கடலோரம் வாங்கிய காத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்ரிக்‌ஷாக்காரன்

Kadalooram Vaangiya Kaatru Song Lyrics in Tamil


ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…

BGM

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…

BGM

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…
கதகதப்பா மாறிடுமோ…
காதலித்தால் ஆறிடுமோ…

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…

BGM

ஆண் : சிறு மணல் வீட்டில் குடி ஏறும் நண்டானது…
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது…

BGM

ஆண் : சிறு மணல் வீட்டில் குடி ஏறும் நண்டானது…
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது…
பொங்கும் நுரையோடு கரை ஏறும் அலையானது…
இந்த பெண் பார்த்து நிலவென்று விளையாடுது…

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…

BGM

ஆண் : வண்ண பூ சேலை மலர் மேனி மறைக்கின்றது…
அதை பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது…

BGM

ஆண் : வண்ண பூ சேலை மலர் மேனி மறைக்கின்றது…
அதை பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது…
இடம் கொடுக்காமல் தளிர் கைகள் தடுக்கின்றது…
வெட்கம் தாளாமல் இளம் நெஞ்சம் துடிக்கின்றது…

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…

BGM

ஆண் : கோயில் சிலை ஒன்று…
உயிர் கொண்டு நடை போட்டதோ…
இரு விழி கொண்டு என்னை பார்த்து…
எடை போட்டதோ…

ஆண் : ஒரு துணை வந்து விலை கொள்ள…
தடை போட்டதோ…
அதை நான் வாங்க அவள் நாணம்…
தடை போட்டதோ…

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…
கதகதப்பா மாறிடுமோ…
காதலித்தால் ஆறிடுமோ…

ஆண் : கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…


Notes : Kadalooram Vaangiya Kaatru Song Lyrics in Tamil. This Song from Rickshawkaran (1971). Song Lyrics penned by Vaali. கடலோரம் வாங்கிய காத்து பாடல் வரிகள்.


Scroll to Top