மாயா மச்சீந்திரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்இந்தியன்

Maya Machindra Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மாயா மச்சீந்திரா…
மச்சம் பார்க்க வந்தீரா…
மாயங்கள் காட்டி…
மோசம் செய்யும் மாவீரா…

ஆண் : மாறன் கலைக்கூடம்…
மஞ்சத்தில் உருவாக்கும்…
மேஸ்திரி காதல் சாஸ்திரி…

பெண் : மார்பில் விளையாட…
மன்னன் கை விசைப் போட…
ராத்திரி அடச்சீ போக்கிரி…

ஆண் : உருமாறி உருமாறி…
ஓவியப்பெண் உனைத் தேடி…
வருவேனே வாரித் தருவேனே…

பெண் : தடை தாண்டும் படை வீரா…
உடையாக அணிவிரா…
தம்பூரா மீட்டும் கிங்காரா…

ஆண் : உனை நானும் அடையாது…
விழி வாசல் அடையாது…
கஞ்சிரா தட்டக் கொஞ்சிரா…

ஆண் : மாயா மச்சீந்திரா…
மச்சம் பார்க்க வந்தாரா…
மாயங்கள் காட்டி…
பெண் : மோசம் செய்யும் மாவீரா…

—BGM—

பெண் : உன்னை நான் சந்தித்தால்…
உள்ளத்தில் தித்தித்தாய்…
தகதிமித் தகதிமித் தாளம்…

ஆண் : உன்னை நான் சிந்தித்தால்…
உண்டாகும் தித்திப்பை…
உதடுக்குள் பொத்தி வைத்தேன் நாளும்…

பெண் : பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன…
முத்தமிட்டு சர்க்கரை நோய் வந்தாலென்ன…

ஆண் : தினமும் தினமும் வரலாமா…
தவணை முறையில் தரலாமா…
சொல்லடி சோன்பப்படி…

பெண் : செயலில் இறங்கு சீக்கிரமா…
மீனம் மேஷம் பாக்கணுமா…
மென்னுடா என்னைத் தின்னுடா…

ஆண் : மாயா மச்சீந்திரா…
மச்சம் பார்க்க வந்தாரா…

—BGM—

பெண் : மாயங்கள் காட்டி…
மோசம் செய்யும் மாவீரா…

—BGM—

பெண் : அன்பே என் பேரென்ன…
நான் வாழும் ஊரென்ன…
அறியாமல் உன்னைக் கேட்டேன் நானே…

ஆண் : பெண்ணே என் பேச்செங்கே…
நான் வாங்கும் மூச்செங்கே…
புரியாமல் தவிக்கின்றேன் மானே…

பெண் : காதலுக்குக் கேள்விக் கேட்டு மாளாதைய்யா…
காமனுக்கு தாமதங்கள் ஆகாதைய்யா…

ஆண் : கனலில் பனியாய் கரைவோமா…
கரைந்தே கவிதை வரைவோமா…
சுட்டியே கண்ணுக் குட்டியே…

பெண் : உனையும் எனையும் புணைவோமா…
உலகப் படமாய் தருவோமா…
ஹஜ்ஜிமா செல்ல புஜ்ஜிமா…

பெண் : மாயா மச்சீந்திரா…
மச்சம் பார்க்க வந்தீரா…

—BGM—

பெண் : மாயங்கள் காட்டி…
மோசம் செய்யும் மாவீரா…

—BGM—


Notes : Maya Machindra Song Lyrics in Tamil. This Song from Indian (1996). Song Lyrics penned by Vaali. மாயா மச்சீந்திரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading