முந்தி முந்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாமலேசியா வாசுதேவன் & அனுராதா ஸ்ரீராம்தேவாஎன் ஆச ராசாவே

Munthi Munthi Song Lyrics in Tamil


ஆண் : முந்தி முந்தி விநாயகனே… ஏஏ… ஏஏ…ஏ…
முப்பத்து முக்கோடி தேவர்களே… ஏஏ… ஏஏ…ஏ…
புள்ளையார் பட்டியில் வசிக்கும் விநாயகா…
உடன்குடியில் வாழ்ந்து வரும் எங்க முத்தாலம்மா…
பாட்டெடுத்து தரும் எங்க பச்சையம்மா…
வேண்டும் வரத்தக் கொடு என் தாயே வெக்காளியம்மா…
அடி உன்ன எண்ணிப் பாமரன் நான் ஆட்டம் ஆட வந்தேன்…

BGM

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்…
பார்வதியப் பாக்கனும்…

BGM

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்…
பார்வதியப் பாக்கனும்…

பெண் : நாக்கு செவக்கப் போடனும்…
நாளும் கெழமை பாக்கனும்…

ஆண் : ஏன்டி புள்ள ஒனக்குச் சம்மதமா…
என் கூட வந்து சேந்துக்கிட்டா ஊரு ஒத்துக்குமா…

பெண் : மாமனுக்கு ஆசை முத்திருமா…
நாம வாக்கப் பட்டு சேரும் முன்னே வேகம் வந்திருமா…

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்…
பார்வதியப் பாக்கனும்…

பெண் : நாக்கு செவக்கப் போடனும்…
நாளும் கெழம பாக்கனும்…

BGM

ஆண் : ஏஏஏ… எந்த கூட்டமும் பணிஞ்சு…
என்னோட ஆட்டத்தில் மயங்கும்…

BGM

பெண் : எங்கக் கோட்டைக்கு ராசாவின் கதையும்…
பாட்டுல அடங்கும்…

BGM

ஆண் : ஏழு ஊரு அட ஏழு ஊரு…

பெண் : நான் ஏழு ஊரு தண்ணி குடிச்சவங்க…
என்ன எதுத்து நிக்க ஆளு இல்லீங்க…

ஆண் : நான் நூறு சபைய பாத்து வந்தவன்டீ…
என்ன அடக்கி வைக்க ஆரும் இல்லையடி…

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்…
பார்வதியப் பாக்கனும்…

பெண் : நாக்கு செவக்கப் போடனும்…
நாளும் கெழமை பாக்கனும்…

BGM

பெண் : இந்தப் பூங்குயிலு ராகத்துல…
வரும் தேன் போலப் பாட்டு…

BGM

ஆண் : அதத்தான் நெனச்சு கூடவே வருவேன்…
நீ கருணை காட்டு…

BGM

பெண் : பேச்சியம்மா அடி பேச்சியம்மா…
பேச்சியம்மா மனசு வச்சாளே…
என்னப் பாடச் சொல்லி வரம் கொடுத்தாளே…

ஆண் : ஊர் உலகம் பேச வச்சாளே…
உசுர் உள்ள வர ஆட வச்சாளே…

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்…
பார்வதியப் பாக்கனும்…

பெண் : நாக்கு செவக்கப் போடனும்…
நாளும் கெழமை பாக்கனும்…

ஆண் : ஏன்டி புள்ள ஒனக்குச் சம்மதமா…
என் கூட வந்து சேந்துக்கிட்டா ஊரு ஒத்துக்குமா…

பெண் : மாமனுக்கு ஆசை முத்திருமா…
நாம வாக்கப் பட்டு சேரும் முன்னே வேகம் வந்திருமா…

BGM


Notes : Munthi Munthi Song Lyrics in Tamil. This Song from En Aasai Rasave (1998). Song Lyrics penned by Kasthuri Raja. முந்தி முந்தி பாடல் வரிகள்.


Scroll to Top