Category Archives: இரயில் பயணங்களில்

அட யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி.பாலசுப்ரமணியம்டி. ராஜேந்தர்இரயில் பயணங்களில்

Ada Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : அட யாரோ பின்பாட்டுப் பாட…
அட தாளம் நான் பாத்துப் போட…
அட யாரோ பின்பாட்டுப் பாட…
அட தாளம் நான் பாத்துப் போட…

ஆண் : ஹோய்… நையான்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா…
ஹோய்… நையான்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா…

ஆண் : மானே மயக்கம்தானே…
மானே மயக்கம்தானே…

BGM

ஆண் : ஓர விழியிலே சேரத் துடிச்ச…
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்ச…
ஓர விழியிலே சேரத் துடிச்ச…
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்ச…

ஆண் : அடி தாலி கட்டத்தாண்டி…
நல்ல தேதி சொல்லி வாடி…
ஏய் ஹேய் ஹோய்… கூட பூவச் சூடி…
அது வாடக் கூடும் தேவி…

ஆண் : புதுக் கண்ணாடி வளையல் திண்டாடி…
மறுநாள் ஒடஞ்சாச்சு திருநாள் முடிஞ்சாச்சு…
அடிக் கைப்பட்டு மெய் பட்டு…
மைப்பொட்டு கலைந்தாலென்ன… ஹே ஹே ஹே…

ஆண் : மானே மயக்கம்தானே…
மானே மயக்கம்தானே…

ஆண் : அட யாரோ பின்பாட்டுப் பாட… ஹான் ஹான்…
அட தாளம் நான் பாத்துப் போட…

BGM

ஆண் : தேனு கொழச்சே வீணை சுரத்த…
நீ தேடிப் புடிச்சே பேசிச் சிரிச்சே…
தேனு கொழச்சே வீணை சுரத்த…
நீ தேடிப் புடிச்சே பேசிச் சிரிச்சே…

ஆண் : அடி மோகம் தலைக்கு ஏற…
என் முத்தே எங்க போற… ஹோய் ஹோய் ஹோய்…
தேகம் இளைச்சு வாட…
நீயும் வெதச்ச ஆச நூற…

ஆண் : ரோஜா குல்கந்து தந்தா இனிக்காதோ…
பொழுதே போ என்று வந்தா சுவைக்காதோ…
ஹோய்… பனிசிந்தும் மலரொன்று…
வண்டோடு திண்டாடுதோ… ஓஹோ ஓஹோ ஓஹோ…

ஆண் : மானே மயக்கம்தானே…
மானே மயக்கம்தானே…

ஆண் : யாரோ பின்பாட்டுப் பாட…
ஹான் ஹான் ஹா ஹா ஹா…
தாளம் நான் பாத்துப் போட…

ஆண் : ஆஹ் நையாண்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா…
ஹோய்… நையாண்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா…
ஹோய்… நையாண்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா… ஹ ஆஹ்…

BGM


Notes : Ada Yaaro Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. அட யாரோ பாடல் வரிகள்.


வசந்த காலங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்பி. ஜெயச்சந்திரன்டி. ராஜேந்தர்இரயில் பயணங்களில்

Vasantha Kaalangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…

BGM

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
புதுமுகமான மலர்களே நீங்கள்…
நதிதனில் ஆடி கவி பல பாடி…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…

BGM

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…

BGM

ஆண் : கருவண்டு நடனம் தருகின்ற நளினம்…
இதயத்தில் சலனம் அம்மம்மா…
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்…
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா…

ஆண் : உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ…
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ…
உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ…
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ…

ஆண் : செம்மாந்த மலர்கள் அன்னாந்து பார்க்கும்…
உன் காந்த விழிகள்…
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட…
ஏதேதோ குயில்கள்…

ஆண் : மலையில் நெளியும் மேகக் குழல்கல்…
தாகம் தீர்த்திடுமோ…
பூவில் மோதப் பாதம் நோக…
நெஞ்சம் தாங்கிடுமோ…

BGM

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…

BGM

ஆண் : மாதுளை இதழால் மாதவி எழிலால்…
மாங்கனி நிறத்தால் அம்மம்மா…
மாதுளை இதழால் மாதவி எழிலால்…
மாங்கனி நிறத்தால் அம்மம்மா அம்மம்மா…

ஆண் : சுரு வாழையின் மென்மையை…
மேனியில் கொண்டவளே…
இருள் காடெனும் கூந்தலை…
இடைவரை கண்டவளே…

ஆண் : சுரு வாழையின் மென்மையை…
மேனியில் கொண்டவளே…
இருள் காடெனும் கூந்தலை…
இடைவரை கண்டவளே…

ஆண் : நூல் தாங்கும் இடையால் கால் பார்த்து நடக்க…
நெளிகின்ற நளினம்…
மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கி…
குழல்கட்டை ஜாலம்…

ஆண் : பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி…
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊருமடி…
இதழ்கள் ஊருமடி இதழ் கல் ஊருமடி…

BGM

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
புதுமுகமான மலர்களே நீங்கள்…
நதிதனில் ஆடி கவி பல பாடி…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…


Notes : Vasantha Kaalangal Vara Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. வசந்த காலங்கள் பாடல் வரிகள்.


வசந்தம் பாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். ஜானகிடி. ராஜேந்தர்இரயில் பயணங்களில்

Vasantham Paadi Vara Song Lyrics in Tamil


பெண் : தன்ன நன்ன நன…
நன்ன நானனன…
லால்ல லாலலல லலல லாலலல…
ஆஅ ஹா ஹா நானனன…

BGM

பெண் : வசந்தம் பாடி வர…
வைகை ஓடி வர…
இளமை கூடி வர…
இனிமை தேடி வர…
ஆராதனை செய்யட்டுமா…
நீரோடையில் நீந்தட்டுமா…

BGM

பெண் : வசந்தம் பாடி வர…
வைகை ஓடி வர…
இளமை கூடி வர…
இனிமை தேடி வர…
ஆராதனை செய்யட்டுமா…
நீரோடையில் நீந்தட்டுமா…

BGM

பெண் : நி ச க ச நி ப ம க க பபா பபா பபா…

BGM

பெண் : தன்ன நான நான நான நான நானனா…

BGM

பெண் : கரை புரண்டு ஓடும்…
தேன் கரற்கண்டின் சாரம்…
உன் குரல் செய்யும் ஜாலம்…
மாங்குயில் கூட நாணும்…

பெண் : சிதம்பர ரகசியம் போல் உந்தன் அதிசய கீதம்…
தினம் தினம் கேட்டிட பிறந்திடும் புதுவித ராகம்…
பூவதன் வாசத்தில் தென்றலும் மலர்ந்தது…
என சொல்லவோ என கள்ளவோ…

பெண் : வசந்தம் பாடி வர…
வைகை ஓடி வர…
இளமை கூடி வர…
இனிமை தேடி வர…
ஆராதனை செய்யட்டுமா…
நீரோடையில் நீந்தட்டுமா…

BGM

பெண் : மந்திரங்கள் கமழ…
இளம் மை விழிகள் சுழல…
மயக்கம் வரவழைக்கும்…
உன் மது சுரக்கும் நாதம்…

பெண் : ஹஹஹ யாழென குழலென…
இழைந்திடும் குரல் என்னில் மோகம்…
அமுதுண்ண நினைத்திடும்…
தேவனும் மயங்கிடும் வேதம்…

பெண் : மனதினில் ஆசைகள் இதழினில் ஓசைகள்
என பாடுதே மனம் நாடுதே…

பெண் : வசந்தம் பாடி வர…
வைகை ஓடி வர…
இளமை கூடி வர…
இனிமை தேடி வர…
ஆராதனை செய்யட்டுமா…
நீரோடையில் நீந்தட்டுமா…

பெண் : பபப தனனனன பபப…
பபப தருருருரு பபப…

BGM


Notes : Vasantham Paadi Vara Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. வசந்தம் பாடி பாடல் வரிகள்.


Noolumillai Song Lyrics in Tamil

நூலுமில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி. ராஜேந்தர்இரயில் பயணங்களில்

Noolumillai Song Lyrics in Tamil


ஆண் : வசந்த ஊஞ்சலிலே…
அசைந்த பூங்கொடியே…
உதிர்ந்த மாயம் என்ன…
உன் இதய சோகம் என்ன…
உன் இதய சோகம் என்ன…

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை…
வானில் பட்டம் விடுவேனா…
நாதி இல்லை தேவி இல்லை…
நானும் வாழ்வை ரசிப்பேனா…
நானும் வாழ்வை ரசிப்பேனா…

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை…
வானில் பட்டம் விடுவேனா…
நாதி இல்லை தேவி இல்லை…
நானும் வாழ்வை ரசிப்பேனா…
நானும் வாழ்வை ரசிப்பேனா…

BGM

ஆண் : நினைவு வெள்ளம் பெருகி வர…
நெருப்பெனவே சுடுகிறது…

ஆண் : படுக்கை விரித்து போட்டேன்…
அதில் முள்ளாய் அவளின் நினைவு…
பாழும் உலகை வெறுத்தேன்…
அதில் ஏனோ இன்னும் உயிரு…

ஆண் : படுக்கை விரித்து போட்டேன்…
அதில் முள்ளாய் அவளின் நினைவு…
பாழும் உலகை வெறுத்தேன்…
அதில் ஏனோ இன்னும் உயிரு…

ஆண் : மண்ணுலகில் ஜென்மம் என…
என்னை ஏனோ இன்று வரை விட்டு வைத்தாய்…
கண்ணிரண்டில் காட்சி கோடி இன்னும் வைத்து…
கண்ணீரை பிழிந்தெடுத்தாய்…
இறைவா… கண்ணீரை பிழிந்தெடுத்தாய்…

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை…
வானில் பட்டம் விடுவேனா…
நாதி இல்லை தேவி இல்லை…
நானும் வாழ்வை ரசிப்பேனா…
நானும் வாழ்வை ரசிப்பேனா…

BGM

ஆண் : நிழல் உருவில் இணைந்திருக்க…
நிஜம் வடிவில் பிரிந்திருக்க…

ஆண் : பூத்தால் மலரும் உதிரும்…
நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை…
நிலவும் தேய்ந்து வளரும்…
அவள் நினைவோ தேய்வதில்லை…

ஆண் : பூத்தால் மலரும் உதிரும்…
நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை…
நிலவும் தேய்ந்து வளரும்…
அவள் நினைவோ தேய்வதில்லை…

ஆண் : காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை…
பாவை உன்னை நினைத்திடுவேன்…
பாடையிலே போகையிலும்…
தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே…
உறவை தேடி உயிர் பறந்திடுமே…

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை…
வானில் பட்டம் விடுவேனா…
நாதி இல்லை தேவி இல்லை…
நானும் வாழ்வை ரசிப்பேனா… ஆஆ…
நானும் வாழ்வை ரசிப்பேனா… ஆஆ…
நானும் வாழ்வை ரசிப்பேனா…


Notes : Noolumillai Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. நூலுமில்லை பாடல் வரிகள்.


அமைதிக்கு பெயர்தான் சாந்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி. ராஜேந்தர்இரயில் பயணங்களில்

Amaidhikku Peyarthaan Song Lyrics in Tamil


ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி…
சாந்தி சாந்தி…
அந்த அலையினில் ஏதடி சாந்தி…
சாந்தி சாந்தி…

ஆண் : உன் பிரிவினில் ஏதடி சாந்தி…
சாந்தி சாந்தி…
உன் உறவினில்தானடி சாந்தி…

ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி…
அந்த அலையினில் ஏதடி சாந்தி…
உன் பிரிவினில் ஏதடி சாந்தி…
உன் உறவினில்தானடி சாந்தி…
சாந்தி என் சாந்தி…

BGM

ஆண் : நீ கொண்ட பெயரை…
நான் உரைத்து கண்டேன் சாந்தி…
நீ காட்டும் அன்பில்…
நான் கண்டு கொண்டேன் சாந்தி…

ஆண் : நீ பெற்ற துயரை…
நான் கேட்டு துடித்தேன் சாந்தி…
நீ பெற்ற துயரை…
நான் கேட்டு துடித்தேன் சாந்தி…

ஆண் : நீ பிரிந்த பின்னே…
நான் இழந்து நின்றேன் சாந்தி…
நீ பிரிந்த பின்னே…
நான் இழந்து நின்றேன் சாந்தி…

ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி…
அந்த அலையினில் ஏதடி சாந்தி…

BGM

ஆண் : எல்லோரும் வாழ்வில் தேடிடும்…
பாக்கியம் சாந்தி…
என் உயிரோடு கலந்து எழுதிடும்…
வாக்கியம் சாந்தி…

ஆண் : எது வந்த போதும்…
மறவாத செல்வம் சாந்தி…
எது வந்த போதும்…
மறவாத செல்வம் சாந்தி…

ஆண் : எனை இன்று வாட்டும்…
தனிமையில் இல்லயே சாந்தி…
எனை இன்று வாட்டும்…
தனிமையில் இல்லயே சாந்தி…

ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி…
அந்த அலையினில் ஏதடி சாந்தி…

BGM

ஆண் : உன்னோடு வாழ்ந்த சில காலம்…
போதும் சாந்தி…
மண்ணோடு மறையும் நாள் வரை…
நிலைக்கும் சாந்தி…

ஆண் : கண்ணோடு வழியும்…
நீர் என்று மாறும் சாந்தி…
கண்ணோடு வழியும்…
நீர் என்று மாறும் சாந்தி…

ஆண் : பொன் ஏடு எழுதும்…
என் உறவு வாழ்த்தும் சாந்தி…
பொன் ஏடு எழுதும்…
என் உறவு வாழ்த்தும் சாந்தி…

ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி…
அந்த அலையினில் ஏதடி சாந்தி…
உன் பிரிவினில் ஏதடி சாந்தி…
உன் உறவினில்தானடி சாந்தி…

ஆண் : சாந்தி என் சாந்தி…
சாந்தி என் சாந்தி…


Notes : Amaidhikku Peyarthaan Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. அமைதிக்கு பெயர்தான் சாந்தி பாடல் வரிகள்.