நான் வானவில்லையே பார்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன்சிற்பிமூவேந்தர்

Naan Vaanavillaye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன்…
அதைக் காணவில்லையே வேர்த்தேன்…
நான் வானவில்லையே பார்த்தேன்…
அதைக் காணவில்லையே வேர்த்தேன்…

ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை…
ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன்…
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்…
ஓஹோ… ஓஓஓஓ…

—BGM—

ஆண் : கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன…
மயிலும் நடனமிடுமோ…
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ…
இரு கண்கள் ஆகிவிடுமோ…

ஆண் : தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி…
தேனில் செய்த இதழ்… ஓஓஓ…
மூடி வைத்த முயல்…
மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ…

ஆண் : பகல் நேரம் நிலவைப் பார்த்தது…
நானடி கண்ணம்மா…
முந்தானை வாசம் வந்தது…
ஆறுதல் சொல்லம்மா…

ஆண் : விழி கண்டவள் கண்டிட…
கெஞ்சுது நெஞ்சது…
கொஞ்சம் நில்லம்மா…

ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன்…
அதைக் காணவில்லையே வேர்த்தேன்…

ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்…
வீசச் சொல்லியா கேட்டேன்…
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்…

—BGM—

ஆண் : சேலை சூடி ஒரு…
சோலை போல வழி…
பூக்கள் சிந்தி விழுமோ…

ஆண் : பாறையான மனம் ஈரமானதடி…
பார்வை தந்த வரமோ…
பாதம் பட்ட இடம் சூடு கண்டு…
உன்னை நானும் கண்டு விடுவேன்…

ஆண் : காதலான மழை சாரல் தூவி விட…
மார்பில் ஒதுங்கி விடுவேன்…

ஆண் : பொய் மானைத் தேடி சென்றது…
ராமனின் கண்ணம்மா…
மெய் மானைத் தேடச் சொன்னது…
மாரனின் நெஞ்சம்மா…

ஆண் : விழி கண்டவள் கண்டிட…
கெஞ்சுது நெஞ்சது…
கொஞ்சம் நில்லம்மா…

ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன்…
அதைக் காணவில்லையே வேர்த்தேன்…

ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்…
வீசச் சொல்லியா கேட்டேன்…
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்…

—BGM—


Notes : Naan Vaanavillaye Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Arivumathi. நான் வானவில்லையே பார்த்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading