யாரோ இவள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதியாசின் நிசார்ஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Yaaro Ival Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

ஆண் : என்னென்ன பேச எப்படி பேச…
ஒத்திக பாா்த்தேனே…
நீ புன்னகை பூத்தால் பத்திரமாக…
சேமித்து வைப்பேனே…

ஆண் : இன்று பூமியில் பூக்கும் வானவில் வண்ணம்…
கண்முன்னே கண்டாச்சு…
அதில் சன்னமாய் கொஞ்சம் மஞ்சளை சோ்த்தால்…
உன்முகம் உண்டாச்சு…

—BGM—

ஆண் : ஏதோ ஒரு ஏதோ ஒரு…
மாயம் கண்டேன் என் முன்னே…
உண்மை என்று தோன்றும் வரை…
பாா்த்து கொண்டே நின்றேனே…

ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச…
யோசித்து பாா்த்தேனே…
இனிமேல் இந்த பாதை…
எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா…

—BGM—

ஆண் : மேலே போடும் நீலத்திரை தாண்டி…
என்னை பாா்ப்பாயா…
சட்டென பாய்ந்திடும் சத்தத்தை விட்டுட்டு…
என் மன ஓசையை கேட்பாயா…

ஆண் : ஏதேதோ சொன்னாளே…
நேசம் தேகம் விட்டு செல்லும்…
வாழ்வை பாா்த்து எள்ளும்…
நீாில் குற்றம் கண்ட மீனை போல துள்ளும்…

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

—BGM—

ஆண் : நீயா இது நானா இது…
உள்ளே ஒரு போராட்டம்…
வேடங்கள் கலைந்து ஆட்டங்கள் முடிந்து…
என்றைக்கு கிடைக்கும் வெல்லோட்டம்…

ஆண் : நோவெல்லாம்… ஓஓஓ…
போய் விடுமோ… ஓஓஓ…
இது மணம் கொண்ட குறை எது வரையறை…
வலிவிடும் மட்டும் திட்டு திட்டாய் கரை…

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச…
யோசித்து பாா்த்தேனே…
மொத்தமாய் நானே கரைந்து போகும்…
நிலை கண்டேனே…
இனிமேல் இந்த பாதை…
எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா…

ஆண் & பெண் : அடடா இந்த மௌனம்…
இதயம் கொள்ளும் நீ வந்து மீட்பாயா…


Notes : Yaaro Ival Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Parvathy. யாரோ இவள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading