டெலிபோன் மணி போல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஹரிணிஏ.ஆர்.ரகுமான்இந்தியன்

Telephone Manipol Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : டெலிபோன் மணி போல்…
சிரிப்பவள் இவளா…
மெல்பௌன் மலர் போல்…
மெல்லிய மகளா…

ஆண் : டிஜிட்டலில் செதுக்கிய குரலா…
எலிசபெத் டெய்லரின் மகளா…
சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா…

ஆண் : சோனா சோனா…
இவள் அங்கம் தங்கம்தானா…
சோனா சோனா…
இவள் லேட்டஸ்ட் செல்லூலர் ஃபோனா…

ஆண் : கம்ப்யூட்டர் கொண்டிவளை…
அந்த பிரம்மன் படைத்தானா…

ஆண் : டெலிபோன் மணி போல்…
சிரிப்பவள் இவளா…
மெல்பௌன் மலர் போல்…
மெல்லிய மகளா…

—BGM—

பெண் : நீயில்லை என்றால் வெயிலும் அடிக்காது…
துளி மழையும் இருக்காது…
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது…
ஒரு சம்பவம் எனக்கேது…

ஆண் : உன் பேரை சொன்னால்…
சுவாசம் முழுதும் சுகவாசம் வீசுதடி…
உன்னை பிரிந்தாலே…
வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி…

பெண் : நீரில்லை என்றால்…
அருவி இருக்காது…
மலை அழகு இருக்காது…

பெண் : நீ இல்லாமல் போனால்…
இதயம் இருக்காது…
என் இளமை பசிக்காது…

ஆண் : வெள்ளை நதியே…
உன்னுள் என்னை தினம்…
மூழ்கி ஆட விடு…

ஆண் : வெட்கம் வந்தால்…
கூந்தல் கொண்டு…
உனைக் கொஞ்சம் மூடி விடு…

ஆண் : டெலிபோன் மணி போல்…
சிரிப்பவள் இவளா…
மெல்பௌன் மலர் போல்…
மெல்லிய மகளா…

—BGM—

ஆண் : உன் பேரை யாரும்…
சொல்லவும் விடமாட்டேன்…
அந்த சுகத்தையும் தர மாட்டேன்…

ஆண் : உன் கூந்தல் பூக்கள்…
விழவே விட மாட்டேன்…
அதை வெயிலில் விட மாட்டேன்…

பெண் : பெண்கள் வாசம்…
என்னைத் தவிர இனி வீசக்கூடாது…
அன்னை தெரசா…
அவரை தவிர பிறர் பேசக்கூடாது…

ஆண் : நீ போகும் தெருவில்…
ஆண்களை விட மாட்டேன்…
சில பெண்களை விட மாட்டேன்…

ஆண் : நீ சிந்தும் சிரிப்பை…
காற்றில் விட மாட்டேன்…
அதை கவர்வேன் தர மாட்டேன்…

பெண் : புடவை கடையில்…
பெண்ணின் சிலையை…
நீ தீண்டக்கூடாது…

பெண் : காதல் கோட்டை கற்புக்கரசா…
நீ தாண்ட கூடாது…

ஆண் : டெலிபோன் மணி போல்…
சிரிப்பவள் இவளா…
மெல்பௌன் மலர் போல்…
மெல்லிய மகளா…

ஆண் : டிஜிட்டலில் செதுக்கிய குரலா…
எலிசபெத் டெய்லரின் மகளா…
சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா…

ஆண் : சோனா சோனா…
இவள் அங்கம் தங்கம்தானா…
சோனா சோனா…
இவள் லேட்டஸ்ட் செல்லூலர் ஃபோனா…

ஆண் : கம்ப்யூட்டர் கொண்டிவளை…
அந்த பிரம்மன் படைத்தானா…

—BGM—


Notes : Telephone Manipol Song Lyrics in Tamil. This Song from Indian (1996). Song Lyrics penned by Vairamuthu. டெலிபோன் மணி போல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading