பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.ஜே. யேசுதாஸ் | ஏ.ஆர்.ரகுமான் | இந்தியன் |
Pachai Kiligal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
ஆண் : பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
ஆண் : சின்ன சிறு கூட்டுக்குள்ள…
சொர்க்கம் இருக்கு…
அட சின்னச் சின்ன அன்பில்தானே…
ஜீவன் இன்னும் இருக்கு…
ஆண் : பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு…
அட பாசம் மட்டும் போதும்…
கண்ணே காசு பணம் என்னத்துக்கு…
ஆண் : பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
—BGM—
ஆண் : அந்த விண்ணில் ஆனந்தம்…
இந்த மண்ணில் ஆனந்தம்…
அடி பூமிப் பந்தை முட்டி வந்த…
புல்லில் ஆனந்தம்…
ஆண் : வயலின் சுத்தம் ஆனந்தம்…
மழையின் சத்தம் ஆனந்தம்…
அட மழையில் கூடச் சாயம் போகா…
வானவில் ஆனந்தம்…
ஆண் : வாழ்வில் நூா் ஆனந்தம்…
வாழ்வே பேரானந்தம்…
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம்…
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்…
ஆண் : பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
—BGM—
ஆண் : உன் மூச்சில் நான் வாழ்ந்தால்…
என் முதுமை ஆனந்தம்…
நீ இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால்…
இன்னும் ஆனந்தம்…
ஆண் : பனி கொட்டும் மாதத்தில்…
உன் வெப்பம் ஆனந்தம்…
என் காது வரைக்கும் கம்பளி போத்தும்…
கருணை ஆனந்தம்…
ஆண் : சொந்தம் ஓரானந்தம்…
பந்தம் பேரானந்தம்…
கண்ணே உன் விழியால் பிறர்க்கழுதால்…
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்…
ஆண் : பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
ஆண் : பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
—BGM—
Notes : Pachai Kiligal Song Lyrics in Tamil. This Song from Indian (1996). Song Lyrics penned by Vairamuthu. பச்சைக் கிளிகள் பாடல் வரிகள்.