கண்ணன் வந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்ராமு

Kannan Vandhan Song Lyrics in Tamil


ஆண் : நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு…
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு…
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்…
பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் நெஞ்சே…

—BGM—

ஆண் : கண்ணன் வந்தான்…
அங்கே கண்ணன் வந்தான்…
ஏழை கண்ணீரைக் கண்டதும்…
கண்ணன் வந்தான்…

ஆண் : கண்ணன் வந்தான்…
அங்கே கண்ணன் வந்தான்…
ஏழை கண்ணீரைக் கண்டதும்…
கண்ணன் வந்தான்… கண்ணன் வந்தான்… ஆ…

—BGM—

ஆண் : தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்…
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்…
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்…
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்…

ஆண் : கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்…
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்…
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்…
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்…

ஆண் : கண்ணன் வந்தான்…
மாயக் கண்ணன் வந்தான்…
கண்னன் வந்தான்…

ஆண் : கண்ணன் வந்தான்…
அங்கே கண்ணன் வ்ந்தான்…
ஏழை கண்ணீரைக் கண்டதும்…
கண்ணன் வந்தான்… கண்ணன் வந்தான்… ஆ…

—BGM—

ஆண் : முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்…
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்…
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்…
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்…

ஆண் : குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்…
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்…
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்…
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்…

ஆண் : அடையாத கதவிருக்கும் சந்நிதானம்…
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்…
சந்நிதானம்… கண்ணன் சந்நிதானம்… சந்நிதானம்…

ஆண் : கண்ணன் வந்தான்…
அங்கே கண்ணன் வ்ந்தான்…
ஏழை கண்ணீரைக் கண்டதும்…
கண்ணன் வந்தான்… கண்ணன் வந்தான்… ஆ…

ஆண் : கண்ணா… ஆஆ… கண்ணா… கண்ணா…

—BGM—

ஆண் : கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்…
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்…
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்…
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்…

ஆண் : கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்…
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்…
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்…
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்…

ஆண் : கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா…
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா…
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா…
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா…

ஆண் : கண்ணா… கண்ணா…
கண்ணா… கண்ணா…

குழு : கண்ணன் வந்தான்…
அங்கே கண்ணன் வந்தான்…
ஏழை கண்ணீரைக் கண்டதும்…
கண்ணன் வந்தான்… கண்ணன் வந்தான்… ஆ…


Notes : Kannan Vandhan Song Lyrics in Tamil. This Song from Ramu (1966). Song Lyrics penned by Kannadasan. கண்ணன் வந்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading