நூலுமில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி. ராஜேந்தர்இரயில் பயணங்களில்

Noolumillai Song Lyrics in Tamil


ஆண் : வசந்த ஊஞ்சலிலே…
அசைந்த பூங்கொடியே…
உதிர்ந்த மாயம் என்ன…
உன் இதய சோகம் என்ன…
உன் இதய சோகம் என்ன…

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை…
வானில் பட்டம் விடுவேனா…
நாதி இல்லை தேவி இல்லை…
நானும் வாழ்வை ரசிப்பேனா…
நானும் வாழ்வை ரசிப்பேனா…

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை…
வானில் பட்டம் விடுவேனா…
நாதி இல்லை தேவி இல்லை…
நானும் வாழ்வை ரசிப்பேனா…
நானும் வாழ்வை ரசிப்பேனா…

—BGM—

ஆண் : நினைவு வெள்ளம் பெருகி வர…
நெருப்பெனவே சுடுகிறது…

ஆண் : படுக்கை விரித்து போட்டேன்…
அதில் முள்ளாய் அவளின் நினைவு…
பாழும் உலகை வெறுத்தேன்…
அதில் ஏனோ இன்னும் உயிரு…

ஆண் : படுக்கை விரித்து போட்டேன்…
அதில் முள்ளாய் அவளின் நினைவு…
பாழும் உலகை வெறுத்தேன்…
அதில் ஏனோ இன்னும் உயிரு…

ஆண் : மண்ணுலகில் ஜென்மம் என…
என்னை ஏனோ இன்று வரை விட்டு வைத்தாய்…
கண்ணிரண்டில் காட்சி கோடி இன்னும் வைத்து…
கண்ணீரை பிழிந்தெடுத்தாய்…
இறைவா… கண்ணீரை பிழிந்தெடுத்தாய்…

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை…
வானில் பட்டம் விடுவேனா…
நாதி இல்லை தேவி இல்லை…
நானும் வாழ்வை ரசிப்பேனா…
நானும் வாழ்வை ரசிப்பேனா…

—BGM—

ஆண் : நிழல் உருவில் இணைந்திருக்க…
நிஜம் வடிவில் பிரிந்திருக்க…

ஆண் : பூத்தால் மலரும் உதிரும்…
நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை…
நிலவும் தேய்ந்து வளரும்…
அவள் நினைவோ தேய்வதில்லை…

ஆண் : பூத்தால் மலரும் உதிரும்…
நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை…
நிலவும் தேய்ந்து வளரும்…
அவள் நினைவோ தேய்வதில்லை…

ஆண் : காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை…
பாவை உன்னை நினைத்திடுவேன்…
பாடையிலே போகையிலும்…
தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே…
உறவை தேடி உயிர் பறந்திடுமே…

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை…
வானில் பட்டம் விடுவேனா…
நாதி இல்லை தேவி இல்லை…
நானும் வாழ்வை ரசிப்பேனா… ஆஆ…
நானும் வாழ்வை ரசிப்பேனா… ஆஆ…
நானும் வாழ்வை ரசிப்பேனா…


Notes : Noolumillai Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. நூலுமில்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading