வசந்த காலங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்பி. ஜெயச்சந்திரன்டி. ராஜேந்தர்இரயில் பயணங்களில்

Vasantha Kaalangal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…

—BGM—

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
புதுமுகமான மலர்களே நீங்கள்…
நதிதனில் ஆடி கவி பல பாடி…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…

—BGM—

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…

—BGM—

ஆண் : கருவண்டு நடனம் தருகின்ற நளினம்…
இதயத்தில் சலனம் அம்மம்மா…
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்…
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா…

ஆண் : உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ…
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ…
உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ…
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ…

ஆண் : செம்மாந்த மலர்கள் அன்னாந்து பார்க்கும்…
உன் காந்த விழிகள்…
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட…
ஏதேதோ குயில்கள்…

ஆண் : மலையில் நெளியும் மேகக் குழல்கல்…
தாகம் தீர்த்திடுமோ…
பூவில் மோதப் பாதம் நோக…
நெஞ்சம் தாங்கிடுமோ…

—BGM—

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…

—BGM—

ஆண் : மாதுளை இதழால் மாதவி எழிலால்…
மாங்கனி நிறத்தால் அம்மம்மா…
மாதுளை இதழால் மாதவி எழிலால்…
மாங்கனி நிறத்தால் அம்மம்மா அம்மம்மா…

ஆண் : சுரு வாழையின் மென்மையை…
மேனியில் கொண்டவளே…
இருள் காடெனும் கூந்தலை…
இடைவரை கண்டவளே…

ஆண் : சுரு வாழையின் மென்மையை…
மேனியில் கொண்டவளே…
இருள் காடெனும் கூந்தலை…
இடைவரை கண்டவளே…

ஆண் : நூல் தாங்கும் இடையால் கால் பார்த்து நடக்க…
நெளிகின்ற நளினம்…
மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கி…
குழல்கட்டை ஜாலம்…

ஆண் : பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி…
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊருமடி…
இதழ்கள் ஊருமடி இதழ் கல் ஊருமடி…

—BGM—

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
புதுமுகமான மலர்களே நீங்கள்…
நதிதனில் ஆடி கவி பல பாடி…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…


Notes : Vasantha Kaalangal Vara Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. வசந்த காலங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading