கண்ணுக்குள் பொத்திவைப்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிவிஜய் பிரகாஷ், சாதனா சர்கம், சாருலதா மணி & ஆர்.கணேஷ்ஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Kannukkul Pothivaippen Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே…
வா தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

பெண் : அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட…
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…
என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…

BGM

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே…
வா தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

ஆண் : அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட…
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…

பெண் : என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…

BGM

ஆண் : சிறு சிட்டிகை பாசம்…
பெரும் கடலாய் மாற…
மணித்துளி எல்லாமே அரை நொடிக்குள் தீர…

BGM

பெண் : மழைத்தரையா உள்ளம் பிசுபிசுப்பை பேண…
எதற்கடி திண்டாட்டம் கதகதப்பை காண…

ஆண் : நீ ராதை இனம்…
சொல்லாமல் சொன்னாயே…

பெண் : செங்கோதை மணம்…
உன் பேச்சில் தந்தாயே…
உன்னாலே யோசிக்கிறேன்…

ஆண் : உன் விரலை பிடித்து…
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்…

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே வா…
தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

பெண் : அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட…
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…
என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…

BGM

பெண் : உயிா் எதையோ தேடும்…
மணம் அதையே நாடும்…
தனித்தனியே ரெண்டும் ஒரு வழியில் ஓடும்…

BGM

ஆண் : எது எதற்கோ பொய்கள்…
எதிா் எதிராய் மெய்கள்…
எது எதுவாய் ஆகும்…
விடை கடந்தே போகும்…

பெண் : கண்ணாடி முனை போல்…
எண்ணங்கள் கூறாய்…

ஆண் : முன் இல்லாதது போல்…
எல்லாமே வேறாய்…
உன்னாலே பூாிக்கிறேன்…

பெண் : உன் சிாிப்பு சரத்தில் மகிழ…
மரத்தின் பூ தைக்கிறேன்…

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே வா…
தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

ஆண் : அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட…
பெண் : இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…

ஆண் : என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…


Notes : Kannukkul Pothivaippen Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Parvathy. கண்ணுக்குள் பொத்திவைப்பேன் பாடல் வரிகள்.


Scroll to Top