடிசையில் ஓர் மனது…
கோபுரத்தில் ஓர் மனது…
கூடாத சேர்க்கை எல்லாம்…
கூடினால் பல மனது…

பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ…

—BGM—

ஆண் : பார்ப்பவன் குருடனடி…
படிப்பவன் மூடனடி…
உள்ளதை சொல்பவனே…
உலகத்தில் பித்தனடி…

ஆண் : நீரோ கொதிக்குதடி…
நெருப்போ குளிருதடி…
வெண்மையைக் கருமை என்று…
கண்ணாடி காட்டுதடி…

ஆண் : இறைவன் இருக்கின்றானா… ஆ…

—BGM—

பெண் : ஒன்றையே நினைத்திருந்தும்…
ஒன்றாக வாழ்ந்திருந்தும்…
பெண்ணாகப் பிறந்தவரை…
கண்ணாக யார் நினைத்தார்…

பெண் : இருந்தால் இருந்த இடம்…
இல்லையேல் மறந்து விடும்…
இவர்தான் மனிதரென்றால்…
இயற்கையும் நின்று விடும்…

பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ…

—BGM—

ஆண் : சந்தேகம் பிறந்து விட்டால்…
சத்தியமும் பலிப்பதில்லை…
சத்தியத்தைக் காப்பவரும்…
சாட்சி சொல்ல வருவதில்லை…

ஆண் : வழக்கும் முடியவில்லை…
மனிதரின் தீர்ப்பும் இல்லை…
மனிதனை மறந்து விட்டு…
வாழ்பவன் இறைவன் இல்லை…

ஆண் : இறைவன் இருக்கின்றானா… ஆ…
பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ…

ஆண் : இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்…
பெண் : அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்…
எங்கே வாழ்கிறான்…


Notes : Iraivan Irukkindrana Song Lyrics in Tamil. This Song from Avan Pithana? (1966). Song Lyrics penned by Athmanathan. இறைவன் இருக்கின்றானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading