Category Archives: ரிக்‌ஷாக்காரன்

Kadalooram Vaangiya Kaatru Song Lyrics in Tamil

கடலோரம் வாங்கிய காத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்ரிக்‌ஷாக்காரன்

Kadalooram Vaangiya Kaatru Song Lyrics in Tamil


ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…

BGM

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…

BGM

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…
கதகதப்பா மாறிடுமோ…
காதலித்தால் ஆறிடுமோ…

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…

BGM

ஆண் : சிறு மணல் வீட்டில் குடி ஏறும் நண்டானது…
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது…

BGM

ஆண் : சிறு மணல் வீட்டில் குடி ஏறும் நண்டானது…
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது…
பொங்கும் நுரையோடு கரை ஏறும் அலையானது…
இந்த பெண் பார்த்து நிலவென்று விளையாடுது…

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…

BGM

ஆண் : வண்ண பூ சேலை மலர் மேனி மறைக்கின்றது…
அதை பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது…

BGM

ஆண் : வண்ண பூ சேலை மலர் மேனி மறைக்கின்றது…
அதை பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது…
இடம் கொடுக்காமல் தளிர் கைகள் தடுக்கின்றது…
வெட்கம் தாளாமல் இளம் நெஞ்சம் துடிக்கின்றது…

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…

BGM

ஆண் : கோயில் சிலை ஒன்று…
உயிர் கொண்டு நடை போட்டதோ…
இரு விழி கொண்டு என்னை பார்த்து…
எடை போட்டதோ…

ஆண் : ஒரு துணை வந்து விலை கொள்ள…
தடை போட்டதோ…
அதை நான் வாங்க அவள் நாணம்…
தடை போட்டதோ…

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…
கதகதப்பா மாறிடுமோ…
காதலித்தால் ஆறிடுமோ…

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…


Notes : Kadalooram Vaangiya Kaatru Song Lyrics in Tamil. This Song from Rickshawkaran (1971). Song Lyrics penned by Vaali. கடலோரம் வாங்கிய காத்து பாடல் வரிகள்.


அங்கே சிரிப்பவர்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்ரிக்‌ஷாக்காரன்

Angey Sirippavargal Song Lyrics in Tamil


BGM

ஆண் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…
அது ஆணவ சிரிப்பு…
இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ…
ஆனந்த சிரிப்பு…

BGM

ஆண் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…
அது ஆணவ சிரிப்பு…
இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ…
ஆனந்த சிரிப்பு…

ஆண் : நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும்…
நாள் வரும்போது…
அன்று சிரிப்பது யார் அழுவது யார்…
தெரியும் அப்போது…

ஆண் : நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும்…
நாள் வரும்போது…
அன்று சிரிப்பது யார் அழுவது யார்…
தெரியும் அப்போது…

ஆண் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…
அது ஆணவ சிரிப்பு…
ஆணவ சிரிப்பு…

BGM

ஆண் : வயிறு வலிக்க சிரிப்பவர்கள்…
மனித ஜாதி…
பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள்…
மிருக ஜாதி…

ஆண் : வயிறு வலிக்க சிரிப்பவர்கள்…
மனித ஜாதி…
பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள்…
மிருக ஜாதி…

ஆண் : மனிதன் என்ற போர்வையில்…
மிருகம் வாழும் நாட்டிலே…

ஆண் : நீதி என்றும் நேர்மை என்றும்…
எழுதி வைப்பார் ஏட்டிலே…
எழுதி வைப்பார் ஏட்டிலே…

ஆண் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…
அது ஆணவ சிரிப்பு…
இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ…
ஆனந்த சிரிப்பு…

BGM

ஆண் : நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா…
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா…
நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா…
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா…

ஆண் : தர்ம தாயின் பிள்ளைகள்…
தாயின் கண்ணை மறைப்பதா…

ஆண் : உண்மை தன்னை ஊமையாக்கி…
தலைகுனிய வைப்பதா…
தலைகுனிய வைப்பதா…

ஆண் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…
அது ஆணவ சிரிப்பு…
ஆணவ சிரிப்பு…

BGM

ஆண் : தோட்டம் காக்க போட்ட வேலி…
பயிரை தின்றதோ…
அதை கேள்வி கேக்க ஆள் இல்லாமல்…
பார்த்து நிப்பதோ…

