அமைதிக்கு பெயர்தான் சாந்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி. ராஜேந்தர்இரயில் பயணங்களில்

Amaidhikku Peyarthaan Song Lyrics in Tamil


ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி…
சாந்தி சாந்தி…
அந்த அலையினில் ஏதடி சாந்தி…
சாந்தி சாந்தி…

ஆண் : உன் பிரிவினில் ஏதடி சாந்தி…
சாந்தி சாந்தி…
உன் உறவினில்தானடி சாந்தி…

ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி…
அந்த அலையினில் ஏதடி சாந்தி…
உன் பிரிவினில் ஏதடி சாந்தி…
உன் உறவினில்தானடி சாந்தி…
சாந்தி என் சாந்தி…

BGM

ஆண் : நீ கொண்ட பெயரை…
நான் உரைத்து கண்டேன் சாந்தி…
நீ காட்டும் அன்பில்…
நான் கண்டு கொண்டேன் சாந்தி…

ஆண் : நீ பெற்ற துயரை…
நான் கேட்டு துடித்தேன் சாந்தி…
நீ பெற்ற துயரை…
நான் கேட்டு துடித்தேன் சாந்தி…

ஆண் : நீ பிரிந்த பின்னே…
நான் இழந்து நின்றேன் சாந்தி…
நீ பிரிந்த பின்னே…
நான் இழந்து நின்றேன் சாந்தி…

ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி…
அந்த அலையினில் ஏதடி சாந்தி…

BGM

ஆண் : எல்லோரும் வாழ்வில் தேடிடும்…
பாக்கியம் சாந்தி…
என் உயிரோடு கலந்து எழுதிடும்…
வாக்கியம் சாந்தி…

ஆண் : எது வந்த போதும்…
மறவாத செல்வம் சாந்தி…
எது வந்த போதும்…
மறவாத செல்வம் சாந்தி…

ஆண் : எனை இன்று வாட்டும்…
தனிமையில் இல்லயே சாந்தி…
எனை இன்று வாட்டும்…
தனிமையில் இல்லயே சாந்தி…

ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி…
அந்த அலையினில் ஏதடி சாந்தி…

BGM

ஆண் : உன்னோடு வாழ்ந்த சில காலம்…
போதும் சாந்தி…
மண்ணோடு மறையும் நாள் வரை…
நிலைக்கும் சாந்தி…

ஆண் : கண்ணோடு வழியும்…
நீர் என்று மாறும் சாந்தி…
கண்ணோடு வழியும்…
நீர் என்று மாறும் சாந்தி…

ஆண் : பொன் ஏடு எழுதும்…
என் உறவு வாழ்த்தும் சாந்தி…
பொன் ஏடு எழுதும்…
என் உறவு வாழ்த்தும் சாந்தி…

ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி…
அந்த அலையினில் ஏதடி சாந்தி…
உன் பிரிவினில் ஏதடி சாந்தி…
உன் உறவினில்தானடி சாந்தி…

ஆண் : சாந்தி என் சாந்தி…
சாந்தி என் சாந்தி…


Notes : Amaidhikku Peyarthaan Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. அமைதிக்கு பெயர்தான் சாந்தி பாடல் வரிகள்.


Scroll to Top