அய்யாதுரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பி.பலராம் & ராகவேந்தர்பரத்வாஜ்ஐயா

Ayyathorai Song Lyrics in Tamil


ஆண் : அய்யாதுரை அய்யாதுரை…
நீ பல்லாண்டு வாழ்க அய்யாதுரை…
கண்ணத்தொர கண்ணத்தொர…
உன் பார்வை பட்டு பூத்திர…

பெண் : கோவில் குளம் கண்டதில்லை…
இப்படி ஓர் சாமி…
புண்ணியம் தான் செஞ்சிருக்கு…
தென்காசி பூமி…

பெண் : கோவில் குளம் கண்டதில்லை…
இப்படி ஓர் சாமி…
புண்ணியம் தான் செஞ்சிருக்கு…
தென்காசி பூமி…

ஆண் : வானம் தேஞ்சு…
போச்சு பூமி காஞ்சு…
போச்சு ஏழை எங்கள ஏமாத்தி…

ஆண் : கிழக்கு இருட்டி போச்சு…
மேக்க மறைஞ்சு போச்சு…
காலம் எங்கள ஏமாத்தி…

ஆண் : மண்ணோடு மக்களையும் தத்தெடுத்த ராசா…
இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா…

ஆண் : அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…

BGM

ஆண் : ஊருக்குள்ள ஆறு வந்து…
ஏறு பூட்டதான் சொல்லுதய்யா…
தெருக்குள்ள சாமி வந்து…
காப்பு கட்டத்தான் கேக்குதய்யா…

ஆண் : நெல்ல வெதைச்சு பார்த்தா…
இப்போ சோறு விளையுது ஆத்தா…
புல்ல வெதைச்சு பார்த்தா…
இப்போ எள்ளு விளையுது ஆத்தா…

பெண் : கண்ணுக்கெட்டும் தூரம் பஞ்சம் ஏதும் இல்ல…
நெஞ்சுக்கெட்டும் தூரம் துன்பம் ஏதும் இல்ல…

ஆண் : அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…

BGM

பெண் : பாறை கல்லும் பாதம் பட்டு…
பச்ச நீளம் ஆனதே…
பட்டினியும் தூரமாக ஓடி போனதே…

பெண் : தூர பட்டு பட்ட போல…
எங்கள் நெஞ்சு ஆனதே…
தொண்டை குழி தாகம் தீர்ந்து ஈரம் ஆனதே…

BGM

ஆண் : பூமியிலும் களவு வரும்…
உங்கள் நட்புல பழுதில்லையே…
பசும் பாலும் கர வடியும்…
உங்க உறவில குறை இல்லையே…

ஆண் : வெள்ள வேட்டி கட்ட…
நல்ல வெள்ள உள்ளம் வேணும்…
உங்க முகத்த கண்டா…
எங்க தாய போல தோணும்…

பெண் : நல்லதையும் செய்ய கைய நீட்டும் சாமி…
உள்ளதையே சொல்ல வாய் திறக்கும் சாமி…

ஆண் : அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…

பெண் : அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…


Notes : Ayyathorai Song Lyrics in Tamil. This Song from Ayya (2004). Song Lyrics penned by Na. Muthukumar. அய்யாதுரை பாடல் வரிகள்.


Scroll to Top