தையதா தையதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம், ரேஷ்மி & அமல்ராஜ்பரத்வாஜ்திருட்டுப்பயலே

Thaiyaththaa Song Lyrics in Tamil


BGM

பெண் : தையதா தையதா தைய தைய தா…
பையதா பையதா பஞ்சு முத்தம் தா…

பெண் : உயிர் வாழ்கிற வரைக்கும்…
உனக்கே மடி கொடுப்பேன்…
இனி ஓர் ஜென்மம் இருந்தால்…
உனக்கே மீண்டும் பிறப்பேன்…
உனது கனவில் நினைவில் உருவில்…
நானே என்றும் இருப்பேன்…

பெண் : தையதா தையதா தைய தைய தா…
பையதா பையதா பஞ்சு முத்தம் தா…

BGM

பெண் : நிலங்கள் உடைந்து போனாலும்…
நிழல்கள் உடைவதில்லை…
நேசம் பாசம் நிஜமானது…

—BGM—

பெண் : மழையில் கிளிகள் நனைந்தாலும்…
சாயம் போவதில்லை…
அன்பே நம் காதல் அது போன்றது…

பெண் : பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை…
சொன்னதை செய்தாலே நிகரேதும் இல்லை…

பெண் : நீ உறுதியானவன்…
என் உரிமையானவன்…
பசி ருசியை பகல் இரவை…
பகிர்ந்து கொள்ளும் தலைவன்… தையதா…

பெண் : தையதா தையதா தைய தைய தா…
பையதா பையதா பஞ்சு முத்தம் தா…

BGM

பெண் : பிறவி வந்து போனாலும்…
உறவு முறிவதில்லை…
உயிரை உயிரால் முறுக்கேற்றவா…

BGM

பெண் : உன்னை போன்ற அன்பாளன்…
யார்க்கும் வாய்க்க வேண்டும்…
உடலை உடலால் குளிப்பாட்டவா…

பெண் : ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா…
மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்…
உன்னை இறுக்கி அணைக்கிறேன்…
உயிர் நுரைக்க ரசிக்கிறேன்…
அணுஅணுவாய் உனை பிளந்து…
என் ஆயுள் அடைப்பேன்… தையதா…


Notes : Thaiyaththaa Song Lyrics in Tamil. This Song from Thiruttu Payale (2006). Song Lyrics penned by Vairamuthu. தையதா தையதா பாடல் வரிகள்.


Scroll to Top