ஆண் : தோட்டம் காக்க போட்ட வேலி…
பயிரை தின்றதோ…
அதை கேள்வி கேக்க ஆள் இல்லாமல்…
பார்த்து நிப்பதோ…

ஆண் : நான் ஒரு கை பார்க்கிறேன்…
நேரம் வரும் கேட்கிறேன்…
பூனை அல்ல புலிதான் என்று…
போக போக காட்டுகிறேன்…
போக போக காட்டுகிறேன்…


Notes : Angey Sirippavargal Song Lyrics in Tamil. This Song from Rickshawkaran (1971). Song Lyrics penned by Vaali. அங்கே சிரிப்பவர்கள் பாடல் வரிகள்.


அழகிய தமிழ் மகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்ரிக்‌ஷாக்காரன்

Azhagiya Thamizh Magal Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆணி பொன் தேர் கொண்டு…
மாணிக்க சிலை என்று…
வந்தாய் நின்றாய் இங்கே…

BGM

பெண் : காணிக்கை பொருளாகும்…
காதல் என் உயிராகும்…
நெஞ்சை தந்தேன் அங்கே…

BGM

ஆண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…

ஆண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…

பெண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…

பெண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…

BGM

ஆண் : வானுலகமென்னும்…
மாளிகையில் மின்னும்…
பூமகளின் கன்னம்…
தேனிலவின் வண்ணம்…

ஆண் : வானுலகமென்னும்…
மாளிகையில் மின்னும்…
பூமகளின் கன்னம்…
தேனிலவின் வண்ணம்…

பெண் : நீல விழி பந்தல்…
நீ இருக்கும் மேடை…
கோலமிடும் ஆசை…
தூது விடும் ஜாடை…

பெண் : நீல விழி பந்தல்…
நீ இருக்கும் மேடை…
கோலமிடும் ஆசை…
தூது விடும் ஜாடை…

பெண் : இளமையில் இனியது சுகம்…
இதை பெறுவதில் பல வித ரகம்…
இந்த அனுபவம் தனி ஒரு விதம்…
மலரும் வளரும் பல நாள் தொடரும்…

ஆண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…

ஆண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…

BGM

பெண் : பாலில் விழும் பழம் எனும்…
போதை பெறும் இளம் மனம்…
பாலில் விழும் பழம் எனும்…
போதை பெறும் இளம் மனம்…
அள்ளத்தான் அள்ளிக்கொள்ளத்தான்…

ஆண் : காதல் நிலா முகம் முகம்…
கண்ணில் உலா வரும் வரும்…
காதல் நிலா முகம் முகம்…
கண்ணில் உலா வரும் வரும்…

ஆண் : காதல் நிலா முகம் முகம்…
கண்ணில் உலா வரும் வரும்…
மெல்லத்தான் நெஞ்சை கிள்ளத்தான்…

பெண் : கொடியிடை விளைவது கனி…
இந்த கனியிடை விளைவது சுவை…

பெண் : அந்த சுவை பெற நமக்கென்ன குறை…
நெருக்கம் கொடுக்கும் நிலைதான் மயக்கம்…

ஆண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…

ஆண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…

BGM

ஆண் : பாவை உனை நினைக்கையில்…
பாடல் பெறும் கவிக்குயில்…
பக்கம் வா இன்னும் பக்கம் வா…

பெண் : கோவை இதழ் இதோ இதோ…
கொஞ்சும் கிளி அதோ அதோ…
கோவை இதழ் இதோ இதோ…
கொஞ்சும் கிளி அதோ அதோ…

பெண் : இன்னும் நான் சொல்ல…
இன்னும் நான் சொல்ல வெட்கம் தான்…

ஆண் : மழை தரும் முகிலென குழல்…
நல்ல இசை தரும் குழலென குரல்…

ஆண் : உயிர் சிலையென உலவிடும் உடல்…
நினைத்தேன் அணைத்தேன்…
மலர்போல் பறித்தேன்…

பெண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…

பெண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…


Notes : Azhagiya Thamizh Magal Song Lyrics in Tamil. This Song from Rickshawkaran (1971). Song Lyrics penned by Vaali. அழகிய தமிழ் மகள் பாடல் வரிகள்.